Advertisements

Category Archives: உடல்நலம்

தூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா!

டல், மனம் இரண்டுக்கும் ஓய்வு தருவது தூக்கம். ஆனால், இன்று பலருக்கு மாத்திரைகளின் மூலம்தான் தூக்கம் வசமாகிறது. “மாத்திரைகளை நாடாமல் இயற்கையான முறையில் ஆழ்ந்து தூங்க வழி இருக்கிறதா?’’ மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் கேட்டோம்.

“இன்று மொபைல்போன் பலரது வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது. டி.வி., கம்ப்யூட்டர், மொபைல் என எப்போதும் ஒளிவீசும் ஏதோவொரு திரையைப் பார்த்துக்கொண்டேயிருப்பதால், கண்களும் மூளையும் சோர்வடைகின்றன. அவை இயல்புக்குத் திரும்ப, குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். எனவே, தூங்கத் தயாராவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர், இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். மொபைல்போன்

Continue reading →

Advertisements

கல்லீரல் காப்போம்!

கல்லீரல்

1.கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே முறையான சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். கல்லீரல் புற்றுநோயால் இறப்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்பால் இறக்கிறார்கள்.

2.எப்போதும் உடல்சோர்வாக இருப்பது, காய்ச்சல், தசை மற்றும் மூட்டுவலி போன்றவை கல்லீரல் அழற்சியின் அறிகுறிகள். வயிற்றுக் கோளாறு, மஞ்சள்காமாலை, சிறுநீர் நிறம் மாறுதல், பசியின்மை போன்றவையும்கூட கல்லீரல் அழற்சியின் அறிகுறிகளே.

Continue reading →

வியர்வையால் வேதனையா?

வியர்வையைத் தவிர்க்க சில ஆலோசனைகள்…

1. நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. காற்றோட்டமுள்ள இடங்களில் இருக்க வேண்டும்.

3. பருத்தி உடைகளையே அணிய வேண்டும்.

4. குடிக்கும் தண்ணீரில் நன்னாரி வேரைப் போட்டுவைத்து அருந்த வேண்டும்.

5. அதிக சூடான உணவுகளைத் தவிர்த்துவிட்டு, இளஞ்சூடான உணவுகளைச் சாப்பிடவும்.

Continue reading →

டீ இன்றி அமையுமா வாழ்க்கை?

ரு டீயைக் குடிச்சிட்டு வேலையைப் பார்ப்போமா?’ பணியிடங்களில் அன்றாடம் ஒலிக்கும் வாசகம் இது. கடுமையான வேலைக்கு நடுவில், முழு மூச்சாகப் பரீட்சைக்குப் படிக்கும் இடைவெளியில் ஒரு கப் டீ நமக்குத் தருவது இதம், ஆசுவாசம், புத்துணர்ச்சி. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத பானம். தெருவுக்கு ஒன்றாக முளைத்திருக்கும் தேநீர்க் கடைகள் இந்த உண்மையை நமக்கு உணர்த்துகின்றன. `டீ நல்லதா, கெட்டதா?’ என்று கேட்டால் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்வது மிகக் கடினம். ஆனால், `அளவுக்கதிகமாக டீ குடிப்பவர்களுக்கு டீஹைட்ரேஷன், ரத்தச்சோகை மற்றும் இதய பாதிப்பு ஏற்படலாம்’ என்கின்றன சில ஆய்வுகள்.

Continue reading →

நீரிழிவால் வரும் பாதநோய்

உலகத்தில் மிக அதிகமான சர்க்கரை நோய் பாதித்தவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். சீனாவில் இன்னும் சற்று அதிகமாக இருக்கிறார்கள். இதில் கவலைக்குரிய செய்தி என்னவென்றால், இன்னும் சில வருடங்களில் சர்க்கரை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் நாம் சீனாவை வென்றாலும் ஆச்சரியமில்லை.

சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே முறையான கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால் பல உடல் Continue reading →

தீருமா சொரியாசிஸ் வேதனை

சொரியாசிஸ் நோய் குணமடைந்தாலும் தழும்பு இருக்குமா?
நோய் முழுமையாக குணமடைந்தாலும், சிலருக்கு நகங்களில் சொத்தை மாறுவதற்கு தாமதமாகலாம் அல்லது சொத்தை மாறாமல் போகலாம். நகச்சொத்தை மாற மருதாணியை மை போல் அரைத்து பூசிவர வேண்டும்.
* சொரியாசிஸ் சிகிச்சையின் போது வேறு நோய்க்கு மருந்துகள் உட்கொள்ளலாமா?

Continue reading →

எடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்!

டிகைகள் எல்லாம் வானத்துலேருந்து குதிச்சவங்க இல்லை. நாங்களும் உங்களைப்போலத்தான். ஃபிட்னெஸ் விஷயத்துல நடிகைகளுக்கும் சாதாரணப் பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் டெடிகேஷன். நாங்க தினமும் வொர்க் அவுட் பண்ணுவோம், டயட்டை ஃபாலோ பண்ணுவோம். ஆனா, நீங்க 29 நாள்கள் வொர்க் அவுட் பண்ணிட்டு, ஒரு ரிசல்ட்டும் இல்லைன்னு 30-வது நாள் அதை நிறுத்திடுவீங்க. ஒருவேளை நீங்க மனம் தளராம இருந்திருந்தால், அந்த 30-வது நாள்ல உங்க உடம்பு ரிசல்ட்டைக் காட்டத் தொடங்கியிருக்கலாம்’’ – நடிகை சினேகா ஒரு பேட்டியில் இப்படிச் சொன்னார். 

Continue reading →

தொப்பை முதல் முதுகுவலி வரை… நாற்பது வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள்

நீண்டநேரம் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி, மூலக்கோளாறு என பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன. அதிலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கு இவை அல்லாமல் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் என நோய்கள் வரிசைகட்டி நின்று பாடாய்ப்படுத்தும். இவற்றை அடிப்படையாகக்கொண்டு, `40 வயதானவர்களை என்னென்ன நோய்கள் வந்து பாதிப்பை ஏற்படுத்தும், நடைப்பயிற்சி செய்யும்போது திடீரென்று மயக்கமடைந்தால் என்ன செய்வது, கண்ணாடி அணியச் சொல்லியும் அணியாவிட்டால் என்னாகும்’ என்பது போன்ற கேள்விகளை சர்க்கரைநோய் நிபுணர் ஆர்.கருணாநிதியின் முன்வைத்தோம். விரிவாகப் பேசினார் அவர்.

Continue reading →

கொழுப்பில்லா உலகம் அமைப்போம்!

திக கொழுப்பு ஆரோக்கியத்தின் எதிரி என்பதை எல்லோருமே அறிவோம். உடல் பருமன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களுக்கு இதுதான் காரணம். “உடற்பயிற்சியும் உடலுழைப்பும் இல்லாத வாழ்க்கை முறை, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது போன்றவை தவிர சில பழக்கவழக்கங்களும்கூட கொழுப்பை அதிகரிக்கலாம். அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை சாத்தியமாக்கலாம்” என்கிறார் பொது மருத்துவர் சாருமதி. கொழுப்பைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பட்டியலிடுகிறார் அவர்.

பசித்த பிறகு சாப்பிடுங்கள்!

Continue reading →

ஹைப்போதைராய்டு VS ஹைப்பர்தைராய்டு

ம் உடலில் கழுத்துப் பகுதியில் காணப்படும் சிறிய வகை நாளமில்லா சுரப்பியே தைராய்டு. அதில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி இதயம், செரிமான மண்டலத்தின் செயல்பாடுகள், தசைகளின் வலிமை, மூளை வளர்ச்சி, சீரான மனநிலை, எலும்புகளின் ஆரோக்கியம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது. தைராய்டு சுரப்புக் குறைபாட்டில் ஹைப்போதைராய்டு, ஹைப்பர்தைராய்டு என இரண்டு வகைகள் உள்ளன.

Continue reading →