வியர்வையால் உடல் துர்நாற்ற பிரச்சனையா: எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ

கோடைக்கால தோல் பராமரிப்பு குறிப்புகள்: கோடை காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, உடலில் இருந்து வியர்வை வெளியேறுகிறது என்று சொல்லப்படுகிறது. இதனால்

உடல் வெப்பநிலை குறைகிறது. ஆனால், வியர்வையால் உடலில் ஈரப்பதம் வரும். இந்த ஈரப்பதத்தில் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கின்றன. பாக்டீரியாவால், உடல் துர்நாற்றம் ஏற்பட ஆரம்பிக்கிறது.

கோடையில் வியர்வையால் துர்நாற்ற பிரச்சனைகள் ஏற்படுபவர்கள் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் நிவாரணம் பெறலாம். அவற்றப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1. உருளைக்கிழங்கின் உதவியுடன் துர்நாற்றத்தை அகற்றலாம்

உருளைக்கிழங்கு உடலின் இயற்கையான சுத்தப்படுத்தியாக கருதப்படுகிறது. இது சருமத்தில் உள்ள அனைத்து அழுக்குகளையும் நீக்குகிறது. இது உடல் துர்நாற்றத்தை போக்குகிறது. ஒவ்வொரு நாளும் குளிக்கும் போது, அதிகமாக வியர்க்கும் உடலின் பாகங்களில் பச்சை உருளைக்கிழங்கு துண்டுகளை தேய்க்கலாம்.

இதனால் வியர்வை மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். இது தவிர புதினா இலை மற்றும் படிகாரம் ஆகியவற்றை குளிக்கும் நீரில் சேர்த்து குளிக்கலாம். இதைச் செய்வதால் உடல் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

2. எலுமிச்சையின் உதவியுடன் துர்நாற்றத்தை அகற்றலாம்

எலுமிச்சை சாறு உடல் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது. இதனுடன், வியர்வை பிரச்சனையை நீக்கவும் இது உதவுகிறது. தினமும் குளிப்பதற்கு முன், தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து குளிக்கவும். இதனால் வியர்வை மற்றும் துர்நாற்றம் பிரச்சனை நீங்கும்.

3. ஐஸ் உதவியுடன் துர்நாற்றத்தை அகற்றலாம்

பனிக்கட்டியின் உதவியுடன், வியர்வை மற்றும் துர்நாற்றம் ஆகியவற்றின் பிரச்சனையை நீக்கலாம். உங்களுக்கு அதிக வியர்வை பிரச்சனை இருந்தால், முதலில் நீங்கள் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து, உடலில் அதிகமாக வியர்க்கும் பகுதிகளில் தேய்க்கவும். உங்கள் வியர்வை மற்றும் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

4. வெள்ளரிக்காய் உதவியுடன் துர்நாற்றத்தை அகற்றலாம்

வெள்ளரிக்காயில் உள்ள குணங்கள் வியர்வை பிரச்சனையை நீக்குகின்றன. கோடையில் குளித்த பின் குளிர்ந்த வெள்ளரிக்காயை வியர்வை உள்ள இடங்களில் தேய்க்கவும். இதன் மூலம் வியர்வை பிரச்சனை நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.

5. பிரிஞ்சி இலைகளின் உதவியுடன் துர்நாற்றத்தை அகற்றவும்

கோடையில் உங்களுக்கு அதிக வியர்வை ஏற்பட்டால், அதை அகற்ற பிரிஞ்சி இலைகளை காய வைத்து அரைக்கவும். குளித்த பிறகு, அதை உடலில் தேய்த்துக்கொள்ளவும். இதனால் வியர்வை குறைவதுடன் துர்நாற்றம் பிரச்சனையும் நீங்கும்.

%d bloggers like this: