Category Archives: சிந்தனைகள்

நாட்களை செயல்களால் நிரப்புவோம்!

இப்போது தான் புத்தாண்டு பிறந்தது போல் இருக்கிறது. அதற்குள் பாதியை கடந்து விட்டோம். புது ஆண்டு பிறந்த போது, என்னென்னவோ தீர்மானம் செய்து, சபதமும் செய்தோம்.
ஆனால், ‘கடந்த மாதங்களில் என்ன சாதித்தோம்…’ என்று நினைத்துப் பார்த்தால், சிலரால் தான் திருப்திப்பட்டுக் கொள்ள முடியும்.
சாதித்த திருப்தியை வெளிப்படுத்தக் கூடியவர்கள் கூட, ‘உடன் இருப்போரின் தொந்தரவால் தான், இந்த அளவாவது சாத்தியமாயிற்று…’ என்பர்.
உங்களது சொந்த வாழ்வில், சுய முயற்சியில், கடந்த ஆறு மாத பணிகள் திருப்திகரமா இருந்தனவா என்று கேட்டால், ‘வீட்டுல இருக்கறவங்களோட நச்சரிப்பு தாங்க முடியாம தான் இதெல்லாம் செய்ய முடிந்தது; இல்லா விட்டால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது…’ என்று உதட்டை பிதுக்கு கின்றனர்.
ஆக, வெளியிலிருந்து வந்த நெருக்கடிகள் தான், இவர்களை உசுப்பியிருக்கின்றனவே தவிர, சுயமாக, ஆர்வமெடுத்து சாதித்தவை என்றால், கோணித்துணியிலே வடிகட்டப்பட்ட பழச்சாற்றின் கதையாக, குடிக்கிற பாத்திரத்திற்கு ஏதோ சொட்டு சொட்டாகத் தான் வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
மிக குறுகிய காலமே வாழ்ந்த பாரதியும், விவேகானந்தரும், ஜான்சி ராணியும் சாதித்தவை மகத்தானவை! 80 – 90 வயது வரை வாழ்ந்து, பூமிக்கு பாரமாய் இருந்தவர்கள், வரலாற்றுப் பக்கங்களில், ஒரு வரி கூட தேற மாட்டார்கள்.

Continue reading →

தோல்வியை கொண்டாடுங்கள்

தோல்வி என்றால் என்ன; போட்டியில் தோற்பது தான்
தோல்வி என, நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல.
ஏதாவது ஒரு காரியத்தை எடுத்து அதை முழுமையாக முடிக்காமல் விடுவதும் தோல்விதான். இலக்கும், திறமையும் ஒத்துப் போகாத போது, செயலை முடிக்க முடியாது. தோல்வி ஏற்படும்.

Continue reading →

மாற்றம் ஒன்றே மாறாதது

இரவு பகலாகிறது; பகல் இரவாகிறது. கோடை போய் குளிர் வருகிறது; வறட்சி போய் வெள்ளம் வருகிறது. பூ காயாகிறது; காய் கனியாகிறது; கனி செடியாகிறது. குழந்தை பெண்ணாகிறாள்; பெண் தாயாகிறாள். இளமை மாறி முதுமை ஆட்சி செய்கிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறோம்.
மாற்றம் மட்டும்தான் நிரந்தரம். அனைத்து உயிரினங்களும், அவற்றுக்கே உரித்தான குணங்கள் மற்றும் பண்புகளை உள்ளடக்கியிருக்கின்றன. அவை நிலையானது என, நம்பப்படுகிறது

Continue reading →

மனமே இன்பமாய் இரு

நாட்டின், மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் என்பது ஒரு மனநோய்.
மன அழுத்தம் ஏற்படும் போது அழுகை, சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுதல், எந்த நேரமும் சோகமாகவும், தனிமையாகவும் இருப்பது ஆகியவை நடக்கும். இவை சாதாரண மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்

Continue reading →

மறப்போம் மன்னிப்போம்

‘மறந்து விட்டேன், மறந்து போனது, அச்சச்சோ! இப்படி மறந்து போகிறேனே’ என்று அங்கலாய்க்கிறோம். ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்தத்தான் முயல்கிறோம், முயல வேண்டும் என்றும் சொல்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு விஷயத்தை மறப்பதற்கு தான் உண்மையில் முயல வேண்டி இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை மறக்க முடியாமல் தான் துன்பப்படுகிறோம்; துன்பப்படுத்துகிறோம்.

