புதிய பிரைவசி பாலிசியை மாற்றிய கூகுள்.சர்ச் முடிவில் இருந்து தனிப்பட்ட டேட்டாவை அகற்ற முடியும்

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அதன் தனியுரிமைக் கொள்கையில் திருத்தம் செய்துள்ளது, இது இப்போது பயனர்கள் தங்கள் தனிப்பட்ட டேட்டாவை சர்ச் முடிவுகளிலிருந்து நீக்குவதற்கான விருப்பத்தை வழங்கும்.

புதிய கூகுள் பிரைவசி பாலிசி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து அவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. PII போன்ற வழிமுறைகளை பின்பற்றி தனிப்பட்ட தகவல்களை திருடுவது, கண்காணிப்பது மற்றும் பணத்தை அபகரிப்பது போன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்த முடியும்.

முன்னதாக பயனர்கள் கூகுள் நிறுவனத்திடம் தங்களின் தகவல்களை நீக்கக் கோரும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும், இது முகவரி நம்பர், வங்கி விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் மருத்துவ குறிப்புகளோடு நிறுத்தப்பட்டு விட்டன. கூகுள் பிளே ஸ்டோரிலும் பாதுகாப்பு செக்ஷனை கூகுள் உருவாக்கி இருக்கிறது.

கூகுள் மேற்கொண்டு இருக்கும் புதிய நடவடிக்கை தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சார்ந்த பிரச்சினைகளை பெருமளவு தவிர்க்க வழி செய்யும். முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், மொபைல் நம்பர்கள் மட்டுமின்றி லாக் இன் விவரங்களையும் பாதுகாக்க முடியும். பயனர்கள் தங்களின் PII அடங்கிய இணைய முகவரிகளை நீக்கும் வழிமுறைகளை கூகுள் சப்போர்ட் வலைப்பக்கத்திற்கு சென்று மேற்கொள்ள முடியும்

%d bloggers like this: