Category Archives: உடல்நலம்

மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.

பெரும்பாலும் இப்பொழுது அனைவருக்கும் மலச்சிக்கல் பொதுவான ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் அதிகமாக கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய் சேர்க்கப்பட்ட

Continue reading →

சோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா.! பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6,500-ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் இந்த உயிர்க்கொல்லி வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

<!–more–>

இந்நிலையில் கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள சோப்பை கொண்டு கைகளை சுத்தம் செய்வது சிறந்த வழியாக இருக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது.

கொரோனாவின் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவில் கடும் போராட்டத்திற்கு பிறகு உயிர்கொல்லி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், இந்தியா உட்பட பல உலக நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனாவின் கொட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் செய்வதறியாமல் பலநாடுகளும் விக்கித்து நிற்கின்றன. பல நாடுகள் மக்களை தனிமைப்படுத்தி வைக்கும் நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றன.

கொரோனாவிலிருந்து தப்பிக்க கைகளை சுத்தமாக கழுவி வைத்து கொள்வதே முக்கியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், உலகம் முழுவதும் ஹேண்ட் சானிட்டைஸர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளிலும் Hand Sanitizerகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸைக் கொல்ல சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவதற்குப் பின்னால் அறிவியல் காரணம் உள்ளதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.

கொரோனா தாக்காமல் தற்காத்து கொள்ள Hand Sanitizer-களை விட, சாதாரண சோப்புகளே நல்ல பலன்களை தரும் என கூறப்பட்டுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானியும், பேராசிரியருமான கரேன் ஃப்ளெமிங் கூறுகையில் கொரோனாவிற்கு எதிரான ஒரு அற்புதமான ஆயுதத்தை நாம் அனைவரும் நம் வீடுகளிலேயே வைத்திருக்கிறோம். அந்த அற்புத ஆயுதம் சோப்புகள் தான் என கூறியுள்ளார்.

ஆல்கஹால் அடிப்படையிலான சானிட்டைசர்கள் பயனுள்ளவை தான். ஆனால் சோப்பு போட்டு கைகளை கழுவுவது வைரஸைக் கொல்ல மிகவும் சிறந்த வழி என கூறியுள்ள மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், அதற்கான அறிவியல் காரணத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அறிவியல் காரணம்:

கொரோனா வைரஸ் ஒரு உறையால் மூடப்பட்டுள்ளது. அதாவது oily lipid membrane எனப்படும் எண்ணெய் கொழுப்புகள் நிறைந்த வெளிப்புற ஜவ்வால் கொரோனா வைரஸ் சூழப்பட்டுள்ளது. இந்த ஜவ்வில் புரோட்டனிஸ் எனப்படும் பெரிய உயிர் அணுக்கள் அல்லது மேக்ரோ மூலக்கூறுகள் உள்ளன. இவை வைரஸ் செல்களுக்குள் நுழைய உதவுகிறது.

எனினும் இந்த கொடிய கொரோனா பலவீனமான இணைப்பைக் கொண்ட self assembled நானோ துகள் என்று கூறி உள்ளனர் மருத்துவர்கள். எனவே சாதாரண சோப்புகளை கொண்டு தண்ணீரை வேகமாக திறந்து விட்டு இரு கைகளையும் நன்றாக தேய்த்து சிறிது நேரம் கழுவினாலே,உயிர்கொல்லியான கொரோனா வைரசின் மேற்புறம் உள்ள கொழுப்பு அடுக்கும், வைரஸும் சேர்ந்தே அழிக்கப்பட்டு விடும்.

image

சோப்பு மூலக்கூறுகள் ஒரு கலப்பின அமைப்பைக் கொண்டுள்ளன. சோப்புகளில் உள்ள ஹைட்ரோஃபிலிக் (hydrophilic) தண்ணீருடன் பிணைத்து கொள்கிறது. ஹைட்ரோபோபிக் (hydrophobic) எனப்படும் வால் பகுதி நீர், எண்ணெய் மற்றும் கொழுப்புடன் பிணைப்புகளைத் தவிர்க்கிறது.

