Advertisements

Category Archives: படித்த செய்திகள்

காமமும் கற்று மற!

கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்

கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்

பொய் ஒன்றை ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய்

கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்…’

– கவிஞர் அறிவுமதி

பாலியல் மருத்துவத்துக்கு சாதி, மதம், இனம் எதுவும் கிடையாது. ஆண், பெண்… இவர்களால்தான் உலகம் இயங்குகிறது. `இப்போதிருப்பவர்களில் இனி யாருக்கும் குழந்தையே பிறக்காது; விலங்குகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கும்கூட அப்படியேதான்…’ என்ற நிலை ஏற்பட்டால், உலக இயக்கம் நின்று போய்விடும் அல்லவா?

Continue reading →

Advertisements

இறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா?

சீனாவிற்கு அடுத்து தங்கத்துக்கு அதிக அளவு நுகர்வோர் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த நிலையில், இந்திய நுகர்வோர் இன்னும் அதிக விலை கொடுத்து தங்கத்தை வாங்க நேரிடுமோ என்கிற கலக்கம், பட்ஜெட்டுக்குப்பிறகு ஏற்பட்டுள்ளது. காரணம், 2013-ம் ஆண்டிற்குப்பிறகு சென்ற வெள்ளியன்று தங்க இறக்குமதிக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

Continue reading →

பாரமா… பாசமா? – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்!

வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற இசை நாடகம் ‘அஸ் யூ லைக் இட்’ (As you like it). அந்த நாடகத்தின் ஓர் அத்தியாயத்தில் ‘உலகமே ஒரு நாடக மேடை’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில், மனித வாழ்க்கையின் ஏழுநிலைகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அவற்றில் இறுதி இரண்டுநிலைகளில் முதுமையைப் போற்றியிருப்பார். முதியவர்களின் இறுதிநிலையை ‘இரண்டாம் குழந்தைப் பருவம்’ என்று வர்ணித்திருப்பார். வயதானவர்கள் குழந்தைகளைப் போன்றவர்களே. ஆனால், அவர்களைக் குழந்தைகளைப்போல கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்கிறோமா?

Continue reading →

பட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகைக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படும்; பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்த பல பெரிய திட்டங்கள் அறிவிக்கப்படும்; வேலைவாய்ப்பினைப் பெருக்குவதற்குக் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே இருந்தது.

Continue reading →

விவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்!

விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களை நாடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.  வழக்கின் முடிவில், நீதிமன்ற உத்தரவின்பேரில் தாய் அல்லது தந்தையிடம் குழந்தைகள் அனுப்பப்படுவார்கள். பெற்றோரின் விவாகரத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய சூழல்களில், அந்தக் குழந்தையின் உளவியல் மிகவும் பாதிக்கப்படும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விவரிக்கிறார், உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

விவாகரத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

Continue reading →

பெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா?

பட்ஜெட் வரும்போதெல்லாம் சில புதிய வரிகள் விதிக்கப்படலாம் என்கிற பேச்சு பொதுவாக எழுந்து அடங்குவதுண்டு. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாகவே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாள்களுக்குமுன்பு பலரும் ஒரு விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அது, பரம்பரைச் சொத்துக்கு வரி விதிப்பது (Inheritance tax). புலி வருது, புலி வருது என்கிற மாதிரி கடந்த காலத்தில் இந்த வரி வரவில்லை என்றாலும் வருகிற வெள்ளிக்கிழமை அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் 2019-20-ம் ஆண்டுக்கான முழுபட்ஜெட்டில் இந்த வரி குறித்த வரி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Continue reading →

டேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.!

ரிலையன்ஸ் ஜியோ கிகாபைபர் தனது சேவையை துவங்கி கிட்டதட்ட ஒரு ஆண்டு ஆகிவிட்டது. மற்ற நிறுவனங்களை ஒட்டு மொத்தமாக சேதம் செய்ய பொது வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திக்கின்றது.

Continue reading →

கிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது!

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எதை சார்ந்து வாழ ஆரம்பிக்கிறோமோ பின்னாளில் நமக்கே தெரியாமல் அதை நாமே உருக்குலைத்து விடுகிறோம் என்பதுதான் உண்மை. அப்படி அவ்வளவாக சொல்லப்படாத பல நைஜீரிய தலைமுறைகளின் ஆயுளை முடித்த கச்சா எண்ணெய்யின் கதை இது.

`நமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்து விடுகிறோம்” என்கிற பிரபலமான ஒரு வரி உண்டு. பின்விளைவுகள் குறித்து எந்தப் பார்வையும்

Continue reading →

குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்?

திருமணமான பெண்கள் இது போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது சரியல்ல. தம்பதிகளிடையே போதிய புரிதல் இருந்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. தங்களுக்கான எல்லைகளை இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுக்கலாம்.

Continue reading →

கோபம் வந்தால் சிரியுங்கள்!

கோபத்தை நிர்வகிக்கத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் என்பதைப் பட்டியல் எடுத்தால், அதில் இடம்பெறுபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்கள், சில எளிய வழிகள் மூலம் அதைச் சமாளிக்கலாம்.

அமைதி… அமைதி!

Continue reading →