எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்!
* கவலைப்படுவதால் எந்தக் கவலையும் சரியாகப்போவதில்லை. மாறாக, அது இன்றைய மகிழ்ச்சியைக் காணாமல்போகச் செய்துவிடும். எனவே, நாளையைப் பற்றிய கவலையை நாளை பார்த்துக் கொள்வதென முடிவெடுங்கள்.
மிரளவைக்கும் லைஃப் ஸ்டைல்! – அத்துமீறும் ஆடம்பரம்…
“படிக்க வேண்டிய வயசுல பல்சர் கேக்குறாங்க. பைக் ரேஸ், மது, புகை, காஸ்ட்லீ மொபைல் எனச் சுத்துறாங்க. முகத்தைப் பார்த்துப் பேசுறதைவிட முகநூலில்தான் அதிகமா இருக்காங்க. சுருக்கமாச் சொல்லணும்னா… நல்ல வாழ்க்கையைவிட, ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் இன்றைய தலைமுறை பசங்க எதிர்பார்க்குறாங்க.
அமைதியான நதியில்…!
மனதை ஒரு நிலைப்படுத்தும் போது கிடைக்கும் வெற்றி, அதை அலைபாய விடும் போது தோல்விக்கு வித்திடுகிறது. மனம் குழப்பத்தில் நிறைந்திருக்கும் போது, சிந்தனைகள் தடம் மாறுகின்றன; இது, ஆசை, பேராசை, பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஏற்பட முக்கிய காரணமாகிறது.
மேல் தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை!
செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை பார்த்து, பொறாமைபட தெரிந்த அளவிற்கு, அவர்களது வெற்றி ரகசியங்களை அறிந்து கொள்ளத் தெரியவில்லை நம்மவர்களுக்கு!
‘எவ்வளவு தேறும் இவருக்கு…’ என்று கேட்கத் தெரிந்த அளவிற்கு, ‘இவர்களைப் போல நாமும் வர வேண்டாமா…’ என்று உந்து சக்தியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிவது இல்லை.
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது?
சமீப ஆண்டுகளில், அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள், சமூக பிரச்னையாக மாறிக் கொண்டிருக்கிறது. ‘கணவன் – மனைவிக்குள் ஒத்துவரலைன்னா பிரிந்துவிட வேண்டியது தான். அதானே இருவரின் வாழ்க்கைக்கும் நல்லது’ என்ற மனோபாவமும், இளம் வயதினரிடையே உள்ளது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வது என்பதற்கெல்லாம் நேரமும் இல்லை; பொறுமையும் இல்லை.
குறை கூறினால் கோபம் வருகிறதா?
நாம் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகள் அல்லர். ஆனால், ஏனோ நமக்கு மனதின் அடித்தளத்தில் படிந்து விட்ட உணர்வு, நம்மை எவரும் விமர்சிக்கவே கூடாது என்பது. நாம் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்வு மிக
தவறானது.
‘நீங்க படிக்கட்டுல தடுமாறி விழுந்திங்களே… அதை கவனிச்சேன்; என்னமாய் விழுந்தீங்க தெரியுமா… வேற எவனாச்சும் இப்படி விழுந்திருந்தால், பல்லுப் படுவாயெல்லாம் உடைஞ்சிருக்கும்; எலும்பெல்லாம் முறிஞ்சிருக்கும்…’ என்று படு செயற்கையாக ஒருவர் விழுந்ததைக் கூட பாராட்ட, ‘அப்படியா சொல்றீங்க?’ என்று முகம் பூரித்துப் போகும் முகரக் கட்டைகளும் இருக்கத் தான் செய்கின்றன.
சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்
நண்பர்கள் என்றால் நல்லா பேசுவர், நம்முடன் நேரம் செலவழிப்பர்; நம்மிடமிருந்து அனைத்தையும் பகிர்ந்து கொள்வர். ஆனால், சிலர் தனக்ெகன்று ஒரு வேலையோ, வாய்ப்போ, வாழ்க்கையோ வந்து விட்டால், மிக சுயநலமாய், அப்படியே கழட்டிவிட்டுவர். சுயநலம் என்பது எவ்வளவு கொடுமை என்பது, அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.
