Category Archives: அறிவியல் செய்திகள்

பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்… வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

 

பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

ழக்கத்தை விட நிலா பெரிதாக, பிரகாசமாக இருந்தால் அதற்கு `சூப்பர்மூன்’ என்று பெயர். வருடத்துக்குக் குறைந்தது இரண்டு முறை வரும் `சூப்பர்மூன்’ குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இதே போல் கிரகங்களும் தெரிவதுண்டு. அடுத்த மாதம் செவ்வாய் கிரகம்,15 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு அருகே வரப்போகிறது. இது பதினைந்து முதல் பதினேழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு. இதற்கு முன்பு 2003ம் ஆண்டு செவ்வாய் கிரகம் பூமியருகே வந்தபோது கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக அருகில் வந்தது.    

Continue reading →

எனக்கு அதிக மழை வேண்டும்..!" – சீனாவின் செயற்கை மழை முயற்சி பலிக்குமா?

னிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளிலும் அடிப்படையானது தண்ணீர். அன்றாடத் தேவைகளுக்கான உணவுகளை விளைவிக்கவும் அப்படி உணவில்லாமல் இருக்கும்போது பசியைக் கட்டுப்படுத்தவும் கூடத் தண்ணீர்தான் முக்கியத் தேவையாக

Continue reading →

உறுப்புகளுக்கு இனி அழிவில்லை!

வ்வொரு வருடமும் உடல் உறுப்புகளுக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. உடல் உறுப்புகள் கிடைக்காததால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு பெருகிவந்தாலும்கூட,  சரியான நேரத்தில் பொருத்தமான  நபரிடமிருந்து உறுப்பு தானம் பெற முடியாமல் போவதுதான் இத்தகைய மரணங்களுக்கு காரணம். இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

Continue reading →

நேரம் என்றால் என்ன? நேரமில்லாத உலகம் எப்படி இருக்கும்?

“இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இம்மூன்றையும் வேறுபடுத்திக் காட்டுவது வெறும் மாயை மட்டுமே!” – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

டிக்… டிக்… டிக்… இதயத் துடிப்பை ஒத்த ஓசை அது. கடிகார சுழற்சியின் குழந்தையாக அது இருந்தாலும், இவ்வுலகை, அதிலுள்ள மனிதர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் செயல் அதுதான். இன்றைய காலகட்டத்தில் மனிதன் தன்னை ஆள ஒன்றுக்கு அனுமதி கொடுத்திருக்கிறான் என்றால் அது இந்த நேரத்துக்கு மட்டும்தான்.

Continue reading →

அழியும் தவளைகள், அதிகரிக்கும் கொசுக்கள்… உணவுச்சங்கிலியில் இன்னுமொரு விரிசல்!

ன்றைக்குக் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோடிக்கணக்கில் பணம் செலவழித்துக்கொண்டிருக்கிறோம். இன்னும்கூட நம்மால் அதில் வெற்றியடைய முடியவில்லை. ஆனால், இந்தப் பணியை நமக்காகக் காலங்காலமாக இலவசமாகவே செய்து வந்தவை தவளைகள்.

Continue reading →

பிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு

பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சுற்றுசூழலுக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் விஞ்ஞானிகளின் தற்செயல் கண்டுபிடிப்பு இவ்விகாரத்தில் தீர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Continue reading →

பபுள்ஸ் விட்டிருக்கீங்களா? அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது?

சிறு வயதில் அம்மா துணி துவைக்கும்போது அருகில் அமர்ந்து சோப்பு நுரைகளில் வெளிப்படும் குமிழிகளை உடைத்து விளையாடி இருப்போம். அதே சோப்பு நீரைப் புட்டியில் அடைத்து சிறிய கழி(குச்சி)யொன்றின் நடுவில் போட்ட ஓட்டையின் வழியாக அதில் முக்கியெடுத்து ஊதி ஊதிக் குமிழிகளை நாமே உருவாக்கிச் சிறு வயது விஞ்ஞானிகள் என்று பெருமை கொண்டிருப்போம். கடந்த நூற்றாண்டுக் குழந்தைகளின் அந்தக் கால ஞாபகங்களை அசைபோடுவதே அலாதிச் சுகம்.

Continue reading →

சொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை! அசத்தல் நானோ டிராப்ஸ்!

பார்வைக் கோளாறு வந்துவிட்டதா? அவ்வளவுதான். `இனி காலம் பூரா  கண்ணாடியோடதான் அலையணுமா?’ என்பது பலரின் ஆதங்கமாக மாறிவிடும். ஸ்டைலுக்கு கூலிங்கிளாஸ் அணிவதை விரும்புகிறவர்கள்கூட, பார்வைக் கோளாறுக்காக கண்ணாடி அணிய விரும்புவதில்லை. இதன் பொருட்டே கண் அறுவைசிகிச்சை

Continue reading →

மெடிக்கலில் என்ன லேட்டஸ்ட் ?!

மொபைல், மடிக்கணினி என்று அதிக நேரம் திரைகளையே பார்த்தபடி இருப்பவர்களுக்கு மனச் சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறது Journal of medical clinical psychological sceince இதழில் சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை.
1991ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில் பருவ வயதினரின்

Continue reading →

வருகிறது ஜீன் எடிட்டிங்…இனி குறையொன்றுமில்லை!

நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில், ஜீன்கள் என்கிற மரபணுவியல் துறை சார்ந்த வளர்ச்சி தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. தாவரங்களில் மரபணு மாற்றப் பயிர்களை உருவாக்கல், விலங்குகளில் மரபணு சார்ந்த பரிசோதனைகள் மேற்கொள்வது என்ற நிலைகளைத் தாண்டி, தற்போது மனிதர்களில் மரபணு பரிசோதனைகளின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை செய்கிற நிலை உருவாகியுள்ளது. Continue reading →