Category Archives: குழந்தை பராமரிப்பு

படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள்! – பெற்றோருக்கு ஆலோசனைகள்

கேஜி’ முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள்  படும்பாடு சொல்லி மாளாது.  ஹோம் வொர்க் நேரத்தில் அந்தக் குட்டி

Continue reading →

ஆரம்பம் தான் அடித்தளம்

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. தெரிந்துக் கொள்ளவும், பெற்றோர் பலர், கவனம் செலுத்துவதில்லை. ஏதாவது ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கிறது என்றால், இரண்டு அடி கொடுத்து, குழந்தைகளை உட்கார வைத்து விடுவது, பலரின் இயல்பு.

Continue reading →

பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..?

பல வீடுகளிலும் நாம் காணும் காட்சி. ஆண் குழந்தைகள் வீட்டையே அதகளப்படுத்திக் கொண்டிருக்க, பெண் குழந்தைகள் தன் பொம்மைக்கு அம்மாவாக, செப்பு சாமானில் சோறு, குழம்பு சமைப்பவர்களாக என பெண்களாகவே வளர்வார்கள்.
இது இயற்கையா? ஆண், பெண் வித்தியாசங்கள் அழிந்துவரும் உலகில் இந்த இயல்பில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா? இதில் பெற்றோர்களின் பங்கு என்ன?

Continue reading →

ரத்த சோகையிலிருந்து குழந்தைகள் மீள சில உணவுகள்

= தேனில் ஊறிய நெல்லிக்காய் தினமும் தரலாம்.
= தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் பிசைந்து கொடுக்கலாம்.
= சாப்பிட்ட பின் தினமும் ஒரு பழம் தரலாம். காலை, மாலை இருவேளையும் பாலில் பேரிச்சம் பழம் ஊற வைத்து தரலாம்.
= கருப்பட்டி பணியாரம், அவல் உப்புமா, சத்து மாவுக் கஞ்சி என, வெரைட்டியாக சமைத்துத் தரலாம்.
= உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, அந்த சாற்றை குடிப்பது நல்லது.
= பனை வெல்லம், பொட்டுக் கடலையுடன் நெய் சேர்த்து உருண்டை செய்துக்
கொடுக்கலாம்.
ஜே.பி.ஜெயந்தி, உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்

தாய்ப்பால்… உயிர்ப்பால்… குழந்தைக்கு மட்டுமல்ல!

விழிப்பு உணர்வு

தாய்ப்பால்… ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் உணவு. இணையற்ற சிறப்பு உணவு. தாய்ப்பாலின் சிறப்புகளை தாய்மார்கள் அறியச்செய்யும் விதமாகவும், அவர்களை குழந்தைகளுக்கு அதிக நாட்கள் தாய்ப்பால்

Continue reading →

கருவிலிருந்தே ஆரோக்கியம் – அந்த 1000 நாட்கள்!

ந்தியா ஏழை நாடு அல்ல; ஏழைகளின் நாடு’ என்றார் நேரு. நம் குழந்தைகள் மண் சாப்பிடுவதும், பல்ப்பம் சாப்பிடுவதும் குறும்புக்காக மட்டும் அல்ல. அதற்குப் பின் ஊட்டச்சத்துக் குறைபாடு என்ற தீவிரமான பிரச்னையும் உள்ளது. இன்று, ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது உலகம் முழுவதுமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. ‘உலக அளவில், ஐந்து வயதுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளில் 45 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறக்கிறார்கள்’ என்று கவலை தெரிவித்து உள்ளது ‘உலக சுகாதார ஆய்வு நிறுவனம்.’

குழந்தை பிறந்த பிறகு அதற்கு சத்தான உணவு அளிப்பது மட்டுமே ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கும் என்று நினைத்தால், அது தவறு. கருத்தரித்ததில் இருந்து, 1,000 நாட்கள் வரையிலான காலகட்டம்தான் ஒரு குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.  அதாவது, தாயின் வயிற்றில் இருக்கும் 270 நாட்கள், பிறந்த பிறகு முதல் இரண்டு வருடங்கள் (730 நாட்கள்) என மொத்தம் 1,000 நாட்கள் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமானவை.

‘ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள்தான் அந்தக் குழந்தையின் சுகாதாரம், ஊட்டச்சத்து, புத்திக்கூர்மை, அறிவாற்றல், உயரம், பள்ளியில் செயல்படும் விதம், வாழ்நாளில் தனிநபரை எதிர்கொள்ளும் திறன், உணர்வு மேலாண்மை, சமூகத் தொடர்பு, பழக்கவழக்கம் மற்றும் அணுகுமுறை ஆகியவற்றை முடிவு செய்கிறது எனப் பல்வேறு ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்கிறது யுனிசெஃப் நிறுவனம்.

கர்ப்ப காலம் (முதல் 270 நாட்கள்)

Continue reading →

குழந்தை வளர வளர எவ்வளவு பாலூட்ட வேண்டும்?

பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தியாவசியமாகும். எனவே, அழகு, வடிவம் என்பதை தாண்டி குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து, பாலூட்டுங்கள். Continue reading →

குழந்தைகளின் முடி வளர்ச்சிக்கு..!

குழந்தைப் பருவத்தின்போது வியர்வை அதிகம் சுரப்பதால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும். பச்சைப்பயறு, கடலைப்பருப்பு, பூலாங்கிழங்கு, ரோஜா இதழ், ஆவாரம்பூ போன்றவற்றால் ஆன பொடியைக்கொண்டு குழந்தைகளைக் குளிப்பாட்டி வந்தால் பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பிறந்து 45 நாட்களுக்கு மேல் ஆன குழந்தைகளுக்கு தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் விடுவது, 60 நாட்களுக்கு மேல் ஆன குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவி தலை வாருவது போன்றவற்றின்மூலம் செதில்கள்

Continue reading →

குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா?

உங்கள் குழந்தைகள் தூங்கச் செல்லும் முன், அவர்களது நாளைய வேலைகளை ஞாபகப்படுத்துவதுடன், உள்ளங்களை குளிரச் செய்து, தூங்க வையுங்கள்; அது, மறுநாள் காலை, உற்சாகமாகவும், சுறுசுறுப்புடன் எழுவதற்கு அவர்களுக்கு துணை புரியும்.

Continue reading →

கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்!

பால் கொடுக்கும் தாய்மார்கள், எதை தின்றாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் பலகாரங்கள், புளித்த, பழைய உணவு பொருட்கள், பாக்கெட் உணவுகளை சாப்பிட்டால், குழந்தைக்கு உணவு ஒவ்வாமையால், அடிக்கடி வாந்தி வர வாய்ப்புள்ளது. பொதுவாக, கிராமங்களில் பிறந்தது முதல் ஒரு வயதாகும் வரை, குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மாட்டார்கள்.

Continue reading →