Category Archives: தொடர்கள்

நம்பர் 1 -மைக் ஸ்பென்சர் பெளன்

வ்வொரு முறை ஆழ்ந்து தூங்கி எழும்போதும் மைக் ஸ்பென்சர் பௌன், தனக்குள் சில கேள்விகள் கேட்டுக்கொள்வார்… ‘நாம இப்ப எங்க இருக்கோம்… இது எந்த ஊர்… எந்த நாடு… எந்த கண்டம்?’ – 23 வருடங்களாக இதே கேள்விகளுடன்தான் கண் விழிப்பார்.  காரணம், மைக் ஒரு தன்னிகரற்ற தேசாந்திரி; நவீன நாடோடி; நாம் வாழும் காலத்தின் ஆகச் சிறந்த பயணி. தன் பயணத்தால் மைக் செய்திருக்கும் சாதனையை, உலகில் பிறந்த எவரும் இதுவரை செய்தது இல்லை. அதைப் பரிபூரணமாக உணர, மைக்கின் அனுபவங்களோடு நாமும் பயணம் செய்வோம்…

Continue reading →

நம்பர் 1 -ஏஞ்சலினா ஜோலி

‘இவளெல்லாம் ஒரு மனுஷியா?’ என்ற ஒரு துருவ உணர்வுக்கும், ‘இவதான்யா மனுஷி!’ என்ற எதிர்த் துருவ உணர்வுக்கும் இடையே வார்த்தைகளால் பாலம் அமைத்து வாசித்துக்கொண்டே சென்றால், ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரினி ஏஞ்சலினா ஜோலியைத் தெளிவாக உணர்ந்துகொள்ளலாம். தறிக்கெட்டுத் திரிந்த கவர்ச்சிப் புயல், ஒருகட்டத்தில் மனிதநேயத்தில் மையம்கொண்டு தீராத பேரன்பையும் பெருங்கருணையையும் பொழியத் தொடங்கிய ஆச்சர்ய வாழ்க்கை இது!

ஆஸ்கர் விருது வென்ற அமெரிக்க நடிகரான ஜோன் வோய்டுக்கும், அமெரிக்க நடிகையும் தயாரிப்பாளருமான மார்ச்செலைனுக்கும் 1975-ம் ஆண்டு  ஜூன் 4-ம் தேதி லாஸ் ஏஞ்சலஸில் பிறந்த ஏஞ்சல், ‘ஏஞ்சலினா ஜோலி’. ‘Dad’ என தன் மழலை மொழியில் ஏஞ்சலினா உச்சரிக்க ஆரம்பித்த காலத்திலேயே, தந்தை விவாகரத்து வாங்கிக்கொண்டு குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவிட்டார். தாய் மார்ச்செலைன், தன் மகளையும் மூத்தவன் ஜேம்ஸையும் தனியாக இருந்து வளர்க்க ஆரம்பித்தார். பின்னர் அவரது வாழ்வில் பில் என்கிற காதலரும் நுழைந்தார்.

சிறுவயதிலேயே ‘இவ வேற மாதிரி

Continue reading →

நம்பர் 1 நிக் வாலெண்டா

ந்த நாய்கள் காட்டுக்குள் ஓடுகின்றன. சிறுவன் நிக், நாய்களின் பின்னால் ஓடுகிறான். எங்கெங்கும் பெரிய மரங்கள், ராட்சசப் பூக்கள். எங்கோ யானை பிளிறும் சத்தம்; அருகிலேயே சிங்கத்தின் கர்ஜனை; புலியின் உறுமல். எதற்கும் பயப்படாமல் அவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். ஒரு புல்வெளி விரிகிறது. அது மலைச்சரிவை நோக்கி நீள்கிறது. புல்வெளியைக் கடந்து நாய்கள் மலை மீது ஏற, இவனும் ஏறுகிறான். மலையின் உச்சியில் இருந்து ஒரு மாபெரும் பள்ளத்தாக்கில், பேரிரைச்சலுடன் கண்கள்கொள்ளாத அளவில் அருவி ஒன்று பாய்கிறது. நிக் மூச்சிரைக்க அங்கே சென்று நிற்கிறான். ‘அருவியின் குறுக்கே நடந்து செல்’ என ஒரு குரல் அன்பாகக் கட்டளையிடுகிறது. அவன் திரும்பிப் பார்க்கிறான். வெள்ளை உடை அணிந்த பெரியவர் ஒருவர் புன்னகையுடன் நிற்கிறார். ‘போ, அருவியின் குறுக்கே நடந்து செல்.’ அவன் சந்தோஷமாக நடந்து செல்ல ஆயத்தம் ஆகிறான்.

