Advertisements

Category Archives: பொதுஅறிவு செய்திகள்

சர்வதேச உடல்பருமன் தினம் (World Obesity Day)

உலகம் முழுவதும் அக்டோபர் 26-ஆம் தேதி உடல் பருமன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை எல்லோரிடத்திலும் அதிகரிப்பதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.
இன்றைய உலகில் பெரும்பான்மையோர், குறிப்பாக இளைஞர்கள் தங்கள் தோற்றம் குறித்து அதிருப்தி அடைந்து எடையைக் குறைப்பது

Continue reading →

Advertisements

சர்வதேச உடல் காய தினம் (World Trauma Day)

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17-ஆம் நாள் சர்வதேச உடல் காய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் உடல் காயத்தால் உண்டாகும் மரணத்தைத் தவிர்த்து ஓர் உயிரைப் பாதுகாக்க நாம் கையாள வேண்டிய வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

Continue reading →

எக்ஸ்ரே ஒரு நொடியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!

ருத்தருக்குக் கால் உடைஞ்சி போகுதுன்னு வெச்சுக்குவோம். நம் முன்னோர்கள் என்ன பண்ணிட்டிருந்தாங்கன்னா… அந்த ஆளைப் படுக்கப் போட்டு இரண்டு பக்கமும் நாலு பேர் உட்கார்ந்து கையையும் காலையும் அமுக்கிப் பிடிச்சுக்குவாங்க. ஒருத்தர் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா கையை வெச்சு அமுக்கிப் பார்த்தே அவரோட அனுபவத்தை வெச்சுக் குத்துமதிப்பா எத்தனை இடத்தில, என்ன டிசைன்ல உடைந்திருக்கும்னு கணக்குப் போட்டு ஒரு தப்பையை வெச்சுக் காலைச் சுத்தி இறுக்கிக் கட்டிவிட்டுருவார். 

Continue reading →

எரிபொருளாகும் காஃபி!

காஃபி குடித்தபின் ஃபில்டரில் வீணாகும் காஃபித்தூளை எரிபொருளாக பயன்படுத்தமுடியும் என பயோபீன் நிறுவனம் சத்தியம் செய்கிறது. பயோபீன், ஷெல் நிறு வனத்தோடு இணைந்து இந்த பயோஃப்யூல் ஐடியாவை மேம் படுத்த உள்ளது. “லண்டனிலுள்ள பஸ்களில் காஃபியிலிருந்து எடுக்கும் காஃபி ஆயில் மற்றும் மினரல் ஆயில் ஆகியவற்றை எரிபொருளாக பயன்ப்படுத்தவிருக்கிறது” என்கிறது ஷெல் நிறுவனம். லண்டனில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் டன்கள் காஃபித்தூள் கழிவுகள் உருவாகின்றன. இதிலிருந்து உருவாகும் மீத்தேன், கார்பன் டை ஆக்சைடை விட தீங்கானது. இங்கிலாந்தில் குவித்து வைக்கப்படும் கழிவு,  குப்பைகளுக்கும் வரி உண்டு.
“B20 என்ற பெயரில் காஃபி ஆயில் மற்றும் பிற ஆயில்களை பயன்படுத்தி எரிபொருளை தயாரிக்கிறோம்” என்கிறார் பயோபீனின் நிறுவனர் ஆர்தர் கே. 15%  கார்பன் வெளியீட்டை இந்த எரிபொருள் பயன்பாடு தடுக்கிறது. உடனடி யாக கடைகளில் கிடைக்காவிட்டாலும் காஃபி எரிபொருள் முயற்சியைப் பாராட்டலாம்தானே!

கண் பரிசோதனையின் போது காட்டப்படும் சார்ட் எப்படி உருவானது தெரியுமா?

கண் பரிசோதனைக்காக நாம் செல்லும் போது, அது என்ன பவராக இருந்தாலும் அல்லது கண்களில் வேறு ஏதேனும் கோளாறாக இருந்தாலும் சரி சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு சார்ட்டை காட்டி படிக்கச் சொல்வார்கள்.

சிறியது முதல் பெரியது வரை என வெவ்வேறு வடிவங்களில் எழுத்துக்கள் எண்கள் இருக்கும். எழுத்துக்களை எளிதாக படித்து விடலாம் ஆனால் கண்களின் பார்வையில் பிரச்சனை இருந்தால் அதே எழுத்துக்கள் படிப்பதற்கு சிரமமாக இருக்கும்.

Continue reading →

முடிவுக்கு வருகிறது mp3 வரலாறு..! காரணம் என்ன?

பாடல்களின் நேரத்தை வைத்து, தூரத்தைக் கணக்கிடும் தலைமுறை நாம்! அதே நேரத்தில், MP3 பாடல்களைக் கேட்ட கடைசித் தலைமுறையும் நாமாகத்தான் இருப்போம். இணையத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்படும் ஆடியோ வடிவமான MP3 தொடர்பான காப்புரிமை நிறுத்தப்படுவது தான் அதற்குக் காரணம்.

Continue reading →

மூளை ரகசியம்!

மனிதனின் உடலுக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம்!

நமது உடல் ஒரு பெரிய அதிசயம்தான். உடலின் ஒரு செல்லும், உறுப்பும் என்னென்ன மாஜிக் செய்கின்றன என்று தனித்தனியாக பார்த்தால் வியப்புதான் மேலிடும். அதற்கு முன் உடலின் ஆரோக்கிய செயல்பாடுகளுக்கு உதவும் அதிசய அம்சங்கள் பற்றி பார்ப்போம்.
மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639. மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து, மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது. மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33. மனித மூளையின் எடை 1.4 கிலோ.

Continue reading →

பாக்டீரியாவை அழிக்கும் விலங்கின் பால்

சூப்பர் பக்ஸ் (Super Bugs) என அழைக்கப்படும், மருந்துகளுக்கு அடங்காத கொடிய பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி, டாஸ்மேனியன் டெவில் (Tasmanian devil) என்ற விலங்கின் பாலில் இருப்பது தெரியவந்துள்ளது. ஆன்ட்டி-பயாடிக் (Anti-Biotic) எனப்படும் நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத கொடிய பாக்டீரியாக்கள், ‘சூப்பர் பக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. இவை, ஆன்டி-பயாடிக் மருந்துகளின் துஷ்பிரயோகத்தால் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இவற்றை எதிர்கொள்ள மருத்துவ உலகம் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலையில் நடந்த ஆய்வில், அந்நாட்டில் வாழும் பாலூட்டி விலங்கான டாமேனியன் டெவில் சுரக்கும் பால், சூப்பர் பக்ஸை அழிக்கும் திறன் கொண்டது என, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

காரணம் ஒன்று உபயோகம் பல..

கிரிக்கெட் விளையாட்டில் ‘விலகு சுழல் வீச்சு’ (Spin – off) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்! அதைப்போலவே தொழில்நுட்பத்திலும் Spin Off Technology என்று உள்ளது. ஒரு பொருளைக் கண்டுபிடித்த காரணம் ஒன்றாக இருக்கும். அதைப் பிற வழிகளில் பயன்படுத்துவதை இது குறிக்கிறது. என்ன என்று பார்க்கலாம்! அன்றாடம் பயன்படுத்துகிற பல பொருட்களின் கண்டுபிடிப்புக்குக் காரணமாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் ‘நாசா’ (NASA) உள்ளது. கிட்டத்தட்ட 6300 Continue reading →