Category Archives: ஜோதிடம்

குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -துலாம்

துலாம்

துலாம்

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் போராடி முடிக்க வேண்டி வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமானவரை நம்ப வேண்டாம்.

Continue reading →

குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -கன்னி

கன்னி

 

கன்னி

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களின் பலம், பலவீனத்தைத் தெரிந்துகொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது நல்லது.

Continue reading →

குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -சிம்மம்

.

சிம்மம்

 

சிம்மம்

போற்றுதல், தூற்றுதல் இரண்டையும் ஒன்றாகவே எண்ணும் நீங்கள், யாருக்காகவும் உங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாதவர். முன்வைத்த காலைப் பின்வைக்காத நீங்கள், திடீர் முடிவுகளை எடுத்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்வீர்கள்.

Continue reading →

குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -கடகம்

.

கடகம்

 

கடகம்

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 6-ம் வீட்டில் மறைகிறார். சகட குரு சங்கடங்கள் தருவாரோ என்று கலங்க வேண்டாம். குரு பகவான் ஆட்சிபெற்று அமர்வதால் நல்லதே நடக்கும்.

Continue reading →

குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -ரிஷபம்

ரிஷபம் :

 

ரிஷபம்

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சிபெற்று அமர்வதால் அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவார். பயணங்களும் தவிர்க்க முடியாத செலவுகளும் இருந்துகொண்டேயிருந்தாலும் வருமானம் குறையாது. உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும் பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக்கொள்வது நல்லது.

Continue reading →

குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -மேஷம்

மேஷம்:

மேஷம்

ங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைந்திருந்து எதையும் எட்டாக்கனியாக்கியதுடன், மன அழுத்தத் தையும் தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி வீடான 9-ம் வீட்டில் நுழைவதால், வாழ்வில் புதிய வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் இப்போது கூடி வரும். அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வ மாகவும் செயல்படுவீர்கள்.

குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக் கும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

Continue reading →

எந்த மாதம் வீடு கட்டலாம்?’

வாஸ்துவும் வழிகாட்டலும்!
 
தேவர்களின் தச்சனான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டது வாஸ்து சாஸ்திரம். பிற்காலத்தில் பல்வேறு ரிஷிகளும் பண்டிதர்களும் அதை நூல்களாகத் தொகுத்து நமக்குத் தந்திருக்கிறார்கள்.

‘சிற்ப ரத்தின சமுச்சயம்’ எனும் நூல் வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது.

‘குடும்ப வாழ்வில் உழலும் மக்களுக்கு வீடு என்ற ஒன்று அவசியம். சாஸ்திரம் சொன்னபடி சந்நியாச தர்மத்தில் தங்களை அர்ப்பணித்து வாழும் சந்நியாசிகளுக்கு ஆசிரமம் என்பது மிக முக்கியம். நாட்டையும் மக்களையும் நல்லவிதத்தில் கட்டிக் காக்கும் ஓர் அரசனுக்கு அரண்மனை முக்கியம்.

Continue reading →

லக்னத்துக்கும் ராசிக்கும் என்ன வித்தியாசம்..?

லக்னப்படியும் ராசிப்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு நன்மைகளை அளிக்கும் தன்மை கொண்டதாக இருந்து, அதன் தசை நடக்கும்போது பிரமாதமான அதிர்ஷ்ட பலன்களை அளிக்கும். லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்க அந்தக் கிரகம் விதிக்கப்பட்டிருந்தால், அதன் தசையில் 60% நன்மைகளே வழங்கும்.

Continue reading →

சொந்த வீடு வாய்க்குமா?

எலி வலையானாலும் தனி வலை வேண்டும்’ என்பார்கள் பெரியோர்கள். சொந்த வீட்டின் அவசியத்தை உணர்த்தும் வாக்கியம் இது.

`சொந்த வீடு’ கனவுடன், ‘வாழ்நாள்ல எனக்கு சொந்தவீட்டில் வாழும் யோகம் உண்டா, இல்லையா’ என ஏங்கித் தவிப்பவர்கள் ஏராளம்!

அவர்களில் நீங்களும் ஒருவரா? உங்களுக்குச் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டா?

உங்கள் உள்ளங்கையைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்களேன்!

Continue reading →

எலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன?

எலுமிச்சம்பழத்திற்கு தீய சக்திகளை விரட்டும் திறன் உண்டு என்று நமது நம்பிக்கை அமைந்திருப்பதே இதன் காரணம். எலுமிச்சம் பழச் சாறினில்  சிட்ரிக் அமிலம் இடம்பெற்றிருக்கிறது. இந்த சிட்ரிக் அமிலத்திற்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு விசை என்பது உண்டு. தன்னிலை மறந்து அருள்  வந்து ஆடுபவர்களின் வாயினில் எலுமிச்சம்பழத்தினை திணிப்பதை பார்த்திருப்போம். அவர்களும் அதனைக் கடித்து அதன் சாறு நாவினில்  இறங்கும்போது தன் சுயநினைவிற்குத் திரும்புவதையும் கண்டிருப்போம். குங்குமம் என்பது மஞ்சளோடு சுண்ணாம்பினைச் சேர்த்து தயாரிக்கப்படுவது.

Continue reading →