Category Archives: உபயோகமான தகவல்கள்

விதை நடப்போறீங்க்களா.. இதை நோட் பண்ணுங்க!

மாடித்தோட்டம்

மாடித்தோட்டம் அமைக்க நினைத்து, அதற்கான வேலையில் இறங்கிய பின்னால் ஆயிரம் சந்தேகங்கள் எட்டிப் பார்க்கும். இதுவரை நேரடியாக விவசாயமே செய்யாதவர்களுக்கு பல சந்தேகங்கள் வருவது இயல்புதான். மாடித்தோட்டத்தில் விதை நடும்போது கவனிக்க வேண்டிய சில நுட்பங்களைப் பகிர்ந்துகொள்கிறார், திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத் தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார். 

விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்க..!

Continue reading →

நம் தூக்கம்… நம் கையில்!

தூக்கமின்மையை துரத்தும் உபாயங்கள்…

 

‘‘தூக்கமின்மையால் இன்று பாதிக்கப்படுபவர்கள் பலர். ஆனால், ‘இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று எண்ணி அதற்கு உரிய கவனம் கொடுத்து அவர்கள் சரிசெய்யாததால், அவர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் பல’’ என்கிறார் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரியும், மனநல மருத்துவருமான டாக்டர் ஆனந்த் பிரதாப். நோய்களைப் பற்றி தொடர்ந்து வெளிச்சம் தந்துவரும் ‘நோய் நாடி’ தொடரில், முழுமையான தூக்கம் என்றால் என்ன என்பதில் இருந்து, தூக்கமின்மைக்கான சிகிச்சை முறைகள்வரை விரிவாகப் பேசுகிறார் டாக்டர்.

தூக்கம் ஏன் தேவை?

Continue reading →

முத்திரைத் தாள் கட்டணம்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

சென்னை: இந்தியாவில் நீங்கள் எந்த சொத்துக்களை வாங்கினாலும் அதனை முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் நீங்கள் பல இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும். Continue reading →

உங்களை வியக்க வைக்கும் மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்கள்!

பல செல்களால் ஆன மனித உடல் ரகசியம் நிறைந்த ஒன்று. மனித உடலில் எண்ணிலடங்கா விந்தைகளும், ஆச்சரியங்களும் நிரம்பியுள்ளன. மனித உடலை நம் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பல வியக்க வைக்கும் உண்மைகளை வெளியிட்டுக் கொண்டு தான் உள்ளனர். Continue reading →

மின்கழிவுகள்

கடைசியாக நீங்கள் ஒரு புதிய மொபைலை வாங்கியது எப்போது, இந்த நொடி உங்கள் வீட்டுக்குள் எத்தனை மொபைல்கள் இருக்கின்றன, அதில் எத்தனை மொபைலை  நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ பயன்படுத்துகிறீர்கள்? Continue reading →

நோயாளிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்!

அசத்தல் ஐடியாஸ்

 

டல்நலம் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்டு அல்லது விபத்துகளில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அல்லது சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வு எடுக்கும்  உறவினரையோ, நண்பரையோ பார்க்கச் செல்கையில் ,என்ன வாங்கிச் செல்லலாம்?

Continue reading →

பிபிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுக்கலாம்!

அரசு அதிரடி அறிவிப்பு

 

பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படும் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களுடைய பணத்தை 15 ஆண்டு நிறைவடைவதற்குமுன் எடுக்க முடியாது என்ற விதி உள்ளது. இப்போது பொது மக்களின் வசதிக்காக அவசரத் தேவையின்போது பணத்தை எடுக்க அரசு வசதி செய்துள்ளது.

Continue reading →

குழந்தையுடன் வெளிநாடு போறீங்களா..? – இதையெல்லாம் கவனிங்க…

குட்டிக் குழந்தையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது, குழந்தையின் உணவு, உடை, ஆரோக்கியம் மற்றும் அலுவல் நடைமுறைகள் சார்ந்து கவனம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், சிங்கப்பூரில் வசிக்கும் நம் வாசகி பிருந்தா. பலமுறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட தன் அனுபவத்தில் இருந்து அவர் தரும் குறிப்புகள் இவை…

தட்பவெப்பம்

Continue reading →

இளநீர் வாங்கப் போறீங்களா..?

வெயில் நேரத்தில் இளநீர் கடையைக் கடக்கும்போது, கால்கள் தானாக பிரேக் போடும். கடைக்காரர் சொல்லும் விலையைக் கேட்டு தவித்துப்போவோம். அந்த விலைக்கு ஏற்ற தரம் இருந்துவிட்டால், காசைப் பற்றி கவலையில்லை. எனவே, இளநீர் வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்களைக் கேட்டோம், வண்டலூர் இளநீர் வியாபாரி குமாரிடம்.

தண்ணிக்கு ஏத்த ரேட்டு!

Continue reading →

காலேஜ் டிரான்ஸ்ஃபர், `டிசி’… கல்லூரி மாணவர்களுக்கு கனிவான கைடு!

‘‘கல்லூரி மாணவ, மாணவியர் தனிப்பட்ட காரணங்களினால் வேறு கல்லூரிக்கு மாற்றல் கோரும்போதும், `டிசி’ பெறும்போதும் சில விஷயங்களைக் கவனிக்காவிட்டால் பின்னாட்களில் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடலாம்’’ என்று சொல்லும்  தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் தொடர்பு அலுவலர் டாக்டர் ஆழ்வார்சாமி, பொறியியல் மாணவர்களின் இதுபோன்ற பிரச்னைகளுக்கான தீர்வு மற்றும் ஆலோசனைகளைத் தருகிறார்.

காலேஜ் டிரான்ஸ்ஃபர்

‘‘ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர், வேறு பொறியியல் கல்லூரிக்கு மாற்றல் கோரினால்… உடல்நிலை, பெற்றோர் வேலை நிமித்தம் என அதற்காக அவர் கூறும் காரணம் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில்தான் மாறுதல் கிடைக்கும்.

Continue reading →

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,007 other followers