ஆடா தோடைக்குள் அடங்கியிருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்

நம் முன்னோர்கள் மனிதனுக்கு வரும் வியாதிகளை கண்டறிந்து ,அதற்கான மூலிகைகளையும் கண்டு பிடித்து அதை பற்றி நம்மக்கு கூறிவிட்டு சென்றுள்ளனர் .ஆனால் ஆங்கில வைத்தியத்துக்கு அடிமையானதால் அதை இந்த சமூகம் கண்டு

கொள்ளவேயில்லை .முன்னோர்கள் சொன்ன மூலிகைகளால் முக்கியமானது ஆடா தொடையாகும்

மூலிகைகளில் மிக முக்கியமானது ஆடா தோடை. ஆடாதொடையின் முக்கிய செயல் சளியை வெளியே கொண்டுவருவதாகும். பலருக்கு தொண்டையில் சளி கட்டி கொண்டு .இருமல் முதல் மூச்சிரைப்பு வரை வந்து கொண்டேயிருக்கும் .இந்த பிரச்சினை சரியாக இதன் இலையை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வர தொண்டை சளி சரியாகி உடல் எப்பொழுதும் வலுவாக இருக்கும்.

பலருக்கு வயிற்றில் பூச்சி இருந்து கொண்டு பசிக்காமலும் ,உடல் சோர்வும் காணப்படும் .இந்த வயிற்று பூச்சிகளை போக்கும் தன்மை கொண்டது இது. கபகொல்லி, சளிக்கொல்லி போன்ற பெயர்களும் இதற்க்கு உண்டு .சிலருக்கு காய்ச்சல் வந்து பாடாய் படுத்தி கொண்டேயிருக்கும் .இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்க்கு உண்டு

%d bloggers like this: