Category Archives: கிருபானந்த வாரியார்

கிருபானந்த வாரியார்- தியானத்தை விட சிறந்தது எது

வேண்டாமே பரபரப்பு!
* ஏழைகளையும், இயலாமையால் வருந்துபவர்களையும் ஆணவத்தால் இழிவாக நடத்துபவன் மறுபிறப்பில் அதற்கான தண்டனையை அடைவான்.
* எல்லா உயிர்களும் ஈசனின் கோவில்களே. அதனால், எல்லா உயிர்களையும் மதிப்பது நம் கடமையாகும். இதுவே மேலான அறமாகும்.
*உணவருந்தும் போது வேண்டாத பரபரப்பும், வேகமும் கூடாது. அதே நேரத்தில் வேண்டாத கால தாமதமும் கூடாது.
* உயிர்களிடம் அளவு கடந்த கருணை‌யோடு இருந்தால் அன்றி கடவுளின் பூரண அருளைப் பெற முடியாது.
* கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவர்களையும் காப்பாற்றுவதே கடவுளின் எல்லையில்லாத கருணைக்கு அடையாளமாகும்.
* ஞானத்தைத் தருபவர் நல்லாசிரியரே. வாழ்வில் நல்ல வழிகாட்டியான ஞான ஆசிரியரைப் பெற்றுவிட்டால் நிச்சயம் பிறவிக்கடலைத் தாண்டி விடலாம்.
* கடவுள் வணக்கம் தேவையா? கடவுளை வணங்காமல் வாழமுடியாதா? என்றெல்லாம் சிந்திக்கிறோம். மானம் உள்ளவன் ஆடை உடுப்பான். ஆடையில்லாமல் வாழ முடியாதா என்ன! அதுபோல, மனம் உள்ளவன் கடவுளை வணங்குவான்.

கிருபானந்த வாரியார்- முருகனுக்குள் பிள்ளையார்


* இறைவன் ஒருவன் தான். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னார் திருமூலர். கடவுளை நாம் தான், நமக்குப் பிரியமான வடிவத்தில் குழந்தையாகவும், தாயாகவும், பெருமானாகவும் வைத்து வணங்குகிறோம். இஷ்டப்பட்ட ஒரு வடிவம் மனத்தில் தங்கி விடுகிறது.
* நெருப்பு என்று எடுத்துக் கொண்டால் அது சிவபெருமானின் வடிவம். அதன் சூடு பராசக்தி. அதன் செம்மை மகாகணபதி. அதன் ஒளி முருகப்பெருமான். எல்லாமே ஒன்று தான். ஆனால், அந்த ஒரே பொருளை வெவ்வேறு வாயிலாக நாம் உணர்கிறோம். நெருப்பு  சுடுகிறது. பிரகாசமாக இருக்கிறது. சிவந்த நிறத்தில் இருக்கிறது. ஆனால், நெருப்பு என்பது என்னவோ ஒரே பொருள் தான்!
* மலர் என்று எடுத்துக் கொண்டால் அதன் வண்ணம் கணபதி. வடிவம் பார்வதி. வாசனை முருகன். தாயிடம் இரண்டு குழந்தைகளும் இரு பண்புகளாக இருக்கின்றன. இதில், நமக்கு உகந்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதை இஷ்டமுடன் வழிபாடு செய்கிறோம். அதுவே இஷ்ட தெய்வம்.
* உங்களுடைய இஷ்ட தெய்வத்தை நீங்கள் எந்த உருவிலும் காணலாம். முருகனிடம் கூட நீங்கள் பிள்ளையாரைக் காணமுடியும். “”பிடித்தால் பிள்ளையார்” என்று சொல்லுகின்றனர் அல்லவா? அது இது தான்.

தாயினும் சிறந்தவர் கடவுள்-கிருபானந்த வாரியார்

* கண்ணால் பார்க்க முடியாது என்பதால் “கடவுள் இல்லை’ என்று சொல்லக்கூடாது. இந்த உடம்புக் குள்ளே உறைந்திருக்கும் உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? கண்ணால் காணமுடியாது என்பதால், நாம் உயிர் இல்லாதவர்கள் என்று கூறுவது சரியா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் இறைவனும் உறைந்திருக்கின்றனர்.
* சின்னஞ்சிறு உதவியைச் சரியான நேரத்தில் செய்தவர்களையே நாம் நன்றியோடு நினைக்க வேண்டும். ஆனால், இறைவன் செய்தது சிறு உதவியா? இல்லை பேருதவியாகும். தாயினும் சாலப் பரிந்து நம் மீது அன்பு காட்டுபவன் இறைவன். பெற்ற தாய் இப்பிறவிக்கு உரியவள் ஆவாள். ஆனால், இறைவனோ என்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் நமக்கு தாயாக இருக்கிறான்.
* கடவுள் அங்கு இங்கு என்று குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி, பிரகாசமாய் அருளுடன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். பாலில் உறையும் நெய் போல, இறைவன் இப்பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கிறார். இவ்வுலகத்தை மட்டுமே காணும் கண்களுக்கு கடவுள் தெரிவதில்லை. கடவுளை மட்டுமே காணும் கண்களுக்கு உலகம் புலப்படுவதில்லை.

