ஒருவரின் ஆதார் அட்டையில் விவரங்களை.. எத்தனை முறை மாற்றம் செய்யலாம்?.. இதோ முழு விவரம்..!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பதே மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அவ்வாறு முக்கியமான ஆதார் அட்டையில் நாம் அவ்வப்போது சில மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்.

நம்முடைய ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் டெமோகிராபிக் தகவல் மற்றும் பயோமெட்ரிக் தகவல் என்று இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலில் உள்ள

டெமோகிராபிக் தகவலில் நமது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், ஈமெயில் முகவரி மற்றும் உறவுமுறை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும்.

அடுத்ததாக உள்ள பயோ-மெட்ரிக் தகவல்களை ஐரிஸ்,விரல்ரேகை பதிவு மற்றும் முக அடையாள போட்டோ உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும். ஆதாரில் இடம்பெற்றுள்ள தகவல்களும் நம்மிடம் உள்ள இதர ஆவணங்களில் உள்ள தகவல்களும் மாறுபட்டு இருந்தால் பல்வேறு சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே தவறுகளை திருத்தி தகவல்களை சரியானதாக வைத்துக் கொள்வது நல்லது.

எத்தனை முறை ஆதார் விவரங்களை திருத்த முடியும்?

பெயர் மாற்றம்:
உங்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயரை இரண்டு முறை மாற்றம் செய்யலாம். அதுவும் சிறிய அளவிலான திருத்தங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

பாலின மாற்றம்:
நீங்கள் எந்த பால் இனத்தை சேர்ந்தவர் என்ற விவரத்தை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.

பிறந்த தேதி மாற்றம்:
உங்களின் பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய இயலும்

முகவரி மாற்றம்:
உங்களுடைய முகவரியை மாற்றுவதற்கு எந்த வரைமுறையும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் உங்கள் முகவரியை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்:
உங்களின் ஆதார் தகவல்களை ஆன்லைன் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். இருந்தாலும் அதனை செய்வதற்கு உங்களிடம் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயம் இருக்க வேண்டும். அதேசமயம் ஆதார் அட்டை எடுக்கும் போது அல்லது இறுதியாக நீங்கள் அப்டேட் செய்தபோது எந்த மொபைல் எண் இருந்தது என்ற விவரத்தை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

%d bloggers like this: