Advertisements

Author Archive: vayal

இளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்!

யதுக்கும் உடல்சார்ந்த பிரச்னைகளுக்கும் தொடர்பிருப்பது உண்மைதான். ஆனால், எல்லா நேரத்திலும் அப்படியிருக்காது. சில பிரச்னைகளுக்கு, நீண்டகாலமாக நாம் கடைப்பிடித்துவரும் சில பழக்கங்களும் காரணமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பிரச்னைதான்  கழுத்துவலி. 

கழுத்தின் மூட்டுப் பகுதி மற்றும் பின்முதுகுவரை பாதிக்கும் `செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் (Cervical Spondylosis) பிரச்னை, வயது வித்தியாசமின்றி யாருக்கு

Continue reading →

Advertisements

காரம், சூடு வேண்டாமே!

காரமான உணவுகளிலிருக்கும் `கேப்சாய்சின்’ (Capsaicin) என்ற மூலக்கூறு, வயிறு, குடல், மூச்சுக்குழாய், வாய் போன்ற பகுதிகளில் உபாதைகளை ஏற்படுத்தும். தவிர, அந்தப் பகுதிகளில் வெப்பத்தை அதிகரித்து, எரிச்சலை ஏற்படுத்தும். இது தொடக்கநிலைதான். தொடர்ந்து இதேபோல் சாப்பிட்டுவந்தால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். ஏற்கெனவே, நெஞ்செரிச்சல் அல்லது அல்சர் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, பாதிப்புகள் தீவிரமடையலாம். 

Continue reading →

சுக்ர யோகம்… லக்ன பலன்கள்!

ருவரின் ஜாதகம் என்பது அவர் ராஜாவா, பிரஜையா, செல்வந்தரா, வறுமையில் வாடுபவரா என்றெல்லாம் வகைப்படுத்திச் சொல்லக்கூடியது.  மனிதன் பிறக்கும்போது இருக்கும் கிரக நிலைகளைக் கொண்டு, அவனுடைய வாழ்க்கைப் பாதையைத் தீர்மானமாகக் கணிக்கக்கூடிய சாதனம்

ஜாதகம்.ஒருவர் ராஜாவாகப் பிறக்கலாம். ஆனால், கடைசி வரை அவர் ராஜாவாக வாழவேண்டுமே. அதுமட்டுமல்ல, ராஜா என்ற நிலையிலிருந்து சக்கரவர்த்தியாக மாறுவதோ அல்லது, ராஜா என்ற அந்தஸ்திலிருந்து கீழே இறங்குவதோ எதுவானாலும், அவரது வாழ்க்கைக் காலத்தில் அவருக்கு வரக்கூடிய தசாபுக்திகள்தான் முடிவு செய்யும். ஜாதகத்தைவிட தசாபுக்திகள்தான் பலமாக வேலை செய்யும். ஜாதகம் என்பது பிறவி; தசாபுக்தி என்பது சந்தர்ப்பம். பிறவியைவிடச் சந்தர்ப்பம்தான் முக்கியம்.

ஒரு ராஜா வயிற்று வலியினால் எதையும் சாப்பிட முடியாமல் அவதிப்படலாம். ஒரு பிச்சைக்காரன் வயிறாரச் சாப்பிட்டு ஆனந்தமாக இருக்கலாம். அவன் ஆனந்தமாக இருப்பதால், அவன் ராஜாவாகிவிடமுடியாது; இவர் ராஜாவாக இருப்பதால் எல்லாவற்றிலும் சந்தோஷமாக இருக்கிறார் என்று சொல்லிவிட முடியாது. ஜோதிட நூல்கள் `தசை’ என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்… ‘அவனுக்கென்ன சுக்கிர தசை, யோகம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது’ என்பார்கள். ஆனால், சுக்கிர தசை எல்லோருக்கும் நல்லது செய்யுமா?

இதையெல்லாம் துல்லியமாக ஆராயவேண்டும் எனில், ஆதிபத்தியம், ஸ்தான பலம் ஆகியவற்றையும் கவனித்து ஆராய்வது அவசியம். அதாவது, தசையை நடத்தும் கிரகம் எந்த வீட்டில் உள்ளது என்பதை அறிவது மிகவும் முக்கியம். பெரிய பலசாலியாக இருந்தாலும் அவன் சிறையில் இருந்தால் என்ன பலன்? அதே பலசாலி மைதானத்தில் இருந்தால் வெற்றி வீரனாக வலம் வருவான் அல்லவா? அதேபோன்றுதான் கிரகங்கள் உரிய இடத்தில் இருக்கும்போது உரிய பலன்களைக் கொடுக்கும். எனவே தசா புக்தி, ஆதிபத்தியம், ஸ்தான பலம் ஆகிய மூன்றையும் வைத்துத்தான் பலன் சொல்ல வேண்டும். எந்த லக்னக்காரர்களுக்கு எந்த தசை யோகம் தரும் என்பதையும் இங்குப் பார்க்க வேண்டும்.

