Advertisements

Category Archives: அரசியல் செய்திகள்

நீங்க கவலைப்படாதீங்க… பாத்துக்கலாம்!’ – எடப்பாடி பழனிசாமியைத் தேற்றிய பா.ஜ.க

எடப்பாடி பழனிசாமிக்கு இது வாழ்வா… சாவா பிரச்னை. மக்களவைத் தேர்தலில் எப்படியும் தன் சொந்த ஊரான சேலத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று பணத்தை

Continue reading →

Advertisements

மீண்டும் மிரட்டுவாரா மோடி?

ருத்துக் கணிப்பை பி.ஜே.பி வரவேற்கிறது… அ.தி.மு.க கடுமையாக விமர்சித்திருக்கிறதே?’’ – எதிரில் வந்தமர்ந்த கழுகாரிடம் ஆரம்பித்தோம்.

‘‘ஓ… தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கருத்தையும் பி.ஜே.பி-யின் கருத்தையும் வைத்து நீர் சொல்கிறீர். அதற்கு முன் நடந்த கதையை நான் சொல்லவா?’’

‘‘சொல்லும்.’’

‘‘இறுதிக்கட்டத் தேர்தலுக்கு முந்தைய தினம் மோடியின் கேதார்நாத் விசிட் குறித்த செய்திகள், அனைத்து ஊடகங்களிலும் பிரதானப்படுத்தப்பட்டன. அதற்குப் பின்னால் மிகப் பெரிய ஊடகத் தந்திரம் இருக்கிறது. தேர்தல் தொடங்கியதிலிருந்தே பிரதமருக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதனால், மோடிக்கும் மேலாக இருந்து பி.ஜே.பி-யை லாபி செய்யும் குழுவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இவை எல்லாவற்றையும் மோடி சரிக்கட்டிவிடுவார் என்று அந்தக் குழுவினர் நினைத்தார்கள். ஆனால், அவருடைய உரைகளிலும் ஒன்றுமே இல்லை!’’

‘‘அதற்குத்தான் அமித் ஷாவை வைத்துப் பதிலடி கொடுத்தார்களே?’’

Continue reading →

அதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்

தமிழக லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளைப் பார்த்தால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பை அமமுக பெருமளவில் காலி உணர முடிகிறது,

Continue reading →

தமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள்? – முழுமையான கருத்துக் கணிப்பு

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் எந்த கூட்டணிக்கு அதிகமான இடங்கள்

Continue reading →

நான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன?

திருப்பரங்குன்றம் – ஜொலிக்குது சூரியன்!
தி
ருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வில் முனியாண்டி, தி.மு.க-வில் டாக்டர் சரவணன், அ.ம.மு.க-வில் மகேந்திரன் போட்டியிடுகின்றனர். இங்கே பிரசாரத்தைச் சரியாக முடித்தார்களோ இல்லையோ… பணப் பட்டுவாடாவை கச்சிதமாக முடித்துவிட்டன அரசியல் கட்சிகள். பண விநியோகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பறக்கும் படையினர், திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சாமி கும்பிட வந்தவர்களின் வாகனங்களைச் சோதனை செய்து ஃபிலிம் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாக மே 15-ம் தேதி வில்லாபுரத்தில் பண விநியோகம் செய்த அ.தி.மு.க-வினர் நான்கு பேரை பணத்துடன் பிடித்துக் கைதுசெய்தனர்.

Continue reading →

கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு

ல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது…’ என்று பாடிக்கொண்டே வந்த கழுகாரின் கையில் சில்லென்று மோரைக்கொடுத்து, ‘‘கமல்ஹாசன் விவகாரத்தைத்தான் சொல்லப்போகிறீர் என்பது தெரிகிறது… இதில் தெரியாத ஒரு விஷயம், ‘கமல் பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஏன் இவ்வளவு கொந்தளித்தார்?’ என்பதுதான்!’’ என்றோம்.

Continue reading →

ஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்! – சம்திங் சந்திப்புகள்

காயம் மேலே பாதாளம் கீழே…. ஆனந்த உலகம் நடுவினிலே” என்று பாடிக்கொண்டே உள்ளே நுழைந்த கழுகாரிடம், “செய்தியுடன் வருவீர் என்று பார்த்தால், பாடலுடன் வருகிறீரே” என்று கேட்டதும் ‘‘சொல்கிறேன்!’’ என்று புன்னகையுடன் நம் முன் அமர்ந்தார்.

‘‘ராவ் ரகசியங்கள் என்று கடந்த இதழில் நீர் சொன்னது போலவே சந்திப்பும் நடந்தேறிவிட்டதே?’’

Continue reading →

மலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி?

கடந்த 2014 தேர்தலில் மாநிலக் கட்சிகள் மட்டும் 176 இடங்களில் வெற்றிபெற்றன. அதைவிட இப்போது கூடுதலான இடங்களில் மாநிலக் கட்சிகள் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது.”

மலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி?

ந்தியாவின் திசையைத் தீர்மானிக்கப் போகும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியா… இல்லை ராகுல் காந்தி ஆட்சியா… இவை இரண்டுமில்லாமல் மாற்று அணி ஆட்சியா என்கிற விவாதங்கள் அகில இந்திய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அறுதிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனால், மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது பி.ஜே.பி.

Continue reading →

ஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்!” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்!

ஆட்சி மாற்றம் நடந்தால் அடுத்தடுத்த காட்சிகள் சசிகலாவைச் சுற்றி நடந்தேறப் போகிறது என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.

மே –23 இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்புக்கு விடையாக அமையப்போகிறது. நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், பெங்களூரு சிறையிலும் ஆட்சி மாற்றம் நடக்குமா… நடக்காதா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா. ஆம்! ஆட்சி மாற்றம் நடந்தால் அடுத்தடுத்த காட்சிகள் சசிகலாவைச் சுற்றி நடந்தேறப் போகிறது என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.

Continue reading →

செக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி

செக்யூலரிசம் பேசுகிறவர்கள் சிறுபான்மை சமூகத்தினருக்கு தலைமைப் பதவியை வழங்குவார்களா? என இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி விடுத்தார். காங்கிரஸ் தலைமைப் பதவி, ஒரு இஸ்லாமியருக்கு கிடைப்பதை ராகுல் உறுதி செய்வாரா? என்றும் நேரடியாக கேள்வி விடுத்தார்.

Continue reading →