Category Archives: மருத்துவம்

கபாலம் காக்கும் டைட்டானியம் கவசம்

கரங்களில் சாலை விபத்துகள் பெருகிவிட்டன. நமது அன்றாட வாழ்க்கையும், நம்மைச் சார்ந்திருப்பவர்களின் எதிர்காலமும் தினம் தினம் கேள்விக்குள்ளாகிக்கொண்டு இருக்கிறது. விபத்துகளால் பலருக்குக் கை, கால் மற்றும் மூட்டு எலும்பு முறிவுச் சேதங்கள் ஏற்படுகின்றன. தலையில் அடிபட்டால், கபாலச் சிதைவு ஏற்படுகிறது.

Continue reading →

படர்தாமரையிலிருந்து தப்பிக்க சிறந்த வழிகள்

ருமப் பிரச்னைகளில் முதன்மையானது படர்தாமரை (Ringworm). இது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடியது. உடலில் எங்கு வேண்டுமானலும்  வரக்கூடியது என்றாலும் பெரும்பாலும், உடலின் மறைவான பகுதிகளில் வந்து, வெளியே சொல்லவும் முடியாமல், சரியான சிகிச்சையும் எடுக்க முடியாமல் வாட்டி வதைக்கும்.

படர்தாமரை தோன்றுவதற்கான காரணம்

Continue reading →

வலியை நீக்கும் ட்ரிகர் பாயின்ட் தெரப்பி

குழந்தைகள் விளையாடும்போது தடுக்கி விழுந்து அதனால் ஏற்படும் வலியோ, பெரிய எடையைத் தூக்கியதால் உண்டான தசைப்பிடிப்போ, விபத்துகளுக்குப் பிறகு வரும் பிரச்னையோ… எதுவாக இருந்தாலும் இருக்கவே இருக்கிறது ட்ரிகர் பாயின்ட் தெரப்பி. தசைகளில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம், இறுக்கம் காரணமாக வலி ஏற்படுகிறது. மென்மையாக அழுத்தம் கொடுத்து, வலியை நீக்கும் நுட்பம்தான் ட்ரிகர் பாயின்ட். இதில், முதலில் வலி முடிச்சுகளைக் கண்டுபிடித்து, அதற்குத் தக்க அழுத்தங்கள் தரப்படும். பின்னர், அந்தத் தசைகளுக்கு ஸ்ட்ரெச் கொடுக்கப்படும். தொடர்ந்து செய்யும் பயிற்சிகளால், தசை வலுபெறும். வலியும் நீங்கும்.

Continue reading →

அறுவைசிகிச்சைக்கு முன் அனஸ்தீசியா கவனம்!

காயம், அறுவைசிகிச்சை என்றால் வலிநிவாரணிகள், மயக்க மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மயக்க மருந்து இல்லை என்றால், நம் நிலை என்ன என்று யோசித்துப்பார்த்தாலே பயம் வரும். அந்தக் காலத்தில், நம் பாரம்பரிய மருத்துவங்களில் வலி நிவாரணியாக அபின், கஞ்சா போன்ற போதைவஸ்துக்கள் பயன்படுத்தப்பட்டன. டாக்டர் வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன் முதன்முதலில் ஈதர் என்ற மயக்க மருந்தை நோயாளிக்கு அளித்தார். அதன் மூலம், நோயாளிக்குக் கழுத்தில் இருந்த கட்டி, வலி இன்றி அகற்றப்பட்டது. இன்று, பல் பிடுங்குவதில் இருந்து சிசேரியன் வரை எந்த அறுவைசிகிச்சையாக இருந்தாலும், மயக்க மருந்து இல்லாமல் செய்யப்படுவது இல்லை.

Continue reading →

கர்ப்பிணி பெண்கள் வெளிக்கூற தயங்கும் 7 தர்மசங்கடமான விஷயங்கள்!

பெண் கர்ப்பம் தரிக்கும் வரை மட்டும் தான் ஆணும் சற்று கஷ்டப்படுகிறான். கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை அனுதினமும் அல்லாடுவது பெண் தான்.

அதிலும், கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாத சுழற்சியில் பெண்கள் நிறைய தர்மசங்கடமான நிகழ்வுகளை சந்திக்க நேரிடும். Continue reading →

கண்ணே நலமா?

