Category Archives: கம்ப்யூட்டர் செய்தி

கிரெடிட் கார்ட் அளவில் கம்ப்யூட்டர்

லாஸ்வேகாஸ் நகரில் நடந்த ‘நுகர்வோர் மின்னியல் கண்காட்சியில்’ இன்டெல் நிறுவனம் கிரெடிட் கார்ட் அளவிலான, கம்ப்யூட்டிங் கார்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதனை, மேலாகப் பறந்து சென்று இயங்கும் ‘ட்ரோன்’, மனிதனின் இடத்தில் வேலை பார்க்கும் ரோபோக்கள், டிஜிட்டல் வழிகாட்டிகள் மற்றும் இது போன்ற டிஜிட்டல் சாதனங்களில் பொருத்தி இயக்கலாம். இதன் மூலம், “அனைத்திலும் இணையம்” என்ற கோட்பாட்டின் முழுமையான செயல்பாடு விரைவில் சாத்தியமாகும்.

Continue reading →

மொபைல் போனுக்குப் புதியவரா! மொபைல் போன் சிப்கள்

தொடர்ந்து பல புதிய நிறுவனங்கள், மொபைல் போன் விற்பனைச் சந்தையில் புகுந்து கலக்கி வருகின்றன. தங்களுடைய புதிய மாடல் போன்கள் குறித்துப் பலவகையான குறிப்புகளை, பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்கள் வழியாக வெளியிட்டு வருகின்றன. மொபைல் போன் வாங்குபவர்களும், மொபைல் போன் ஒன்றை வாங்கும் முன் அதன் பல கட்டமைப்பு வசதிகள் குறித்து மற்ற

Continue reading →

இலவச ஆண்ட்டி வைரஸ் செயலிகள்

விண்டோஸ் இயக்கத்திற்கென இணையத்தில் கிடைக்கின்ற இலவச வைரஸ் தடுப்பு செயலிகளை, AV Test Institute என்னும் அமைப்பு ஆய்வு செய்து, இந்த ஆண்டில் பயன்படுத்தக் கூடிய ஐந்து செயலிகளைப் பரிந்துரை செய்துள்ளது. மால்வேர் மற்றும் வைரஸ்களிடமிருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பது, நல்ல இணைய தளங்களைக் கூட மால்வேர் எனக் குறிக்கும் தவறை மேற்கொள்ளாமல் இருப்பது, கம்ப்யூட்டர் செயல்பாட்டில் குறுக்கிடாமல் இருப்பது என முக்கியமான ஆறு செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த தேர்வினை நடத்தி, முடிவுகளை இந்த ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட ஐந்து வைரஸ் எதிர்ப்பு இலவச செயலிகளை இங்கு பார்க்கலாம்.

கொமடோ ஆண்ட்டி வைரஸ் Continue reading →

டிஜிட்டல் தகவல்கள்

அண்மையில் Deloitte Mobile Consumer Survey 2016 அறிக்கை ஒன்று ஆய்வுக்குப்பின் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில், 53% பேர், தங்களுக்கு வேண்டிய மொபைல் போன்களை, இணைய தளம் மூலமே வாங்கி வருகின்றனர். 39% பேர் கடைகளில் வாங்குகின்றனர். 2017ல், பலர், (45% பேர்) தாங்கள் 4ஜி அலைவரிசை பயன்பாட்டிற்கு நிச்சயம் மாறி விடுவதாகக் கருத்து தெரிவித்தனர்.

Continue reading →

அதிகக் கொள்ளளவில் முதல் யு.எஸ்.பி. ட்ரைவ்

கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த மெமரி ட்ரைவ்களைத் தயாரித்து வரும் கிங்ஸ்டன் டிஜிட்டல் (Kingston Digital) நிறுவனம், அண்மையில் உலகில் மிக அதிகக் கொள்ளளவினைக் கொண்ட யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றை வடிவமைத்து வழங்கியுள்ளது. இதன் கொள்ளளவு 2 டெரா பைட். இதன் பெயர் DataTraveler Ultimate GT / Ultimate GT Flash Disk. அண்மையில், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற பன்னாட்டளவிலான நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் காட்சித் திருவிழாவின் போது, இது அறிமுகமாகியுள்ளது. GT என்பது Generation Terabyte என்பதாகும்

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்…எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோ ரெகவர்

எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோ ரெகவர்
எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி

Continue reading →

வேர்ட் டிப்ஸ்…படுக்கைக் கோடு அமைக்க

படுக்கைக் கோடு அமைக்க
வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஓர் இடத்தில் படுக்கைக் கோடு அமைக்க வேண்டியதிருந்தால், அதற்கான கீயைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து அழுத்த வேண்டும் என நாம் நினைத்து செயல்படுகிறோம். அதற்கான சுருக்க வழி ஒன்று உள்ளது. ஹைபன் என்னும்

Continue reading →

குரோம் எக்ஸ்டன்ஷன்கள் எடுத்துக் கொள்ளும் இடம்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன. குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம்.

Continue reading →

வேர்டில் எப்2 கீ

டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்? டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள். வேறு வழியாக கட் அல்லது காப்பி செய்து தேவையான இடத்தில் பேஸ்ட்

Continue reading →

வேர்ட் பைல் வகைகள்

டாகுமெண்ட் உருவாக்கம் என்றாலே, கம்ப்யூட்டர்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பைச் சேர்ந்த ஆபீஸ் புரோகிராம் மட்டுமே. பெரும்பாலான பயனாளர்கள், இந்த செயலியில் உருவாக்கப்படும் ஆவணங்களை .doc பார்மட்டிலேயே சேவ் செய்து பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும், இதில் இன்னும் சில பார்மட் வகைகள் உள்ளன. இது குறித்து வாசகர்கள் பலர் தொடர்ந்து கேள்விகள் கேட்டு வருகின்றனர். பல்வேறுபட்ட வகை பார்மட்கள் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்தும் சந்தேகங்களை கேட்டுள்ளனர். தொடர்ந்து வரும் இந்தக் கடிதங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், ஏற்கனவே ஒரு கட்டுரையில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் இங்கு தரப்படுகின்றன.

Continue reading →