இவர்கள், நான் உனக்கு இதைச் செய்தால், நீ எனக்கு அதைச் செய் என, ஒப்பந்தத்தை மனதுக்குள் வைத்து கொள்வர். நீ மட்டும் அதைச் செய்தால், நான் உனக்காக இதைச் செய்துவிடுவேன் என, பதிலுக்கு பதில் செய்யத்தான் கணக்கு போடுவர். நட்புகளுக்கு இடையில் மட்டுமல்ல, சொந்தங்களுக்கு, உறவுகளுக்கு இடையிலும் இப்படி நடந்துக் கொள்வோர் இருப்பர்.பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே, நாம் வாழும் வாழ்வு அர்த்தமானதாக இருக்க வேண்டும். வாழ்ந்தோம் எனும் சொல்லுக்கும், வாழ்வு எனும் சொல்லுக்கும் ஒரு சிறப்பான அர்த்தம் இருக்கிறது. ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், பலருக்கும் அர்த்தமாக, உதாரணமாக வாழ்ந்தோம் என்று, வாழ்வு இருக்க வேண்டும்.
மனமே… ரிலாக்ஸ்!
வேலை, வேலை, வேலை என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்காமல், இடையிடையே மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வது நல்லது.
யாரிடம் பேசினால், உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள், உங்கள் மனதுக்கு தெளிவைத் தரும்.
ஏற்றுக் கொள்ளுங்கள்: இந்த உலகத்தில், ஒருவரே எல்லாவற்றையும், தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட; மலையைத் தலையால் முட்டி உடைக்க முடியாது. ஆனால், சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில், உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.
பிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்!
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அது ஒப்ப நில்!
இந்த குறளுக்கு நமக்கு கண்டிப்பாய் விளக்கம் தெரிந்திருக்கும். நமக்கு துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சியே, அந்த துன்பத்தை தூர காணாமல் போக்கிவிடும். அந்த துன்பத்திற்கு நிகர், அந்த நேர மகிழ்ச்சி தான்.
சமீபத்தில் ஒரு வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இதற்கான ஒரு புது விளக்கம், நாம் ஒத்துக் கொள்கிற மாதிரி, வேறு விதமாக கூறப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றால், – துன்பம் வரும்போது நகர்ந்து விடுங்கள் என அர்த்தம்.
அதற்காக, ‘துன்பத்தை பார்த்து பயந்து ஓடி விடுங்கள்’ என்று நேர் அர்த்தம் கொள்ளக் கூடாது; அந்த துன்ப மனநிலையிலிருந்து நகர்ந்து, தள்ளி நின்று, அந்த பிரச்னையை – துன்பத்தை கவனியுங்கள்; தீர்வு கிடைக்கும் என்பதாக விளக்கம் கூறினர்.
இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை,
சாதிக்க விருப்பமா.. அவமானப்படுங்கள்
என்னை நானே யாரென்று
புரிய எனக்கு தேவைப்படும்
ஓர் ஆயுதம் தான் அவமானம்!
இது உண்மை என்பது போல்,
அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும். அவமானங்கள் தான், நம்மை திசைமாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்தஅவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்ப கட்ட அடிதளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கான படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும்.
நம்மை அவமானப் படுத்து வோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அவமானங்களுக்காக குமைந்து கொண்டிருக்காதீர்கள். நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும்போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும்.
நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்து தான் ஆகவேண்டும்.
நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. அந்த குப்பையை தனக்கான உயிர்ச்சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளை தருவதில்லையா! நாம் அந்த செடியை போல இருக்க வேண்டாமா? மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கி செல்ல வேண்டாமா?
உங்களுடைய குறைகளை சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியை பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்! ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘நம்மை இவ்வளவு அவமானப்
படுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்.
சோர்ந்து போகாதீர்
அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றி
யாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள்.
எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தை கண்டு சோர்ந்து போய், அந்த காரியத்திலிருந்து விலகிவிடுவது.
மனித இனத்தை தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான்.
ஆகவே, அவமானப்படுவது ஒன்றும் பெரிய தப்பில்லை. இப்போது சொன்ன விஷயங்கள் அனைத்துமே, நல்ல விஷயங்களுக்கு மட்டுமே… வேறு மாதிரியான காரியங்களுக்கு, நாங்கள் பொறுப்பல்ல!