Continue reading →

நம்பர் 1 -லின்சே அடாரியோ

‘நான் ஒரு பெண்; நான் ஒரு பத்திரிகையாளர். புகைப்படங்கள் எடுப்பது என் பணி. அதுவும் ராணுவ வாகனங்கள் சீறும், தோட்டாக்கள் பாயும், குண்டுகள் வெடித்துச் சிதறும் போர்க்களங்களில்தான் என் வேலை. எதிரிகள் மீது பாயவேண்டிய குண்டு எந்த நேரமும் என் மீதும் பாயலாம்; நான் கடத்தப்படலாம்; ஒரு பெண்ணாகிய நான், வன்புணர்வுக்கும் ஆளாக நேரிடலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். இருந்தாலும் 15 வருடங்களாக இந்த வேலையை நேசித்துச் செய்கிறேன். எனக்கு கணவர் உண்டு; மகனும் உண்டு; என்னைச் சுற்றி எப்போதும் பேராபத்தும் உண்டு. ஆனாலும், நான் என் கேமராவுக்குப் பின் இருந்தபடி இந்த உலகைக் காண்பதையே விரும்புகிறேன். யுத்தக் களங்களில் இருந்தபடி வரலாற்றைப் பதிவுசெய்யவே மெனக்கெடுகிறேன். இதுவே நான். என் பெயர் லின்சே அடாரியோ!’

Continue reading →

நம்பர் 1 ஜாதவ் பேயங்

பிளிறல் சத்தம் கேட்டு சட்டென விழித்த ஜாதவ், வேகமாக எழுந்து சென்று பார்த்தார். ஆம், யானைகள்தான் வந்துகொண்டிருந்தன. 20, 25… அதற்கு அதிகமாகவும் இருக்கலாம். நள்ளிரவு என்பதால், சரியாகத் தெரியவில்லை. ஜாதவின் குடியிருப்புப் பகுதியை நோக்கித்தான் அந்தக் காட்டு யானைகள் வந்துகொண்டிருந்தன. அவர் தன் குடும்பத்தினரை எழுப்பி, குடிலில் இருந்து வெளியேற்றி, பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக்கொண்டார். யானைகள், ஜாதவின் வசிப்பிடத்தைத் துவம்சம் செய்துவிட்டுக் கடந்துசென்றன. ஜாதவும் அவரது குடும்பத்தினரும் அந்த நிகழ்வுகளை எல்லாம் ‘மகிழ்ச்சி’ ததும்பப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

Continue reading →

நம்பர் 1 -கேட்டி லெடக்கி

2003-ம் ஆண்டு அமெரிக்க நீச்சல் உலகின் புதிய விடிவெள்ளியாக ‘மைக்கேல் பெல்ப்ஸ்’ உதித்திருந்த சமயம். ஆறு வயது சிறுமியான கேட்டி லெடக்கி, அப்போதுதான் நீச்சலில் ‘அகர முதல…’ கற்கத் தொடங்கியிருந்தாள். அவளுக்கு பெல்ப்ஸைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. குதூகலப் புன்னகையுடன் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டாள்.

2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம். அமெரிக்க அளவில் நடந்துகொண்டிருந்த நீச்சல் போட்டி ஒன்றின் 400 மீட்டர் தகுதிச் சுற்றை, 4 நிமிடம் 2 நொடி, 67 மில்லிநொடியில் கடந்தார் பெல்ப்ஸ். சிறிது நேரம் கழித்து நடந்த 400 மீ பெண்கள் தகுதிச் சுற்றுப் போட்டியில், அதே 04:02:67 கால அளவில் கடந்து கரையேறினார் கேட்டி. பெல்ப்ஸ், புன்னகையுடன் கேட்டியிடம் சென்றார்.

