Advertisements

Category Archives: குழந்தை பராமரிப்பு

குழந்தைகளை சாப்பிடவைக்க 10 வழிகள்!

டம்பிடிக்கும் குழந்தைகள் இல்லாத வீடு இருக்கிறதா? அதுவும் அம்மாக்கள் சமைத்து ஊட்டிவிடுவதை, சாந்தமாக,  சீராகச் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். சரியான உணவுதான் ஆரோக்கியம் தரும்; நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும். ஆனால், அடிப்படையான உணவு உண்பதிலேயே பிரச்னை என்றால், என்ன செய்யலாம்?

*வீட்டில் தயாரித்த உணவை ஊட்டிவிடுவதே குழந்தைக்காகப் பெற்றோர் செய்யும் முதல் ஆரோக்கிய வழி. முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால். ஆறு மாதத்திலிருந்து தாய்ப்பாலுடன் கேழ்வரகுக் கஞ்சி, அரிசிக் கஞ்சி செய்து தரலாம்.

Continue reading →

Advertisements

குழந்தையின் கையெழுத்தை அழகாக்கலாம்!

ங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்ற மனக்குறை உள்ள பெற்றோரா நீங்கள்? அவர்களுக்கு நீங்களே சிறு சிறு பயிற்சிகள் அளித்து அவர்களின் கையெழுத்தை  நேர்த்தியாக மாற்றியமைக்க இயலும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த

Continue reading →

வீடியோ கேம் வில்லன்! பெற்றோர்களே உஷார்…

உங்கள் குழந்தை எப்போது பார்த்தாலும், வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டே இருக்கிறார்களா? யார்கிட்டயும் அதிகம் பேசாமல் தனி உலகத்தில் இருப்பதைப் போல இருக்கிறார்களா? அப்படியென்றால், அவர்களுக்கு வரக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இதுபற்றி குழந்தைகள் நல

Continue reading →

உங்கள் குழந்தையோடு விளையாடுவது எவ்வளவு முக்கியம் தெரியமா?

சோர்வாக இருக்கும்போது உங்கள் மனதை புத்துணர்வாக்க பல்வேறு வழிகள் உள்ளன. சரி உங்கள் மனதை ஊக்குவிக்க என்ன செய்யலாம்? உண்மை என்னவென்றால் உங்கள் குழந்தைகளுடன் செலவிடுவதை விட மகிழ்ச்சியான ஒன்று என்று எதுவும் கிடையாது. அது உங்கள் குழந்தைகளோ அல்லது அக்கம் பக்கத்துக்கு குழந்தைகளோ, உங்களை மகிழ்விப்பதில் அவர்கள் தவறுவதே இல்லை.

Continue reading →

முதல் புன்னகை… முதல் மழலை… முதல் நடை!

குழந்தைகள் நலம்

குழந்தைகளை, ஒரு நந்தவனத்தில் இருக்கும் செடிகளில் உள்ள பூக்களுடன் ஒப்பிடலாம். எத்தனை விதமான செடிகள் இருந்தாலும், பூக்கள் இல்லையென்றால் அந்த நந்தவனம் அழகு பெறாது, வெறும் வனமாகத்தானே இருக்கும்! குழந்தை இருக்கும் வீட்டின் குதூகலத்தை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. அதன் முதல் அழுகை, முதல் புன்னகை, முதல் மழலை, முதல் நடை என ஒவ்வொன்றும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துபவை!

Continue reading →

குழந்தைகளுக்கு வாங்கித்தரக் கூடாத பொருட்கள்!

விளையாட்டுப் பொருட்கள் குழந்தைப் பருவத்தின் மிகப்பெரிய புதையல். அது பாதுகாப்பற்றதாக இருந்தால் உடல்நலத்துக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும். விளையாட்டுப் பொருட்கள் என்பது விளையாட்டுக்கானது மட்டும் அல்ல… குழந்தையின் புத்திக்கூர்மை, இணைந்து செயல்படும் இயல்பு, அவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புஉணர்வு என்று பலவகைகளிலும் குழந்தையின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவை விளையாட்டுப் பொருட்கள்.

Continue reading →

படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள்! – பெற்றோருக்கு ஆலோசனைகள்

கேஜி’ முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள்  படும்பாடு சொல்லி மாளாது.  ஹோம் வொர்க் நேரத்தில் அந்தக் குட்டி

Continue reading →

ஆரம்பம் தான் அடித்தளம்

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. தெரிந்துக் கொள்ளவும், பெற்றோர் பலர், கவனம் செலுத்துவதில்லை. ஏதாவது ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கிறது என்றால், இரண்டு அடி கொடுத்து, குழந்தைகளை உட்கார வைத்து விடுவது, பலரின் இயல்பு.

Continue reading →

பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..?

பல வீடுகளிலும் நாம் காணும் காட்சி. ஆண் குழந்தைகள் வீட்டையே அதகளப்படுத்திக் கொண்டிருக்க, பெண் குழந்தைகள் தன் பொம்மைக்கு அம்மாவாக, செப்பு சாமானில் சோறு, குழம்பு சமைப்பவர்களாக என பெண்களாகவே வளர்வார்கள்.
இது இயற்கையா? ஆண், பெண் வித்தியாசங்கள் அழிந்துவரும் உலகில் இந்த இயல்பில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா? இதில் பெற்றோர்களின் பங்கு என்ன?

Continue reading →

ரத்த சோகையிலிருந்து குழந்தைகள் மீள சில உணவுகள்

= தேனில் ஊறிய நெல்லிக்காய் தினமும் தரலாம்.
= தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் பிசைந்து கொடுக்கலாம்.
= சாப்பிட்ட பின் தினமும் ஒரு பழம் தரலாம். காலை, மாலை இருவேளையும் பாலில் பேரிச்சம் பழம் ஊற வைத்து தரலாம்.
= கருப்பட்டி பணியாரம், அவல் உப்புமா, சத்து மாவுக் கஞ்சி என, வெரைட்டியாக சமைத்துத் தரலாம்.
= உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, அந்த சாற்றை குடிப்பது நல்லது.
= பனை வெல்லம், பொட்டுக் கடலையுடன் நெய் சேர்த்து உருண்டை செய்துக்
கொடுக்கலாம்.
ஜே.பி.ஜெயந்தி, உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்