அவ்வகையில் சுக்ரயோகம் எந்தெந்த லக்னக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை அளிக்கும் என்பதைப் பார்ப்போம் (ஜாதகக் கட்டத்தில் உங்களின் லக்னம் `ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். எந்த ராசியில் `ல’ எனக் குறிப்பிடப் பட்டுள்ளதோ, அந்த ராசியே உங்களின் லக்னம் ஆகும்).

 

மேஷம்: இந்த லக்னக்காரர்களுக்கு 2 மற்றும் 7-ம் இடத்துக்கு உரியவராகச் சுக்கிரன் இருப்பதால், சுக்கிரதசை இவர்களுக்குச் சுபமான பலன்களைத் தரும். செல்வந்தனாகவும், அழகான மனைவியும், நல்ல குழந்தைகளும் பெற்றவர்களாக இருப்பார்கள்.

ரிஷபம்: இந்த லக்னக்காரர்களுக்கு லக்னாதிபதி யாகவும் ஆறாமிடத்துக்கு உரியவராகவும் இருப்பதால், எல்லா சுகங்களையும் ஐஸ்வர்யங்களையும் கொடுப்பார். ஆனால் ஆறுக்குடையவராக இருப்பதால் கடன், நோய், பகை போன்றவற்றைத் தந்து, அவற்றை அனுபவிப்பதில் ஈடுபாடற்ற தன்மையைக் கொடுத்துவிடுவார்.

மிதுனம்: இவர்களுக்குச் சுக்கிரன் ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கும் பன்னிரண்டாமிடத்துக்கும் உரியவராகிறார். இவர்களுக்குப் பஞ்சமாதிபதியாக (ஐந்துக்குடையவர்) வந்து ராஜரீகமான வாழ்க்கையைத் தருவார். ஆனால், மறைவு ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்துக்கு உரியவராக இருப்பதால், பலன்கள் கிடைத்தாலும் பயனற்றுப் போய்விடும்.

கடகம்: இந்த லக்னக்காரர்களுக்குச் சுக்கிரன் சதுர் லாபாதிபதியாக வருகிறார். அதாவது நான்காம் வீட்டுக்கும் பதினொன்றாம் வீட்டுக்கும் அதிபதியாக வருகிறார். இதனால் இந்த அமைப்பில் உள்ள ஜாதகர்கள், பல இடங்களுக்குச் செல்லக்கூடிய வர்களாகவும், பல வகைகளில் லாபம் ஈட்டக்கூடியவர் களாகவும், அழகு மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

சிம்மம்: இந்த லக்னக்காரர்களுக்கு மூன்றாமிடத்துக்கும், பத்தாமிடத்துக்கும் உரியவராக இருப்பதால், சுக்கிர தசை இவர்களைச் சிறந்த எழுத்தாளராகவும் கலைகளில் மேன்மை பெற்று காவியம் படைப்பவராகவும் உருவாக்கும்.

கன்னி: இந்த லக்னக்காரர்களுக்குச் சுக்கிரதசை வரும்போது, கலைகளில் ஆர்வம் இருக்கும். தன ஸ்தானத்துக்கும் பாக்கிய ஸ்தானத்துக்கும் அதிபதியாகிறார். வரவு – செலவு மிகவும் அதிகமாக இருக்கும். எல்லோரும் இவரைப் புகழ்வார்கள். ஆனால், அதற்கான தகுதி இவர்களுக்குப் பெரிதாக இருக்காது.

துலாம்: இந்த லக்னக்காரர்களுக்கு, சுக்கிரன் லக்னாதிபதியாகவும் அஷ்டமாதிபதியாகவும் இருக்கிறார். அஷ்டம ஸ்தானாதிபதியாக மறைவு ஸ்தானத்தில் வருவதால், வெளிநாட்டுக்கு அனுப்பி சொந்த ஊரில் இருக்க முடியாமல் செய்வது, அல்லது வழக்கு, நீதிமன்றம் என அலைய விட்டுவிடுவது போன்றவற்றைச் செய்வார்.