‘நம்ம ரெண்டு பேருக்கும் போட்டி வெச்சுக்கலாமா?’

‘கண்டிப்பா. ஒரு மணி நேரம் கழிச்சு வெச்சுக்கலாம்.’

‘இல்லல்ல. இப்போதான் நீ நீச்சலடிச்சுட்டு வந்து களைப்பா இருக்க. இப்பவே போட்டி வெச்சுக்கிட்டாதான், நான் ஜெயிக்க முடியும்.’

நீச்சல் உலகின் ஈடுஇணையற்ற ஹீரோ பெல்ப்ஸ் பட்டெனச் சிரிக்க, 18 வயது கேட்டியின் முகத்தில் அத்தனை சந்தோஷம். மூன்றே ஆண்டுகளில் நீச்சல் உலகின் முடிசூடா ராணியாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் கேட்டியை, உலகமே இன்னும் ஆச்சர்யம் விலகாமல்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு கேட்டியின் நீச்சல் ராஜ்ஜியத்தை யாராலும் அசைத்துப்பார்க்கவே முடியாது என பெட் கட்டுகிறார்கள் நீச்சல் நிபுணர்கள். அப்படி என்னதான் சாதித்திருக்கிறாள் இந்தச் சின்னப் பெண்?

Continue reading →

உணவின்றி அமையாது உலகு!-1

உணவு / சாப்பாட்டுச் சரித்திரம்

ணவால் ஆனது உலகம். இந்த உயிர்க்கோளத்தில் உள்ள பல்லாயிரம் கோடி  ஜீவன்களுக்கும் உணவுதானே உயிர் ஆற்றல் தரும் ஜீவாமிர்தம்!

உணவுக்கு என ஒரு வரலாறு உண்டு. உயிரினம் தோன்றிய காலத்துக்கு முன்பே தொடங்குகிறது உணவின் வரலாறு. மனிதனுக்கும் முன் தோன்றியது உணவுதான். மனிதன் இங்கு பிறந்தபோதே, அவனுக்கான உணவுகள் இருந்தன.  நாடோடியாகத் திரிந்த மனிதன், வேட்டையாடி உணவை உண்டான். நெருப்பைக் கண்டுபிடித்ததும்,  உணவைச் சமைத்துச் சாப்பிடும் முறையைக் கற்றுக்கொண்டான். ஓர் இடத்தில் குடியேறி நிலையான வாழ்க்கையை வாழ்ந்தபோது, விவசாயத்தைக் கற்றுக்கொண்டான். வரலாறு முழுக்க நடந்த பல போர்களுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் உணவும் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. உணவின் வரலாறு என்பது உண்மையில் மனிதகுல வரலாறே!

Continue reading →

நம்பர் 1 -அருணிமா சின்ஹா

அவன் ஓங்கி ஓர் உதை உதைக்க, அருணிமா ஓடும் ரயிலில் இருந்து வெளியே விழுந்தார். அதே சமயத்தில் பக்கத்துத் தண்டவாளத்தில் எதிர் திசையில் ஒரு ரயில் வேகமாகக் கடந்துகொண்டிருக்க, அருணிமாவின் உடல் அந்த ரயிலின் மீது மோதி, அதே வேகத்தில் தூக்கி எறியப்பட்டது. அந்த நள்ளிரவுப் பொழுதில் சில நொடிகள் அதிர்ச்சியில் அசைவற்றுக்கிடந்த அருணிமா, ‘தடக் தடக்… தடக் தடக்… தடக் தடக்…’ என இன்னொரு ரயிலின் சத்தத்தையும், தான் விழுந்துகிடந்த தண்டவாளத்தில் அதிர்வையும் உணர்ந்தார். அடுத்த ரயில் வெகுவேகமாக அருணிமாவை நோக்கி வந்துகொண்டிருக்க, அவரால் ஒரு இன்ச்கூட நகர முடியவில்லை. அதற்குள் ரயில் நெருங்கிவிட…

…கட்ச்ச்ச்ச்!

