ஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..
பொதுவாக, காய்கறிகளின் விலை இறைச்சி மற்றும் மீன்களின் விலையை விடக் குறைவு.. ஆனால் உலகில் ஒரு காய்கறியின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.. பணக்காரர்கள் கூட அதை வாங்குவதற்கு முன்பு 10 முறை யோசிக்கிறார்கள். இது உலகின் மிக விலையுயர்ந்த காய்கறி என்று அழைக்கப்படுகிறது. ஆம் காய்கறியின் சுவையைப் பெற, நீங்கள் 82 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.
இந்த தனித்துவமான காய்கறி பெயர் ஹாப் ஷூட்ஸ் (hop shoots).
தினம் ஒரு கீரை! ஒரு கம்ப்ளீட் கைடு
உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு இந்தக் கீரைதான்.
கீரைகளின் இயல்புத்தன்மை, அதில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன, யார் சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்கலாம் என்பன உட்பட பல்வேறு பலன்களை விளக்குகின்றனர் ஹெர்ப்ஸ் அலைவ் மையத்தின் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால் மற்றும் நல்ல கீரை ஜெகன்னாதன்.
கீரை உணவு வகைகளை ரசனையோடு ருசியாக செய்துகாட்டி அசத்தியிருக்கிறார்கள் பாரம்பரிய சமையல்கலை நிபுணர் சுந்தரவல்லி திருநாராயணன் மற்றும் செஃப் ராஜா. தினம் நம் உணவில் கீரை இடம்பெற இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.
கீரைகளை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?
தாய்ப்பால் சுரக்கவைக்கும் சுரைக்காய்!
சுரைக்காய் குடுவையில் நீர் நிரப்பி, குளிர்ச்சியாக குடித்து வந்தனர் நம் முன்னோர். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஊட்டத்தையும் தரும் சுரைக்காயில் மருத்துவக் குணங்கள் ஏராளம். சுரைக்காயின் பலன்களைப் பற்றி தேனி சித்த மருத்துவர் வே.ஸ்ரீதேவி எடுத்துச் சொல்கிறார்.
‘சுரைக்காய் வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த நீர் காய். இனிப்பு, கசப்பு என இரு சுவைகளில் இருந்தாலும், இனிப்பு சுவை கொண்டதையே நாம் அதிகமாகப்