Advertisements

Category Archives: ஜோதிடம்

ஒரு மனையை தேர்வு செய்யும் முன் பார்க்க வேண்டிய வாஸ்து முறைகள்!

ஒரு மனையை தேர்வு செய்ய முற்படும் பொழுதே அதில் உள்ள மண்ணை வைத்து அதாவது வாசனையை வைத்து இதில்  வீடு கட்டலாம் கூடாது என்று சொல்ல முடியும் என்று நூல்கள் சொல்கிறது. இத்தனை துல்லியமாக நம்மால் கவனிக்க  முடியாது சில விவரங்களை வைத்து நாம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

Continue reading →

Advertisements

கண் திருஷ்டியை போக்க சில எளிய யோசனைகள்!

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஏனோ அதற்கான பலன் அவர்களுக்கு கிடைக்காமலேயே இருக்கும்.

நாள் முழுவதும் உழைப்பைக் கொட்டினாலும் அதற்கான பலன் கிடைக்காது தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும். இதற்கான காரணங்கள் பல உள்ளது. முறையாக நேரத்தை பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை ஹார்ட் வொர்ட் விட ஸ்மார்ட் வொர்க் தான் பெஸ்ட் என்று பல காரணங்களை சொன்னாலும் கடைசியாக இப்படியும் இருக்கலாம் என்று சிந்திக்கும் விஷயம் கண் திருஷ்டி!

Continue reading →

வாழ்வைச் செழிக்க வைக்கும் ராசி மந்திரங்கள்!

வாழ்வைச் செழிக்க வைக்கும் ராசி மந்திரங்கள்!

முற்பிறவி கர்மவினைகளே இப்பிறவியின் பலாபலன்களுக்குக் காரணமாக அமைகின்றன என்கின்றன நம் ஞான நூல்கள். முற்பிறப்பில் செய்த பாவ – புண்ணியங்களுக்கு ஏற்ப, அவற்றுக்கு உகந்த பலாபலன்களை வழங்கும் வகையில் நவகிரகங்கள் அமைந்திருக்கும் நிலையில்தான், ஓர் உயிர் இப்புவியில் ஜனிக்கிறது. அந்த தருணத்தை அடிப்படையாகக்கொண்டே ஜனன ஜாதகம் கணிக்கப்படுகிறது.

Continue reading →

மீனம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)


குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடன்களால் கலக்கம் உண்டாகும். திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும். வழக்குகள் சுமுகமாகும்.

Continue reading →

கும்பம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)

கண்டு அஞ்சாதவர்களே!
உங்கள் ராசிக்கு 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன்  மனைவிக்கு இடையில் அந்நியோன்யம்  அதிகரிக்கும். கோயில்களுக்குச் சென்று வருவீர்கள்.

Continue reading →

மகரம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்வதால் வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது. உழைப்புக்கான அங்கீகாரமோ, பாராட்டோ கிடைக்காது. பல வேலை களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். தன்னம்பிக்கை குறையும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிலர் பணியின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடும்.

Continue reading →

தனுசு -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17  முதல் 2.10.18 வரை அமர்வதால் கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.  

Continue reading →

விருச்சிகம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)

மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்களே!
   உங்கள் ராசிக்கு விரயஸ்தானமாகிய 12-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். செலவுகள் துரத்தும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சொத்துப் பிரச்னைக்குச் சுமுகமாகத் தீர்வு காண முயலவும். பணப்பற்றாக் குறையின் காரணமாக வெளியில் கடன் வாங்கவும் நேரிடும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

Continue reading →

துலாம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)

மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்பவர்களே!
குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசியில் ஜன்ம குருவாக அமர்வதால் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வது நல்லது. வேலைச் சுமை அதிகரிக்கும். தம்பதிகள் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம்.  சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

Continue reading →

கன்னி -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)

சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்பவர்களே!
உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் இடத்தில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். மனதில் உற்சாகம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். கட்டடப் பணியை மீண்டும் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

Continue reading →