Advertisements

Category Archives: அறிவியல் செய்திகள்

குடிநீரில் இருந்து புளூரைடுவை நாவல்பழ விதை பொடி நீக்கும்: வாய் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு

குடிநீரில் அதிகப்படியாக உள்ள புளூரைடு உப்பை நீக்க நாவல்பழ விதைப்பொடி பயன்படுகிறது என்பதை இன்ஜினியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Continue reading →

Advertisements

பல கோடி நட்சத்திரங்கள் இருந்தும் விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது?

நிற்கா பூமியின் சுழற்சியால், பகலுக்கு அடுத்த நிறுத்தமாக இரவு தினமும் வந்தே தீரும். ஒரு நாளின் முடிவாகவும், மற்றொரு நாளின் தொடக்கமாகவும் இரண்டு பணிகளைச் செய்யும் இரவு, நமக்குக் காண்பதற்கரிய காட்சிகள் பலவற்றைக் காட்டுகிறது. விண்வெளியில் தோன்றும் இரவு நேர நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்கவே பல நாள்கள் பலர் ஏழு மாடிகள் வரை ஏறிய கதைகள் எல்லாம் உண்டு. தலையைத் தூக்கி வானை ரசித்து விட்டு நம் பணிக்குத் திரும்பி விடுவோம். ஏதேனும் ஒரு சமயத்தில், என்றாவது ஒரு நாள் இந்தக் கேள்வி நிச்சயம் எட்டிப் பார்த்திருக்கும். இந்த இரவு ஏன் இப்படி இருக்கிறது?

Continue reading →

கட்டுப்படுத்த முடியாத வைரஸ்க்கு கடிவாளம்

வைரஸின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய புரதத்தைக் (Protein) கண்டுபிடித்துள்ளார்கள் ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
மனித நோய்கள் பலவற்றை பாக்டீரியாக்களும் வைரஸ்களும்தான் ஏற்படுத்துகின்றன. வைரஸ், பாக்டீரியாவை விட மிகவும் சிறியது. எவ்வளவு சிறியதென்றால் நமக்குத் தெரிந்த மிகமிக நுண்ணிய பாக்டீரியாவின் அளவில்தான் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மிகப் பெரிய வைரஸ் இருக்கும்.

Continue reading →

உயிரியல் கடிகாரம் தவறாக ஓடலாமா?

ணி என்ன?”
“8.10”
“வீட்டுக் கடிகாரத்துல 8 தான் காட்டுது. சரியான நேரம் வைக்கிறதில்லையா?”
ஆபீஸ் கிளம்பும் அப்பா கடிந்துகொண்டார்.
“டிபன் சாப்பிட நேரமில்லை. நான் பார்த்துக்கிறேன்” என்று விருட்டென்று வெளியேறினார்.

வீட்டுக் கடிகாரம் தவறாக ஓடுவதைக் கண்டு கோபம் கொண்டவர், தன் உடலின் கடிகாரம் பாதிப்படைந்ததை உணரவில்லை. ஆம், ஒருவேளை உணவைத் தவிர்ப்பது, அதுவும் காலை உணவைத் தவிர்ப்பது நம் உடலின் அன்றாட நிகழ்வைப் பாதிக்கும் என்று நாம் ஏன் உணர்வதில்லை?

Continue reading →

குறைந்தாலும், கூடினாலும் சிக்கல்: தந்தையாக வேண்டுமென்றால் 7 மணி நேர தூக்கம் வேண்டும்

குழந்ைத பேறு இல்லாமல் போவதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல காரணங்கள் உள்ளன. இதனால், ஐவிஎப் என்ற செயற்கை கருவூட்டல் முறையை நாடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ‘‘மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மேலும், விந்தகத்தில் கட்டிகள் ஏற்படுவதும் அதிகரித்து

Continue reading →

அறிவியலின் மூன்றாவது கண்

வீட்டு வளாகத்துக்குள்தான் தண்ணீர் ஏற்றும் மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், கட்டிடத்துக்கு வெளியே சுற்றுச்சுவருக்குள் பொருத்தப்பட்டிருந்த அதை யாரோ இரவோடு இரவாகக் கழற்றிச் சென்றுவிட்டார்கள். மூன்று நாட்கள் வெளியூர் சென்று விட்டு வந்து பார்த்தால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோ திறந்து கிடக்க, விலை உயர்ந்த பொருட்களைக் காணோம்.

Continue reading →

தாவரங்களை போலியோ தடுப்பு மருந்தாக மாற்றும் முயற்சி வெற்றி?

போலியோ தடுப்பு சக்தியுடையதாக உருவாக்கும் வகையில் தாவர இலைகளை மாற்றியமைத்து கொள்வதில் வெற்றிபெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பு மருந்து தயாரிப்பு முறையை மாற்றியமைக்கும் சாத்தியக்கூறுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

இத்தகைய செயல்முறையால், செலவு குறைவாகவும், எளிதாகவும், விரைவாகவும் தடுப்பு மருந்து தயாரிக்கலாம் என்று நோர்ஃபோல்கிலுள்ள ஜான் இன்ஸ் மையத்தின் விஞ்ஞானிகள் அணியினர் கூறியுள்ளனர்.

Continue reading →

உலகை இணைக்கப்போகும் அக்யூலா!

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மார்க் ஸக்கர்பர்க் என்ற இளைஞரால் 2004-ம் ஆண்டு பொழுதுபோக்காகத் தொடங்கப்பட்ட ஒரு விஷயம், இன்று உலகின் பெருமளவு மக்களால் இணையதளத்தின் உதவியுடன் பயன்படுத்தப்படுகிறது. அதுதான் ஃபேஸ்புக்!

Continue reading →

வருகிறது வெப்ப புயல்!

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே அனல் காற்று வீசத் தொடங்கி விட்டது. மணிக்கு இத்தனை கி.மீ. வேகம் என வானிலை மையம் அறிவித்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனெனில் வானிலை ஏரியாவில் இதுவரை வடமேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளே ஹீட் வேவ் ஸோன் எனக் குறிப்பிடப்பட்டு வந்த நிலையில் இப்போது தென்னிந்தியா குறிப்பாக தமிழகமும் அந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.

Continue reading →

மனித இனம் பிழைக்க! செவ்வாய் கிரகம் தான் ஒரே கதி!

செவ்வாய்:செவ்வாய் கிரகத்தை, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக மாற்ற, என்ன செய்ய வேண்டும்? செவ்வாய்க்கு மேலே, அந்தரத்தில், மாபெரும் காந்தக் கருவிகளை நிறுத்தி, அதன் மூலம் காந்தப் புலத்தை கவசம் போல உருவாக்க வேண்டும் என, அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’வின் கோள் அறிவியல் பிரிவுத் தலைவர் ஜேம்ஸ் கிரீன் அண்மையில் தெரிவித்துள்ளனர்.

Continue reading →