பிஸினஸ் தொடங்குகிறீர்களா?…. உங்களுக்கு என்ன திறமைகள் தேவை… தெளிவான விளக்கங்கள்…!

business தொடங்குவதற்கு எந்த மாதிரியான திறமைகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

ஒரு Entrepreneur-க்கான முதல் முக்கியமான திறமை Sales and Marketing தான். நாம் அதிக உழைப்பை போட்டு ஒரு பொருளை தயாரிக்கலாம். ஆனால், அதனை Market செய்யவில்லை எனில், அந்த பொருள் யாரிடமும் சென்றடையாது. எனவே, Sales and Marketing திறமை மிகவும் அவசியமானது.

அடுத்ததாக, Branding and Advertisement திறமை. நாம் ஒரு பொருளை தயாரித்து market செய்கிறோம். அதன் பிறகு, அந்த தொழிலில் முன்னேற்றம் காண வேண்டும் எனில், advertisement செய்வதும், branding-ம் மிகவும் அவசியம்.

அடுத்ததாக, time management (கால நிர்வாகம்) எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், அதில் மிக முக்கியமானது நேரத்தை நாம் எப்படி செலவிடுகிறோம் என்பது தான்.

நாம் முடிக்க நினைத்த செயல்களை சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். அதற்கு Time Management மிகவும் அவசியமாகிறது.

அடுத்தது, Money Management (பண நிர்வாகம்), இது மிக மிக முக்கியமானது. எந்த ஒரு தொழிலும் அதிக கவனத்துடன் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு தகுந்தவாறு தான் தொழில் வளரும். எனவே, பணத்தை சரியாக நிர்வாகம் செய்ய தவறினால், எந்த ஒரு தொழிலும் முன்னேற்றம் காண முடியாது.

Organization Management, நாம் தொழிலின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் எனில், இந்த திறமை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கிறோம் எனில், Organization Management மிக அவசியமானது.

அடுத்ததாக, Stress management, இது தொழில் செய்பவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் தேவையான ஒன்று. ஆனால், ஒரு Entrepreneur-க்கு அது மிகவும் அவசியமாகிறது. business என்றாலே அதில் அதிகமான stress இருக்கும். அதை நாம் கையாளுவதை பொறுத்து தான், நம் தொழில் முன்னேற்றம் அடையும்.

communication skill, ஒரு Entrepreneur-க்கு பேச்சுத்திறமை நன்றாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களை புரிந்துகொள்ளும் திறன் மிகவும் முக்கியம். நாம் சொல்ல நினைப்பதை தெளிவாகவும், நம்பிக்கையாகவும் தெரிவிக்க வேண்டும். self confidence, இங்கு முக்கியமாகிறது.

இறுதியாக, Body Language (உடல் மொழி) நாம் business-ஐ நமக்குள் வைத்து கொள்ளப்போவதில்லை. மற்றவர்களிடம் தான் அதனை கொண்டு சேர்க்கிறோம். எனவே, பிறரை ஈர்க்கும் வகையில் நடந்துகொள்வதும் அவசியமாகிறது. அதுவும், ஒரு வகையில் business-ஐ அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

இந்த திறமைகளை நாம் வளர்த்துக்கொள்வதன் மூலம், தொழில் முன்னேற்றம் காணலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: