Advertisements

Category Archives: இயற்கை உணவுகள்

தக்காளி இருக்க கவலை எதற்கு!

உலகில், உருளைக்கிழங்கு அடுத்தபடியாக அதிகம் விளைவது தக்காளி தான். சமையலில், தக்காளியின் பங்களிப்பு அதிகம். நோய் எதிர்ப்பு மற்றும் மருத்துவ குணம் கொண்ட காய், கனிகளில் தக்காளி முதன்மையானதாக விளங்குகிறது. நோய் தடுப்பு காரணிகள், தக்காளியில் ஏராளம் உள்ளன.

Continue reading →

Advertisements

சூடு தணிக்கும் கோவைக்காய்

கோவைக்காய், முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது. இன்றைக்கு, இதன் மருத்துவ குணத்தை அறிந்து, மக்கள் பலர், விரும்பி சாப்பிட துவங்கியுள்ளனர். கோவைக்காய், உடல் சூட்டை தணிக்கும்.
உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது;அதற்கேற்ற பாக்டீரியா எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. தவறான உணவுப் பழக்கங்களால், வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது; ரத்தத்தை சுத்திகரிக்கும்.

Continue reading →

முளைகட்டிய பயிறு சொல்லும் சங்கதி

நாம் சாப்பிடும் உணவில், வேக வைத்த தானியங்களும், காய்கறிகளுமே முக்கிய உணவாக உள்ளன. அவ்வப்போது, பச்சை காய்கள், முளைகட்டிய தானியங்களையும் உட்கொள்ள வேண்டும். முளைவிட்ட தானியங்கள், மனிதனுக்கு கிடைத்த ஒரு வரம் என்று சொல்லலாம்.

Continue reading →

உடல் நலத்துக்கு பசுமை கம்பளம்

ரை. இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இது. எல்லா வகை கீரைகளிலும், உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் இருக்கின்றன. முளைக்கீரையில், கால்சியம் சத்துகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால், எலும்பு வலுவடைவதோடு, உடல் வளர்ச்சியும் அதிகரிக்கும். வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், ஆரோக்கியமும், வளர்ச்சியும் குறைவிருக்காது. கீரையை, தினசரி உண்டு வந்தால், மலச்சிக்கல் இருக்காது. நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்.

Continue reading →

வாதம் விரட்டும் புளிச்சக்கீரை!

புளிச்சக்கீரை, புளிச்சைக்கீரை, புளிச்சுறு கீரை என்றெல்லாம் அழைக்கப்படும் இதைக் காசினி கீரை என்றும் சொல்வார்கள். தெலுங்கில் கோங்கிறாக்கு அல்லது கோங்கூரா என்பார்கள். ஆவக்காய் (மாங்காய்)  ஊறுகாய்க்கு அடுத்தபடியாகக் கோங்கூரா தொக்கு அல்லது கோங்கூரா பப்பு ஆந்திராவின் கலாசாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக ஆந்திராவின் குண்டூர் பகுதியில் விளையும் புளிச்சக்கீரை மிகச் சிறப்பானது.     

Continue reading →

தினமும் தரும் பலன்!

உணவு வகைகளில், ருசிக்காகவும், மணத்துக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை, பலர், சாப்பாட்டு தட்டில் ஓரங்கட்டுகின்றனர். ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள், ஏராளமான அடங்கியுள்ளன. கறிவேப்பிலையில், கார்போஹைட்ரேட்டுகள், பைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

Continue reading →

ரத்த அழுத்தம் குறைக்கும் வௌ்ளரிக்காய்!

நீர் சத்துள்ள காய்கள் எல்லாமே உடல் நலத்துக்கு நன்மை தரும் காய்களாகும். குறிப்பாக, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளை பூசணி போன்றவை சமைத்து சாப்பிடுவதால் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதில் வெள்ளரிக்காய் சிறந்த மருத்துவ குணம் உள்ளது. இதை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.

Continue reading →

வியக்க வைக்கும் காளான் மகத்துவம்

* உலகில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. ஆனால், அவை அனைத்துமே உண்ணக்கூடியது அல்ல. பல வகை காளான்கள் விஷத்தன்மையும் கொண்டவை. நாம் சமையலுக்காக உபயோகப்படுத்தக்கூடியது White button மற்றும் Oyster உள்ளிட்ட சில குறிப்பிட்ட வகைகளைத்தான்.
‘‘நாம் விரும்பி சாப்பிடும் உணவுப் பட்டியலில் காளானுக்கு ஸ்பெஷல் இடம் உண்டு. தன்னிகரற்ற தனிச்சுவை கொண்ட காளானில் எண்ணற்ற சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா.

Continue reading →

வயிற்று புண் போக்கும் மங்குஸ்தான் பழம்!

பழங்களின் ராணி’ என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம், மருத்துவ குணம் வாய்ந்தது. தென்னிந்திய மலைப்பகுதியில், தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.

Continue reading →

மெகா ஆற்றல் தரும் மைக்ரோ கீரைகள்!

கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லாப் பட்டணமும் பாழ்!’’ என்றொரு பழமொழி உள்ளது. அந்த அளவுக்குக் கீரைகள் பயன்படுத்தும் நடைமுறை நம் மூதாதையர் காலத்தில் இருந்து நம்மோடு பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் சமீப காலமாக உணவு மற்றும் ஊட்டச்சத்து உலகில் கீரைகள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

Continue reading →