Advertisements

Category Archives: அழகு குறிப்புகள்

தேங்காய் எண்ணெய்

கற்பக விருட்சம் என அழைக்கப்படுகிற தென்னை மரம், இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் முக்கியமானது. மருத்துவத் துறையிலும் அழகுத் துறையிலும் தேங்காய் எண்ணெயின் பங்கு தவிர்க்க முடியாததாக இருக்கிறது.அந்தக் காலத்தில் எல்லாம் தலைக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே உபயோகித்து வந்தார்கள். அவர்களுக்கு தேங்காய் எண்ணெயின் மகத்துவம் தெரிந்திருந்தது. இயற்கையான ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆன்ட்டி ஃபங்கல் தன்மைகளைக் கொண்டிருந்ததாலும், இயற்கையான மாய்சரைஸராக இருப்பதாலும் சருமத்துக்கும் கூந்தலுக்கும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினார்கள். மற்ற எண்ணெய்களைவிடவும் தேங்காய் எண்ணெய்க்கு சருமத்தினுள் ஊடுருவும் தன்மை அதிகம் என்பது இன்னொரு காரணம்.

Continue reading →

Advertisements

கர்ப்ப கால அழகு!

தாய்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் இயற்கையிலேயே அதீத அழகைக் கொடுக்கும் பருவம். அது அகத்திலிருந்து வெளிப்படுகிற அழகு.ஆனாலும், கர்ப்ப காலத்தில் முகம் முழுக்க கரும்புள்ளிகள் தோன்றுவது, முடி உதிர்வது, சருமம் வறண்டு போவது என புற அழகு சார்ந்த பிரச்னைகளும் சகஜம்.அழகு விஷயத்தில் அக்கறை காட்டும் பெண்களுக்கு இவை கவலையைத் தரலாம். திடீரென பயத்தைக் கிளப்பும் இந்த அழகு பிரச்னைகளுக்கான காரணங்களையும்,

Continue reading →

முடி உதிர்வு

பெரியவர்கள் நாளொன்றுக்கு 75 முதல் 125 முடிகள் வரை இழக்கிறார்கள். அவற்றில் சில முடிகள் வளர்ச்சியின்றி, அப்படியே நின்று விடுவதுண்டு. சில முடிகள் புதிதாக முளைப்பதும் உண்டு. இந்தச் செயல் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிற வரை கூந்தல் உதிர்வதும் திரும்ப முளைப்பதும் தொடரும். இந்த இயக்கத்தில் ஏதேனும் கோளாறுகள் வந்தால் முடி உதிர்வு நிரந்தரமாகும்.

Continue reading →

முடி உள்ளவர்களுக்கும் முடி இல்லாதவர்களுக்கும்… இருப்பவர்களுக்கு சில டிப்ஸ்…

* தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்குக் குளிப்பது அவசியம்.
* தலைமுடியை இழுத்து இறுகக் கட்டுவதோ, பின்னுவதோ கூடாது. தளர்வான பின்னலும் ஹேர் ஸ்டைலும்தான் கூந்தலுக்குப் பாதுகாப்பு.
* எலுமிச்சை விதைகள் 50, மிளகு 50, கைப்பிடி அளவு சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து அலசினால் உயிர்ப்புள்ள வேர்க்கால்கள் மறுபடி வளரத் தொடங்கும்.

Continue reading →

அழகு தரும் நலங்கு

பழங்காலத்தில், நம் முன்னோர் பயன்படுத்திய பல பொருட்களை, நாமும் பயன்படுத்தியிருந்தால், உடலை, மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். பொருட்கள் தயாரிக்க பல மூலக்கூறுகள் தேவை என்ற நிலையில், காலப்போக்கில், கிடைக்காத நிலையில், பல பொருட்களின் அருமையே தெரியாமல் போய் விட்டது. அதில் ஒன்று தான், நலங்கு மாவு.
கடலை பருப்பு, பாசி பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத்தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை கொண்டு நலங்கு மாவு தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில், இப்பொருட்கள் கிடைக்கின்றன. ஆண்கள் பயன்படுத்தும் போது, மஞ்சள் சேர்க்காமல், தயாரித்துக் கொள்ளலாம். சருமத்தை பராமரிப்பதில், நலங்கு மாவு முக்கிய பங்கு வகிக்கிறது.
பளிச்சாகும் முகம்

Continue reading →

காய்கறி ஹேர் டை பயன்படுத்தினால் இவ்வளவு பலன்களா..?!

நரைமுடிக்கு டை அடிப்பது இருக்கட்டும்… கூந்தலை கலரிங் செய்வதுதான் இன்றைக்கு உலகம் முழுக்க ஃபேஷன் ட்ரெண்ட்! விருந்து, விழாக்களில் பல பிரபலங்கள் பளிச் தோற்றத்துக்காக மெனக்கெடுவது ஹேர் கலரிங் விஷயத்தில்தான். கறுப்பு, கிரே, சிவப்பு… என கூந்தலுக்கு தீட்டும் வண்ணங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு

Continue reading →

அக்குள் கருமையை நீக்கும் அசத்தலான டிப்ஸ்

நமது உடம்பில் கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள். இப்போது அக்குள்களில் ஏற்படும் கருமையை போக்கி, பளிச்சிட சூப்பரான சில இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.

நமது உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள மறைவான இடங்கள் அனைத்தும் கருமையாக இருக்கும். ஏனெனில் மறைவான இடங்களில் அதிகமாக காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால், அந்த இடங்களில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் அதிகமாகி, கருமை நிறத்தினைக் கொடுக்கிறது.

Continue reading →

சோப், பாடிவாஷ் யாருக்கு எது பெஸ்ட்?

தினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது சோப். சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை. அந்த அளவுக்கு சோப் நம் அன்றாட வாழ்வில் பழகிவிட்டது. தற்போது இதைப் பயன்படுத்துவதிலும், சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இது அனைவருக்கும் ஏற்றுக்கொள்வது இல்லை. அதனால்தான் இப்போதெல்லாம் பாடிவாஷ் பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

பாடிவாஷ் ஏன் சிறந்தது?

Continue reading →

சகலகலா சருமம்!

ண்டுதோறும் ஒரு வயது அதிகரிக்கும் என்பது வாழ்வின் விதி. ஆனால், வயதின் அடையாளம் தோற்றத்தில் வெளிப்பட வேண்டியதில்லை. `இந்த வயதிலும் எப்படி இந்த இளமை’ என பிறரை வியக்க வைக்கும் மந்திரம் வேறொன்றுமில்லை. அது நம் சருமம்தான்!

அழகு என்பதே சருமத்தில்தான் தொடங்குகிறது. அழகான சருமம் என்பது ஓர் அதிசயம் அல்ல. அதற்குத் தேவை கொஞ்சம் அக்கறை மட்டுமே.

Continue reading →

மேக்அப் கவனம்!

டாய்லெட் சீட்டைவிட அதிக அளவு கிருமிகள் மேக்அப் பையில் இருக்கிறது. அழகுசாதனப் பொருட்கள் வைத்திருக்கும் பை, இடம் எல்லாம் கூட பாக்டீரியா உற்பத்தியாகக் கூடிய மிகப்பெரிய களமாக இருக்கின்றன. ஆனால், பயப்படத் தேவையில்லை. வாங்கி பல நாட்கள் ஆன அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பழயது வேண்டாம்! Continue reading →