இளமையில் உழைப்போம்-கிருபானந்த வாரியார்


* எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.
* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.
* சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.
* நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள்.
* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.
* இளமையில் வளையா விட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும். இளமைப்பருவம் <உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள்.
* உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது. கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம். கண்ணைப் பார்த்தாலே ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.
வாரியார்

குளிர் அறையில் கொதிப்பு-கிருபானந்த வாரியார்

பிறரை ஏமாற்றிப் பிழைப்பது கூடாது. யாசகம் வாங்கி சோம்பேறியாக வாழ்வதும் கூடாது. பிறர் பொருளில் நெய்யும் பாலும் உண்பதைக் காட்டிலும் தன் உழைப்பினால் தண்ணீரும் சோறும் உண்பதே சிறப்பானதாகும். மூன்று பொருள்களை மிச்சமாக வைக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவை நெருப்பு, கடன், பகை என்று குறிப்பிடுகின்றன. நெருப்பு மிச்சமிருந்தால் அந்த இடத்தையே பொசுக்கிவிடும். கடன் மிச்சமிருந்தால் வளர்ந்து சுமையாகி விடும். பகைவன் மிச்சமிருந்தால் சமயம் பார்த்து நம்மை அழித்து விடுவான். எந்த நேரம் இறைவனுடைய திருநாமம் நினைக்கப் பட்டதோ அந்த நேரம் எல்லாம் நம்முடைய நேரமாகும். எந்த பணம் தர்மத்திற்காக செலவழிக்கப்பட்டதோ அது நம்முடைய பணமாகும். இவ்விரண்டும் எப்போதும் உதவ நமக்காக காத்துக் கொண்டிருக்கும். மகிழ்ச்சி என்பது செல்வச் செழிப்பிலோ அல்லது பெரியமாட மாளிகையிலோ கிடைப்பதில்லை. ஏர்கண்டிஷன் அறையில் இருக்கும் ஒருவன் மனக்கொதிப்புடன் இருக்கக்கூடும். ஆனால், உச்சி வெயிலில் விறகினைப் பிளப்பவனின் மனம் மகிழ்ச்சியோடு இருக்கும். மகிழ்ச்சி என்பது மனநிலையைப் பொறுத்ததே தவிர பணத்தைப் பொறுத்தது அல்ல.

லாபம் நமக்கு மட்டுமே!

* பால் கறக்கும் மாடு நம்முடையதாக இருந்தாலும், கன்றுக்குட்டியை அருகில் கொண்டுபோனால் தான் பசு பால் கொடுக்கும். அதுபோல, அடியார்களின் துணையோடு போனால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற முடியும்.

* “அரசு ஒழிக’ என்று கோஷம் போடும் கைதிகளை

சிறையில் அடைத்தாலும் அவர்களுக்கு உணவு போட வேண்டியது அரசனின் கடமையே. அதுபோல கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவரையும் கடவுள் காப்பாற்றவே செய்கிறார்.

* சத்தியத்தைப் பேசுதல், தர்மத்தை அனுசரித்தல், தாய்தந்தையரைப் போற்றுதல், தெய்வ வழிபாடு செய்தல் இவை எல்லாம் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களாகும்.

* சோதனைகள் நம்மை வருத்தும்போது, அறியாமையினால் “ஆண்டவனே! உனக்கு கண்ணில்லையா’ என்று கதறுகின்றோம். ஆனால், கடவுள் நமக்குப் புரிவது எப்போதும் அருள் மட்டும் தான்.

* கடவுளை வணங்காவிட்டால் நம்மை தண்டிப்பதில்லை. வணங்கினால் நமக்குத் தான் நன்மையே தவிர, அவருக்கு எந்த நன்மையுமில்லை. ஆற்றில் குளித்தால் நம் உடல் தான் தூய்மை பெறும். இதில் ஆற்றுக்கு எந்த லாபமும் இல்லை.

