Advertisements

Category Archives: இயற்கை மருத்துவம்

பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடுமாம்!

பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.

இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.

Continue reading →

Advertisements

அகத்திக்கீரையில் இருக்கிறது விஷத்தை முறிக்கும் ஆற்றல்

அகத்திக்கீரை உடல் சூடு தணிக்கிற, வயிற்றுப்புண்ணை ஆற்றுகிற, மனக்கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை குணமாக்கும், அருங்குணங்கள் கொண்டது. இது மொத்தம், 63 வகை சத்துக்களை கொண்டதாக, சித்த மருத்துவம் கூறுகிறது. அகத்திக்

Continue reading →

தோல் நோய்களுக்கு அருகம்புல் சிறந்தது

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்று சொல்வார்கள். நோயாளிகளுக்கு புல் மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. புல்லை மட்டும் இரையாக உண்ணும் விலங்குகளுக்கு, குடல்நோய் வருவதில்லை. மாறாக புல்லால் குடல் புண்கள் குணமடைகிறது.
அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய, தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடிச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது.

Continue reading →

முருங்கை என்ற மாமருந்து ஆரோக்கியத்துக்கு விருந்து!

கீரையில் பொதுவாக சத்துக்கள் அதிகம். குறிப்பாக முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. முருங்கை மரம் முழுவதும், மனிதனுக்கு பயனளிக்கும் மரமாகும். முருங்கை கீரையை வேக வைத்து, அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை, முருங்கைக் கீரை நீக்கும். அதனால், முருங்கையை “மருத்துவ பொக்கிஷம்’ என்று சொல்கின்றனர்.

Continue reading →

நார் சத்துள்ள காய்கறி மலச்சிக்கலுக்கு தீர்வு

இன்று ஆரோக்கியமான உணவை தேர்வு செய்து, அதை உரிய நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்துக்கு தூங்க செல்வது என்பது, ஒரு போராட்டமாகவே உள்ளது. நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு, முடிந்த வரை இயற்கையான முறையில், கிடைக்கும் காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது.

Continue reading →

தைராய்டு பிரச்னையை தீர்க்கும் ஆரோக்கிய உணவுகள்

இன்று தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களே இந்த பாதிப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்ட்ராபெர்ரி: உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டு பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது.

Continue reading →

இஞ்சி தரும் நன்மைகள்…!

சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தி வரும் மூலிகைகளில் ஒன்று, இஞ்சி. இந்தியா, சீனா, கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற பல்வேறு நாடுகளில் இஞ்சி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நாம் அன்றாடம் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொண்டால், அதன் பலன் நம்மை காக்கும். இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணங்கள் அளவிடமுடியாதவை. அதன் சிறப்பை உணர்ந்தே நம் முன்னோர் இஞ்சியை நம் உணவில் அதிகம் சேர்த்து வந்தனர். இஞ்சியின் பிரமாத பலன்கள் இதோ…

ரத்த ஓட்டம் சீராகும்! 

Continue reading →

எலுமிச்சம் பழத்தின் ஆரோக்கிய ரகசியம்!

எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில், நல்ல மருந்து பொருளாக பயன்படுகிறது. ஒரு முழு எலுமிச்சை பழத்தை, சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் கலந்து, நாள் முழுவதும் கொஞ்சம், கொஞ்சமாக குடித்து வந்தால், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும்.

Continue reading →

தலையாய பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகைகள்!

இளம் வயதினருக்கு இருக்கும் தலையாய பிரச்னையே, முடி உதிர்வதுதான். முடியை காப்பாற்றுவதற்கு பலரும் படும்பாடு சொல்லி மாளாது. முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உள்ளன.
பூஞ்சைத் தொற்று கிருமிகளாலும், ஊட்டச்சத்து இல்லாததாலும், சுகாதாரம் இல்லாததாலும், இரும்புச் சத்து குறைவாக இருந்தாலும், தோல் அழியும் நோய் போன்றவற்றாலும் முடி உதிர்தல் ஏற்படும். எனினும், பொடுகு பாதிப்பே, பலருக்கும் முடி உதிர்வதற்கு பிரதான காரணமாக இருக்கிறது. மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கும் முடி உதிரும் பிரச்னை வரும். முடி உதிராமல் இருக்க, மூலிகை மருத்துவம் நல்ல பயன் தரும்.

Continue reading →

இஞ்சியும் தேனும் இனிய மருந்து!

உணவே மருந்து என்று சொல்வதற்கு இஞ்சியும், பூண்டும் முக்கிய உதாரணம். இவை இரண்டும், உடலுக்கு எல்லா வகையிலும் இயற்கை மருந்தாக பயன்படுகின்றன. இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி
சாப்பிடுவது, ரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

Continue reading →