இமெயில்களில் ஸ்பேம் தொல்லை அதிகமா? இதுபோன்ற தற்காலிக மெயில்களை பயன்படுத்துங்கள்
இன்றைய டெக்னாலஜி காலத்தில் நாம் பல இடங்களில் நம்முடைய இமெயில் முகவரியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. முக்கியமான விஷயத்திற்காக நம்முடைய தனிப்பட்ட இமெயில்களை பயன்படுத்துவதில் தவறில்லை.
எக்ஸெல் டிப்ஸ்…எக்ஸெல் பைலை விரும்பும்போது பார்க்க
எக்ஸெல் பைலை விரும்பும்போது பார்க்க: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் இந்த விளைவு ஏற்படும்.
வேர்ட டிப்ஸ்..திரைக் குறிப்பினை மறைக்க:
திரைக் குறிப்பினை மறைக்க: வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு? தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.
மொபைல் போன் பயன்களும் பாதுகாப்பும்
இணையப் பயன்பாடு நம் வாழ்க்கையை வளப்படுத்துவது ஒரு புறமிருக்க, அதனை விபத்துகள் சந்திக்கும் களமாகவும் ஹேக்கர்கள் மாற்றி வருகின்றனர். இதுவரை கம்ப்யூட்டர்களில் மட்டுமே இருந்த வைரஸ் ஆபத்து, மிக வேகமாக மொபைல் போன்களிலும் பரவி வருகிறது. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் இயக்க முறைமைகள், ஹேக்கர்களுக்கு எளிதாக வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வியும், மொபைல் போன்களில் இயங்குவதற்கென கிடைக்கும் பாதுகாப்பு செயலிகள் அவ்வளவு வலிமையுள்ளனவாக அமைக்கப்படவில்லையா என்ற சந்தேகமும்
பிரவுசர்கள் தரும் அறிவிப்புகளைத் தடுக்க
இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் அனைத்துமே, அவற்றில் இயங்கும் இணைய தளங்கள், அவை குறித்த அறிவிப்புகளை (notifications) நமக்குக் காட்டிட அனுமதி அளிக்கின்றன. அதற்கேற்ற வகையில், பிரவுசர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஏதேனும், செய்தி மற்றும் வர்த்தக ரீதியிலான இணைய தளங்களைப் பார்க்கையில், உடனே ஒரு பாப் அப் விண்டோ காட்டப்படும். “இந்த தளத்திலிருந்து எந்த தகவலையும் நீங்கள் காணத் தவறாமல் இருக்க வேண்டுமென்றால், நாங்கள் எங்கள் அறிவிப்புகளை உங்களுக்குத்
யூடியூப்புக்கு மாற்று இவை…!
இணையத்தில் வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பினாலும் சரி அல்லது வீடியோக்களைப் பார்த்து ரசிக்க விரும்பினாலும் சரி, யூடியூப் இணையதளம்தான் முதலில் நினைவுக்கு வரும். யூடியூப் முன்னணி வீடியோ பகிர்வுத் தளமாக விளங்கும் நிலையில், யூடியூப் தவிரவும் பல வீடியோ இணையதளங்கள் இருக்கின்றன. அவற்றைத் தெரிந்துகொள்வது உங்கள் இணைய அனுபவத்தை மேலும் செழுமையாக்கவும் உதவும். மாற்று வீடியோ தளங்களில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் தளங்களில் முக்கியமான தளங்களின் பட்டியல் இதோ:
வீமியோ
டிஜிட்டல் செய்திகள்
வர இருக்கும் விண்டோஸ் 10 இயக்கத்திற்கான மேம்படுத்தலில், மைக்ரோசாப்ட் மின் நூல் விற்பனை மையம் ஒன்றை உருவாக்கித் தர இருக்கிறது. எட்ஜ் பிரவுசரில் இந்த மையம் இயங்கும். இதன் வழி, பயனாளர்கள், மின் நூல்களாக வடிவமைக்கப்பட்ட கோப்புகளை, கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இது, விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்திலும் தரப்படும். கல்வி பிரிவில் மைக்ரோசாப்ட் தரும் ஆக்கபூர்வ நிலையாக இது இருக்கும்.
நிதிநிலை அறிக்கையில் பிராட்பேண்ட் இணைப்பு
இந்தியாவிற்கான வர இருக்கும் நிதி நிலை அறிக்கையில், பிராட்பேண்ட் இணைப்பிற்கான சலுகைகள் அதிகம் இருக்க வேண்டும் என, இந்தப் பிரிவைக் கண்காணித்து வரும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வரும் மார்ச் மாதத்தில், இந்தியாவில், 25% நகர மக்களும், 4% கிராம மக்களுமே பிராட்பேண்ட் இணைய இணைப்பினைக் கொண்டிருப்பார்கள். பிராட்பேண்ட் இணைப்பு பெற்ற பயனாளர்களில், 75% பேர் நகரங்களில் வசிக்கின்றனர். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், 4.1% பங்கு, பிராட்பேண்ட் இணைய இணைப்பினால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில், அரசு இதில் தனிக் கவனம் செலுத்தி, இதன் வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் என இத்துறை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 29 லட்சம் சதுர மீட்டரில் வாழும் 130 கோடி மக்களை இணைக்க, பிராட்பேண்ட் இணைப்பு அவசியம் என்பதுவும் உறுதியாகிறது.
விண்டோஸ் 10: இசை இயக்கும் செயலிகள்
சில ஆண்டுகளுக்கு முன்பு, விண்டோஸ் இயக்கத்தில் எந்த இயக்க முறைமையினைப் பயன்படுத்தி வந்தாலும், ‘விண் ஆம்ப்’ (WinAmp) என்னும் புரோகிராம் பாடல்கள் கேட்க பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் பின் வந்த பல செயலிகள், விடியோ மற்றும் ஆடியோ பைல்களை இயக்கப் பல வசதிகளுடன் இலவசமாகக் கிடைத்ததால், விண் ஆம்ப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இறுதியில், அந்த நிறுவனமே, அதனை Continue reading →
எக்ஸெல் டிப்ஸ்…ஒரே நேரத்தில் பல பைல்களைத் திறக்க
ஒரே நேரத்தில் பல பைல்களைத் திறக்க
எக்ஸெல் புரோகிராம் பைல்களை நிர்வகிப்பதில் சிறந்த இயக்க முறையைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று, ஒரே முயற்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளைத் திறப்பதாகும். இதனை மேற்கொள்ள கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
முதலில் Ctrl+O அழுத்தவும். இதனால், Open Dialogue Box திறக்கப்படும்.
பைல் ஒன்றைத் திறப்பதற்கு, பைல் பெயரின் மீது டபுள் கிளிக் செய்வதற்குப் பதிலாக, பைல் தேர்ந்தெடுக்கும் பணியினை