நாம் பயன்படுத்தும் சோப்புகளில் உள்ள ஹைட்ரோபோபிக் தங்களை லிப்பிட் மென்படலத்திற்குள் (lipid membrane) இணைத்து கொண்டு அதை துடைக்கும்போது வைரஸானது அழிக்கப்படுகிறது. அழிக்கப்பட்ட வைரஸ்கள் நாம் தண்ணீரில் கைகளை நன்றாக தேய்த்து கழுவும்போது வெளியேறிவிடுகிறது.

இதன் காரணமாகவே அனைத்து மருத்துவர்களும் கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள கைகளை சோப்புகளை கொண்டு சுத்தமாக தேய்த்து கழுவுவது முக்கியம் என அறிவுறுத்தியுள்ளனர்.

கைகளைக் கழுவுவது ஏன் அவசியம்?!

உலகம் முழுவதும் தற்போது சுகாதார நடைமுறைகள் கவலைப்படும் இடத்திலேயே இருக்கிறது. அதிலும் கை சுகாதாரம் பற்றிய புரிதலில் மிக மோசமான இடத்தில் இருக்கிறோம். தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக கைகளைக் கழுவுவது பற்றி மீண்டும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ‘சோப்பைக் கொண்டு, ஓடும் நீரில் கைகளைக் கழுவுதல் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம்’ என்ற வாசகங்கள் உள்ள சுவரொட்டிகளை

Continue reading →

ஆண்களின் தாம்பத்ய ஆரோக்கியத்துக்கு… அவசியமான/தவிர்க்க வேண்டிய உணவுகள்!

சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், மோசமான உணவுப்பழக்கம் நேரடியாக ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. டென்மார்க்கில் நடைபெற்ற இந்த ஆய்வில் அந்நாட்டைச் சேர்ந்த 3,000 இளம் ஆண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Continue reading →

மைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா?

அத்தியாவசியமான காய்கறிகளும்,உணவுபொருள்களும் இராசயன முறையில் விளைந்துவருவதால் ஏற்படும் ஆரோக்ய குறைபாடு ஒருபுறம் என்றால் தெரிந்தே விஷமாகும் மைதாவை உங்கள் வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதே சிறந்தது என்கிறார்கள் அனுபமிக்க மருத்துவர்கள்.

Continue reading →

பால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

Continue reading →

நீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….!!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் என்ன உணவு முறையை கடைபிடிக்கவேண்டும் மற்றும் எந்த உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று இப்போது நாம் காண்போம்.

Continue reading →

எவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா? தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க!

ஆண்களுக்கு வயதான தோற்றத்தை தரக் கூடிய இரண்டு விஷயங்கள் வழுக்கையும் தொப்பையும் தாங்க. பெண்கள் தங்களை அழகு படுத்திக் கொள்ள எந்த அளவு ஆர்வத்துடன் இருக்கிறார்களோ அதை விட

Continue reading →

தண்டுவடம் பாதித்தால்…

தண்டுவடம் என்பது மூளையின் பின்பகுதியில் இருந்து வால் போல் நீண்டு இருக்கும் ஒரு நரம்பு மண்டல பகுதி. தண்டுவடமும் மூளையும் சேர்ந்துதான் மையநரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன. தண்டுவடம் மண்டை ஓட்டின் பின்புறத்தில் இருக்கும் துவாரம் (Foramen magnum) வழியாக  முள்ளெலும்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் ஊடே கீழ்நோக்கி நீண்டு செல்கிறது. தண்டுவடம் ஆண்களுக்கு கிட்டத்தட்ட 45 சென்டிமீட்டர் நீளமாகவும், பெண்களுக்கு 43 சென்டிமீட்டர் நீளமாகவும் இருக்கும். தண்டு வடத்தை சுற்றி இருக்கும் முள்ளெலும்புகள் அதனை ஓர் அரண் போல் காத்து நிற்கிறது. Continue reading →

நுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது?

நுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது என சில முறைகள் உள்ளது. அவற்றை கடைபிடித்தால் நுரையீரல் பாதிப்பிலிருந்து தப்பலாம்.

Continue reading →