Continue reading →

உறவுகளை சார்ந்திருங்கள்

உயிர் உள்ளது, உயிர் அற்றது என்று, உலகில் உள்ளவற்றை பிரிக்கலாம். உயிர் உள்ள அனைத்தும், உணர்வை வெளிப்படுத்துகின்றன. உணர்வுகளை வெளிப்படுத்துவதால் உறவுகள் ஏற்படுகின்றன. அடுத்த கட்டமாக, உணர்வுகளை பகிர்ந்து கொள்வதும் அவசியமாகிறது. இப்படித் தான், அறிவு மற்றும் எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன.

Continue reading →

தேர்வுமுடிவுகள் மட்டுமே வாழ்க்கையா

அறிவு என்பது, அனுபவம் மூலம் கிடைப்பது. மனிதன், தனது அனுபவம் மட்டுமல்லாது, பிறரது அனுபவங்களில் இருந்தும் கற்றுக் கொள்கிறான்.
புத்தகம் என்பது, பிறரது அனுபவங்களின் தொகுப்பு. ஒரு மனிதனின் அறிவை,
சக மனிதன் தனக்கும் சமூகத்திற்கும், பயன்படுத்தி கொள்கிறான். அதற்கு பெயர்தான் வேலை அல்லது தொழில்.

Continue reading →

பிரேக் இல்லாத வாகனமா நீங்கள்?

நிறையப் பேருக்கு தெரியாத ஒரு உண்மையை சொல்லட்டுமா? கப்பலுக்கு, ‘பிரேக்’ கிடையாது.
ஓர் இடத்தில், கப்பலைச் சரியாக நிறுத்த, ஒரு கப்பலோட்டி எவ்வளவு சிரமப்படுவார் தெரியுமா… கப்பல் ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல; கப்பல் மோதி, திமிங்கலங்கள் இறப்பதும்; சிறு படகுகள் சிதறுவதும் இதனால்தான்.
ஆனால், பிரேக் இல்லாத மனிதக் கப்பல்களோ, தங்களைத் தான் முதலில் சேதப்படுத்திக் கொள்கின்றன.
‘அவன் யார் பேச்சும் கேட்க மாட்டான்; அவனுக்கு என்ன தோணுதோ, அதைத் தான் செய்வான். நாங்க எவ்வளவோ சொல்லி பாத்துட்டோம் திருந்துறதாத் தெரியல…’ என்று, தங்கள் குடும்ப உறுப்பினர் பற்றி, மற்றவர்கள் புலம்பும் வார்த்தைகள் உங்கள் காதுகளைக் கடந்து போயிருக்கும்.

Continue reading →

வரிசை மீறலாம்… தப்பில்லை

உலகம் முறைப்படி இயங்க வேண்டும் என்பதற்காகவே, சில நடைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. எதுவும் ஒழுங்காக, முறையாக நடக்கும் பட்சத்தில், ஏற்றத்தாழ்வுகள் களையப்படும். இதனால், முரண்பாடுகள், சலுகைகள் ஆகியவற்றிற்கு வழி இருக்காது. இதற்காக ஏற்படுத்தப்பட்டதே வரிசை முறை! வரிசை முறையில், வலியவன், எளியவன் என்ற பாகுபாடு அறவே இருக்காது.

Continue reading →

உங்கள் உணவில் விஷம்! பூச்சிக்கொல்லி பயங்கரம்

ந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன பூச்சிக்கொல்லி மருந்துகள். பெயர்தான் ‘பூச்சிக்கொல்லி…’, அவை உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான். இதில் சமீபத்திய வரவு ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள். பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தில், பூச்சிகளின் தொடர் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சு இது. 

தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான். இந்தப் பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பேரழிவுக்கு உதாரணம், கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி. ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரித் தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது. அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப் பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள். வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை. பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன!

கோவில்பட்டியில் உள்ள மண்வளப் பரிசோதனை நிலையத்தின் வேளாண் அலுவலரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வம் இது தொடர்பாக விவரிப்பவை அனைத்தும் அதிரவைக்கும் உண்மைகள்…

Continue reading →