– வாரியார்

எது நம்முடைய நேரம்?

* உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக் கெல்லாம் தலையாய பெரிய பிழை அறிவு தரும் நல்ல நூல் களைக் கல்லாமையே ஆகும். நல்ல நூல்களைக் கற்கும் போது, அறிவு மேம்படும். அதனால் தான் இறை வனை கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி என்பர்.

* மனிதனை உயர்த்துவது பணமன்று, பதவியும் அன்று, குலமும் அன்று, பருமனும் அன்று, உயரமும் அன்று. அது எதுதான் என்றால் அறிவு மட்டுமே. வள்ளுவர் இதனையே அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று குறிப்பிடுவார்.

* மலை புரண்டுவரினும், கடல் கொந்தளித்துப் பொங்கி னாலும், வானம் இடிந்து தலை மீது விழுந்தாலும் தர்மம் காட்டிய நல் வழியில் சத்தியத்தை விடாது கொண்டி ருக்கும் செயலே வீரச் செயலாகும்.

* பொறுமை கடலினும் பெரிது என்பர். பொறுமை ஒருவனுக்கு புகழைத் தரவல்லதாகும். புண்ணியவான்களிடமே பொறுமை குடிகொண்டிருக்கும்.

உலகம் கூட அழிந்துவிடும். ஆனால், பொறுமை மிக்கவரின் புகழ் அழிவதில்லை.

* மறக்காமல் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய கருத்துக்கள் இரண்டாகும். அவை அறவழியில் செலவழித்த பொருளும், பூஜைக்காக செலவழித்த நேரமும் ஆகும்.

-வாரியார்

இறைவன் விரும்பும் நைவேத்யம்


* உயர்ந்த வழிபாட்டை “சமாராதனை’ என்று குறிப்பிடுவர். “சம்’ என்றால் “நல்ல’, “ஆராதனை’ என்றால் “வழிபாடு’ என்பது பொருள். ஏழைக்குச் சேவை செய்வது சமாராதனை எனப்படும்.
* கோயிலில் ஆடம்பரத்துடன் படைக்கும் பொங்கலை இறைவன் ஏற்கிறானா என்பது சந்தேகமே. ஆனால், ஏழைகளுக்காக தானம் செய்வதற்காக தயாரிக்கப்படும் பொங்கலை, இறைவன் மிக விருப்பத்தோடு உகந்து ஏற்பான்.
* நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் என்னும் சித்தர், கோயிலில் இருக்கும் இறைவனை “படமாடும் கோயில்’ (சிற்பம்) என்றும், ஏழை எளியவர்களை “நடமாடும் கோயில்’ என்றும் குறிப்பிடுகிறார்.
* தபால்களை நேரே தபால் நிலையத்தில் சேர்த்தால், வீதிகளில் இருக்கும் தபால் பெட்டிகளுக்கு அவை வரத் தேவையில்லை. ஆனால், வீதிகளில் உள்ள தபால் பெட்டிகளில் இட்ட தபால் தலைமை தபால் அலுவலக்ததிற்கு வர வேண்டியது அவசியம். தபால் பெட்டி ஏழை எளியவர்களைப் போன்றது. அஞ்சல் நிலையம் ஆண்டவன் வாழும் கோயில்.
* ஆலயங்களில் செய்யப்படும் வழிபாட்டைக் காட்டிலும் ஏழைகளுக்குச் செய்யும் தொண்டுகள் மூலம் இறைவனை அடைவது சிறந்தது. அதனால் தான் இறைவழிபாட்டை “ஆராதனை’ என்றும், ஏழைகளுக்குத் தானம் செய்வதை “சமாராதனை’ என்றும் குறிப்பிடுகிறார்கள்.
-வாரியார்

இளமையில் உழைப்போம்- கிருபானந்த வாரியார்

* எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.
* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.
* சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.
* நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள்.
* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.
* இளமையில் வளையா விட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும். இளமைப்பருவம் <உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள்.
* உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது. கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம். கண்ணைப் பார்த்தாலே ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.
வாரியார்

மனைவியிடம் கோபிக்காதீர்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

மனைவியிடம் கோபிக்காதீர்கள்

நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி
வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும்
பன்மடங்கு வளர்ந்து வரும்.

பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில்,
எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு
அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.

மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும்
பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி
கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.

ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால்
வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே
வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து
பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.

நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன்
எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம். Continue reading →