வாழ்வின் ஒட்டுமொத்த வலியையும் அந்தக் கணத்தில் உணர்ந்தார் அருணிமா. ரயில் ஏறி, அருணிமாவின் இடது கால் முட்டிக்குக் கீழே கூழாகியிருக்க, ரத்தம் பெருக்கெடுக்க   கண்ணீருடன் அலறினார். தெளிந்த வானத்தில், நட்சத்திரங்கள் சிரித்துக்கொண்டிருந்தன. எங்கு இருந்தோ திரண்டு வந்த எலிகள், பிய்ந்த காலின் ரத்தத்தைச் சுவைக்க ஆரம்பித்தன. அவற்றை விரட்ட, தன் கைகளைக்கூட அசைக்கச் சக்தி இல்லாமல் அருணிமா கிடந்தபோது, அடுத்த ரயில் வரும் சத்தம்.

தடக் தடக்… தடக் தடக்..!

Continue reading →

நம்பர் 1 -தவாக்குல் கர்மான்

ன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதமா?’ என முகம்மது அல் நமி கேட்டபோது, 17 வயதான தவாக்குல் கர்மான் வெட்க ஈர்ப்பில் தலைகுனிந்து, சிணுங்கல் புன்னகையுடன் ‘சம்மதம்’ எனச் சொல்லவில்லை. தலைநிமிர்ந்து முகம்மதுவின் கண்களை அழுத்தமாகப் பார்த்து, சில நிபந்தனைகளை முன்வைத்தார். ‘என் படிப்பை நிறுத்தக் கூடாது. நான் பர்தாவுக்குள் முடங்கிக்கிடக்க மாட்டேன்; வேலைக்குச் செல்வேன். இந்தச் சமூகத்துக்காக, பெண்களுக்காக, மக்களுக்காகக் களம் இறங்கிப் போராடுவேன். இவை எல்லாம் உங்களுக்குச் சரிப்படும் என்றால், திருமணத்துக்குச் சம்மதம்.’

முகம்மது முழு மனதுடன் தவாக்குலை ஏற்றுக்கொண்டார். அவர்கள் சந்தோஷமாக மண வாழ்க்கையைத் தொடங்கினார்கள். இன்று தவாக்குல், மூன்று குழந்தைகளுக்கும்; தன் நாட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அமைதிப் புரட்சிக்கும் தாய். பற்றி எரிந்துகொண்டிருக்கும் ஏமனில், வருங்காலத்தில் ஜனநாயகத்தை மலரவைக்கும் சக்தி, தவாக்குல் கர்மானுக்கு மட்டுமே உண்டு.

Continue reading →

நம்பர் 1- டாக்டர் டாம்

2011-ம் ஆண்டின் கோடைகாலம். உச்சிவேளையில் சூரியனால் சூடாகிக்கொண்டிருந்தது சூடானின் மேய்ச்சல் நிலம் ஒன்று. மாடு மேய்க்கும் 14 வயது டேனியல், தூரத்தில் போர் விமானம் வரும் சத்தம் கேட்டு, பயத்துடன் தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான். சத்தம் தன்னை நெருங்குவதை உணர்ந்து மிரட்சியுடன் மேலே பார்த்தான். அந்தப் போர் விமானம் வீசிய குண்டு ஒன்று, அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது. பதறி எழுந்து, பாய்ந்து ஓடினான். சற்றுத் தள்ளித் தெரிந்த பெரிய மரம் ஒன்றை இறுகக் கட்டிப்பிடித்த நொடியில், குண்டு பெரும் சத்தத்துடன் மரத்தின் மறுபுறம் விழுந்து, வெடித்துச் சிதறியது.

மரத்தோடு மரமாக உயிர்துடிக்க நின்றிருந்த டேனியல், புகைமூட்டம் சற்றே கலைந்த கணத்தில் மரத்தைவிட்டு விலகி, தன் கைகளை நோக்கினான். அவை இல்லை. கைகள் இரண்டுமே, முழங்கைக்குக் கீழ் சிதைந்து காணாமல்போயிருந்தன. ரத்தம் ஒழுக, சதை பிய்ந்து தொங்கியது. கதறி அழக்கூடத் திராணி இல்லாமல், நடைபிணம்போல கொஞ்ச தூரம் நடந்து சென்ற டேனியல், ஓர் இடத்தில் அப்படியே மயங்கி விழுந்தான்.

Continue reading →