Author Archive: Senthil

புதிய பாதை… புதிய கூட்டணியை நோக்கி தேமுதிக… தே.ஜ.கூ.வில் தக்கவைக்க போராடும் பாஜக

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக புதிய பாதை, புதிய கூட்டணியை நோக்கி புது பயணத்தை தொடங்கியுள்ளது தேமுதிக.

கடந்த மக்களவைத் தேர்தலில் அரை மனதுடன் அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு அங்கு உரிய மரியாதை இல்லை என்பது அக்கட்சி நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.

இதனால் இனியும் இப்படியே தொடர்ந்தால் நிர்வாகிகளின் அதிருப்திக்கு ஆளாக கூடும் என்பதால், புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை சத்தமின்றி தொடங்கியுள்ளது தேமுதிக.

Read More

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (கன்னி – உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்)

தியாக உணர்வும், திடசிந்தனையும் உள்ளவர் நீங்கள். இந்த ராகு – கேது மாற்றத்தில், ராகுவால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், கேதுவால் வீடு-மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு 10 வது வீட்டில் அமர்ந்துகொண்டு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச் சுமையையும், உத்தியோகத்தில் இடமாற்றங்களையும், சிறுசிறு அவமானங்களையும் தந்த ராகுபகவான், இப்போது 9-ம் வீட்டில் வந்தமர்கிறார். செயற்கரிய காரியங்களையும் இனி முடித்துக் காட்டுவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். Read More

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (சிம்மம் – மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

நிர்வாகத் திறமையும், அதிரடித் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றும் வல்லமையும், உதவும் குணமும், எதிரிக்கும் நல்லது செய்யும் மனோபாவமும் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு இந்த ராகு – கேது மாற்றம், ஓய்வெடுக்க முடியாத அளவுக்குப் பரபரப்பையும் அதிக நேரம் உழைக்க வேண்டிய நிலையையும் தருவதாக அமைந்தாலும் அந்தஸ்தை உயர்த்துவதாகவும் இருக்கும்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு 11 – ம் வீட்டில் அமர்ந்து வாழ்வில் ஓரளவு வசதி வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும், புதிய தொடர்புகளையும் கொடுத்து வந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் வந்தமருகிறார். கடினமான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். Read More

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (கடகம் – புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

முன் வைத்த காலைப் பின் வைக்காத நீங்கள், சொன்ன சொல் தவறமாட்டீர்கள். மனத்துக்குப் பிடித்துவிட்டால் கணக்குவழக்கு பார்க்காமல் வாரி வழங்குவீர்கள். உங்களுக்கு இந்த ராகுப் பெயர்ச்சி, திடீர் யோகங்களைத் தருவதாகவும், கேது மாற்றம் அவ்வப்போது மனஇறுக்கத்தைத் தருவதாகவும் அமையும்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு 12-ல் அமர்ந்து கொண்டு அலைக்கழிப்புகளையும், செலவு களையும், தூக்கமின்மையையும், எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்திய ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவ தால், உங்களின் செல்வம் – செல்வாக்கு கூடும். Read More

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (-மிதுனம் – மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்)

சிந்தனையாற்றலும், பகுத்தறிவுத்திறனும் கொண்ட உங்களை, இந்த ராகு கேது மாற்றம் புகழின் உச்சிக்குக் கொண்டு வருவதுடன் அனைத்து வளங்களையும் அள்ளித் தருவதாக அமையும்.

ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்து உங்களைப் பல விதமான பிரச்னைகளில் சிக்க வைத்தார் ராகு பகவான். யோசிக்கவிடாமல் ஒரு பதற்றத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தினார்.

இப்போது ராசிக்கு 12-ம் வீட்டிற்கு வந்தமர்வதால், பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்த விடுபடுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். ஏமாற்றங்கள், தர்ம சங்கடமான சூழல்களிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் முகம் இனி மலரும். Read More

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (-ரிஷபம் – கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்

கொள்கையை விட்டுக்கொடுக்காத உங்களுக்கு, இந்த ராகு கேதுப் பெயர்ச்சி, நிம்மதியையும் மன மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை வீண் சச்சரவுகளையும் செலவு களையும் ஏற்படுத்திய ராகு, இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் இனி பக்குவமாகவும், இதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். வீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பணவரவு சரளமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். Read More

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (- மேஷம் – அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம்

புதுமையாக சிந்திக்கும் உங்களுக்கு இந்த ராகு கேதுப் பெயர்ச்சி, சுற்றுச் சூழலுக்குத் தகுந்தாற் போல் நடந்துகொள்ளும் மனப் பக்குவத்தையும் தருவதாக அமையும்.

ராகுவின் பலன்கள்

ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் வந்து அமர்கிறார். பணவரவு திருப்திகரமாக இருக்கும்; என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் அடுத்தடுத்து வரும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. எல்லா வேலைகளையும் முன்னெச்சரிக்கையுடன் செய்ய பாருங்கள்.  Read More

பண்ணை வீட்டில் ரகசிய சந்திப்பு…

சேலத்தில் ஒரு சந்திப்பு நடந்திருக்கிறதே…’’ – தலையைச் சிலுப்பிக்கொண்டே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “யாரைச் சொல்கிறீர்?’’ கேள்வியுடன் கோதுமை அடையை நீட்டினோம். தேங்காய் சட்னியுடன் சுவைத்து மகிழ்ந்தவர், “வட மாவட்ட முக்கியப் பிரமுகர் ஒருவர் 300 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரி ஒன்றைக் கட்டிவருகிறார். அதற்கு அனுமதி பெறுவது தொடர்பாக சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்திருக்கிறார். எதிர்முகாமைச் சேர்ந்தவர் என்றாலும், அவரிடம் கரிசனமாகவே பேசி அனுப்பியிருக்கிறார் முதல்வர்’’என்றபடி செய்திக்குள் தாவினார்.  Read More

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்.. எடப்பாடியாருக்கு அல்வா கொடுத்த அமைச்சர்கள்..! பரபரப்பு பின்னணி..!

பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியை தொடர்ந்து அமைச்சர்கள் அனைவருமே தன்னை முதலமைச்சர் வேட்பாளர்களாக முன்மொழிவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.

Continue reading →

கூட்டணி பேரத்தை ஆரம்பித்த தமிழக காங்கிரஸ்… திமுக- அதிமுகவுக்கு செக் வைக்கும் கே.எஸ்.அழகிரி..!

சுதந்திர தினம் மற்றும் காந்தியின் 150 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக்கம்பத்தில், 40/30 அடி பிரம்மாண்ட கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Continue reading →