விருச்சிகம்: இந்த லக்னக்காரர்களுக்கு சப்தமாதிபதியாகவும் விரயாதிபதியாகவும் இருக்கிறார். சப்தமாதிபதியாகி, எடுத்த எல்லா காரியங்களிலும் வெற்றியைத் தருவார். ஆனால், கடைசிக் காலத்தில் எதுவும் கையில் இருக்காது.
 
தனுசு: இந்த லக்னக்காரர்களுக்கு சுக்கிரன் ஆறாமிடத்துக்கும் பதினொன்றாம் இடத்துக்கும் உரியவராக இருக்கிறார். மேலும் தனுசின் லக்னாதிபதி குருவுக்குப் பகை கிரகம் சுக்கிரன். எதிரியினால் என்ன பயன் கிடைத்தாலும், அதனால் பெரிய அளவில் திருப்தி இருக்காது.

மகரம்: இவர்களுக்குச் சுக்கிரனைப் போன்ற யோகக்காரகன் வேறு யாரும் இல்லை. மகர லக்னத்துக்கு ஐந்தாமிடத்துக்கும் பத்தாமிடத்துக்கும் உடையவன், என்பதால் பிரபல யோகம், தர்மகர்மாதிபதியோகம் எனப் பல யோகங்கள் உண்டு.

கும்பம்: இவர்களுக்குச் சுக்கிரன், நான்காமிடத்துக்கும், ஒன்பதாமிடத்துக்கும் உரியவர். சுக்கிர தசையில், இவர்கள் காலில் சக்கரம் கட்டியவர் போல்  ஓடிக்கொண்டிருப்பார்கள். உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பயணிப்பார்கள். ஆனால், சொந்த வாழ்க்கை அத்தனை சுபிட்சமாக இருக்காது.

மீனம்: இவர்களுக்குச் சுக்கிரன் மூன்றாமிடத்துக்கும் எட்டாமிடத்துக்கும் உரியவர். மீன லக்னக்காரர்களுக்கு சுக்கிர தசை, கௌரவர்களுடன் இருந்த கர்ணனைப் போன்றது. பிறந்த இடத்துக்கும் லாபமில்லை; சேர்ந்த இடத்துக்கும் பயனில்லை. எனவே, மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்குச் சுக்கிர தசையால் பலன் இல்லை.

பொதுவில், சுக்கிரதசை என்பது அவரவர் ஜாதகத்தில் வரும் ஆதிபத்தியம், ஸ்தானபலம், கோள்சாரம் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.


லட்சுமிகடாட்சம் நிறையட்டும்!

றையருள் இருந்தால் நவகோள்களும் நன்மையே செய்யும் என்று அறிவுறுத்துவார்கள் பெரியோர்கள். அவ்வகையில், ஜாதகத்தில் சுக்ரனின்  நிலை எப்படியிருந்தாலும், அவரால் விளையக்கூடிய நற்பலன்களை தங்குதடையின்றி பெறுவதற்கு தெய்வ வழிபாடுகள் துணைநிற்கும்.

சுக்ரனுக்கான அதிதேவதையர்- லட்சுமிதேவி, இந்திரன், வருணன் ஆகியோர். இவர்களை வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். குறிப்பாக, செல்வத்தின் அதிபதியாம் மகா லட்சுமியை வழிபடுவதன் மூலமும் சுக்ர பகவானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற முடியும்.

அவ்வகையில் ஸ்ரீசூக்தம், லட்சுமி பஞ்சகம், கனகதாரா ஸ்தோத்திரம் முதலான துதிநூல்களைப் பாராயணம் செய்து, திருமகளை ஆராதிக்கலாம். தமிழில், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய திருமகள் அந்தாதி எனும் நூல் உன்னதமானது. ‘திருமகளே’ எனத் துவங்கி ‘திருமகளே’ என்றே முடியும் அந்த நூலில் 103 பாடல்கள் உண்டு. அவற்றில் கீழ்க்காணும் பாடலைப் பாடி அனுதினமும் அலைமகளை வழிபடுங்கள்; உங்கள் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நீங்காது நிறைந்திருக்கும்.

திருமகளே திருப்பாற்கடல்
ஊடன்று தேவர்தொழ
வருமகளே உலகெல்லாமும்
என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே
உற்று உரம் பெரிது
தருமகளே தமியேன் தலைமீது
நின்தாள் வையே

அ.தி.மு.க.-பா.ஜ.க. சீட்டு மல்லுக்கட்டு!

திகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கிடையே நடைபெறும் சீட்டு மல்லுக் கட்டு… கூட்டணி உறுதி என்கிற இறுதி அறிவிப்பையே தள்ளிவைத் துள்ளது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

எண்ணிக்கை குறைந்தாலும் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிதான் அமையும். காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272-ல் 42 தொகுதிகள் குறைந்து 230 தொகுதிகளில் வெற்றி பெறும். மாயாவதியும் அகிலேஷும் கைகோர்க் கும் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு பழைய வெற்றி கிடைக்காவிட்டாலும் அங்குள்ள 80 தொகுதிகளில் 35 இடங்களை ஜெயிக்கும். அதனால் அடுத்து அமையப் போவது பா.ஜ.க. தலைமை யிலான கூட்டணி அரசுதான். அதில் அ.தி.மு.க. மந்திரிசபையில் இடம்பெறும் என்கிற இந்த “கேரட்டை’ காட்டிதான் தமிழகத் தில் உள்ள கட்சிக் குதிரைகளை பா.ஜ.க. வளைத்து வருகிறது.

Continue reading →

கமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி! இது எப்படி இருக்கு?

திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல் ஹாசனையும்,  அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினிகாந்தையும், வாய்ஸ் கொடுக்க வைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திமுக ,அதிமுகவுக்கு எதிராக   மக்கள் நீதி மையம் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் கமல் ஹாசனுக்கு, நாடாளுமன்றத் தேர்தல் பெரிய சவாலாக மாறியுள்ளது. 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அவர் அறிவித்தாலும், தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Continue reading →

பட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..? குடும்ப தலைவிகளுக்கான டிப்ஸ்…!

கடையில் இருந்து பட்டு சேலையை எடுத்து வரும் வரை நமக்கு பட்டு சேலைதான் என்று எண்ணம் இருக்கும். ஆனால் வீட்டிற்கு வந்ததும் இது பட்டு சேலையாக இருக்காதோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விடும்.
Continue reading →

கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?

இறப்புக்குப் பின்

தீமை செய்தவர்கள் இறப்பிற்கு பின் நரகத்திற்கு செல்வதாகவும், நன்மை செய்தவர்கள் தங்களின் இறப்பிற்கு பின் சொர்க்கத்திற்கு செல்வதாகவும் நம்பப்படுகிறது. ஒரு மனிதன் இறப்பிற்கு பின் எங்கு செல்ல வேண்டும் என்று நிர்ணயிப்பவர் யமதர்மராஜன். இவர் இறப்பின் கடவுள் ஆவார். ஆகவே நல்ல வினைக்கும் தீய வினைக்கும் இடையில் தொடர்ந்து ஒரு போர் நடந்தவண்ணம் உள்ளது. இதில் வெற்றி பெறும் வினை மற்றொன்றை முந்திச் செல்கிறது.

மகாபாரதப் போர்
Continue reading →

அரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா ?

முதலில் கவனிக்க வேண்டியது இதத்தான்…!

போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு நாம் அந்த தேர்விற்கு, அந்த பணியிடத்திற்கு தகுதியானவரா என தெரிந்து கொள்வது முக்கியம். முழுமையான தகுதியை பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதாவது தற்போது நீங்கள் படித்துக் கொண்டிருந்தாலோ, தேர்வு எழுதி ரிசல்ட் வெளிவராமல் இருந்தாலோ அந்த நேரத்தில் நீங்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பது நல்லது.
Continue reading →

அடிக்கடி மரத்துப்போகுதா? அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது… 

தண்டுவட மரப்பு நோய்

மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் இந்த தண்டுவட மரப்பு நோயை மேலோட்டமாக பார்க்கும்போது உணவின் முக்கிய பங்கு இருப்பதாக தெரிவதில்லை. ஆனால் இந்த பாதிப்பு வளர்ச்சியடையும்போது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதும், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பதும் உண்மையில் இந்த பாதிப்பை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவுகிறது என்பதை அறிய முடிகிறது.

புரதங்கள்
Continue reading →

இந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா?

பாவங்கள்

மற்ற பாவங்களை காட்டிலும் துரோகம், விபச்சாரம், சட்டவிரோத செயல்கள் மற்றும் உறவுகளே கொடிய பாவங்களாக கருதப்படுகிறது. இந்த செயல்கள் தர்மத்தின் பார்வையில் மட்டுமின்றி இப்போதுள்ள சமூகத்தின் பார்வையிலும் பாவாமாகவே கருதப்படுகிறது. இந்த பாவங்களுக்கு இவ்வுலக வாழ்க்கை, மறுவுலக வாழ்க்கை இரண்டிலுமே தண்டனைகள் நிச்சயம் கிடைக்கும்.

விபச்சாரம்
Continue reading →