கோடை காலத்தில் அதிகம் பரவக்கூடியது கண்களில் தொற்று. அதிக உஷ்ணத்தால், ‘மெட்ராஸ் ஐ’ உட்பட, பல்வேறு தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கண்களில் தொற்று இருந்தாலும், வருவதற்கு முன்கூட முன்னெச்சரிக்கைக்காக இந்த டிப்ஸ்.

Continue reading →

தழும்பை மறைக்கும் லேசர் சிகிச்சை!

கல்லூரி மாணவி ஒருவருக்கு, ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், முகத்திலும், கழுத்திலும் காயமேற்பட்டு, சில நாட்களில் சரியானது. ஆனால், காயத்தால் ஏற்பட்ட தழும்பு மட்டும் ஆறாமல், அவரையும், அவரது பெற்றோரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.இவ்வகையான காயங்களால், ஆறு மாதத்தில் தழும்பு பெரிதாவது நின்றுவிடும். இதை, ‘ஹைப்பர் ட்ராபிக்’ தழும்பு என்போம். ஆறு மாதங்களுக்கு பின்னும் வளர்ந்து கொண்டே செல்லும் தழும்புகளை, ‘கீலாய்டு’ தழும்பு என்கிறோம். இத்தகைய தழும்புகள், பாதிக்கப்பட்ட பகுதியையும் தாண்டி, சாதாரண திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Continue reading →

இனி, பாட்டு கேட்டபடியே ஸ்கேன் செய்து கொள்ளலாம்!

தீராத தலைவலி, தலையில் காயம், முதுகெலும்புப் பிரச்னை போன்ற காரணங்களுக்காக மருத்துவமனைக்குச் சென்றால், சில நேரங்களில் எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்குப் பரிந்துரைப்பார்கள். எம்.ஆர்.ஐ என்றதும் பலருக்கும் பயம் ஏற்படும். எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்துகொள்ள பலரும் மறுப்பதற்கு முக்கியக் காரணம், அந்த இயந்திரத்தில் இருந்து

Continue reading →

சர்ஜரிக்கு முன் 10 கேள்விகள்

ருத்துவர்களுக்கும் மக்களுக்குமான பிணைப்பு, இந்தியாவைப் பொறுத்தவரை மிகக் குறைவு. பெரும்பாலான இடங்களில் மருத்துவர்களும் மக்களும் சகஜமாகப் பழகுவது இல்லை. மருத்துவர்களைப் பார்த்துப் பயப்படுவதும், தெய்வமாகப் பார்ப்பதும்தான் காலங்காலமாக இங்கு நடந்துகொண்டிருக்கிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கை இன்மை, வேலைப்பளு போன்ற காரணங்களால் மருத்துவர்களும் நோயாளிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை பற்றி, விரிவாகப் பேசுவது கிடையாது. இதனால், மருத்துவம் பற்றிய புரிதலே மக்களுக்கு இருப்பது இல்லை. மருத்துவம் பற்றிய முழுமையாகத் தெரியாத நண்பர்களின் அனுபவங்களையும், கட்டுக்கதைகளையும் நம்பிக் குழம்பிவிடுகின்றனர். இதனால், சரியான நேரத்தில், சரியான சிகிச்சை எடுக்காமல், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

Continue reading →

முத்துப்பிள்ளை கர்ப்பம்

பெண்ணின் கரு முட்டையும், ஆணின் உயிரணுவும் சேர்ந்து உருவாவது தான் கரு. அந்த கரு சாதாரணமாக வளராமல், நஞ்சு மட்டும் அசாதாரணமாக, குட்டிக் குட்டி நீர்க்குமிழிகள் வடிவில் வளர்ந்து, திராட்சைக் கொத்து மாதிரி, கர்ப்பப்பையை நிறைத்தால், அதை, ‘முத்துப்பிள்ளை கர்ப்பம்’ என்கிறோம். அதாவது கட்டி மாதிரியான தோற்றம்; ஆனால் புற்றுநோயில்லாத கட்டி. முத்துப்பிள்ளை கர்ப்பத்தில், இரு வகைகள் உள்ளன. ஒன்று முழுமையானது. இன்னொன்று பகுதி மட்டும்.

Continue reading →