Advertisements

Category Archives: மொபைல் செய்திகள்

டேப்லெட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தையில், ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு தொழில்நுட்பச் சாதனம் டேப்லெட். இது மக்களால் பெரிதும் விரும்பப்படுவதற்குக் காரணம், எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில், எளிமையாக வடிவமைக்கப்பட்டிருப்பதுதான். ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில், லேப்டாப் அளவுக்கு விலை அதிகமாகவும் இருக்கக்கூடாது என நினைப்பவர்கள், தாராளமாக டேப்லெட்டைத் தேர்வு செய்யலாம்.

Continue reading →

Advertisements

உங்கள் சமூகவலைத்தள கணக்குகளை சீர்செய்ய உதவும் 5 செயலிகள்

இன்றைய டெக்னாலஜி உலகில் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்காத நபர்களே இல்லை என்று கூறலாம். அதுமட்டுமின்றி ஒன்றுக்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு சமூக வலைத்தளத்தின் புரஃபொலையும் மேனேஜ் செய்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

Continue reading →

சைலென்ஸ்… தியானம் செய்யும் நேரமிது!

 

சைலென்ஸ்… கிட்டத்தட்ட உலக மக்கள் அனைவரும் தேடித்திரியும் ஒரு விஷயம். யோகா, தியானம் என ஏதேனும் ஒரு வகையில் மனதை அமைதிப்படுத்தவே மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்காக வந்திருக்கும் ஆப் தான் “காம்”. தியானம் செய்ய விரும்பும் தொடக்க நிலையாளர்கள் முதல், தொடர்ந்து செய்யும் நிபுணர்கள் வரை எல்லோருக்குமான விஷயங்களை வைத்திருக்கிறது இந்த அப்ளிகேஷன். ஐந்து நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரையிலான தியானங்களுக்கு வழிகாட்டுதல்கள், நல்ல இசை, அழகான புகைப்படங்கள், மூச்சுப் பயிற்சிகள் என ஏகப்பட்ட விஷயங்கள் நம்மை ஈர்க்கின்றன. ‘ஐயோ.. இன்னைக்கு மெடிட்டேஷன் கிளாஸ் ஆச்சே’ என அலுத்துக்கொள்ளும் ஆள்களுக்குப் பொறுமையாக, அழகாக நோட்டிஃபிகேஷன்ஸ் தருகிறது “காம்”.
முயற்சி செய்து பாருங்கள்.
ஆண்ட்ராய்டு லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.calm.android&hl=en
ஆப்பிள் லிங்க்: https://itunes.apple.com/us/app/calm.com/id571800810

பம்ப்அப்” அப்ளிகேஷன்

தனி ஒருவனை விட “நாங்க நாலு பேரு” என்பதுதான் மாஸ் ஹிட். உடற்பயிற்சிகளும் அப்படித்தான். தனியாகச் செய்வதை விடக் குழுவாகச் செய்தால் எளிது. ஆனால், அப்படி ஒரு பார்ட்னர் கிடைக்காமல் பணம் கட்டிவிட்டு ஜிம்முக்குப் போகாமல் விட்டவர்கள் பலர். அவர்களுக்காகவே ஆண்ட்ராய்டு தந்திருக்கும் அதிசயப் பரிசுதான் “பம்ப்அப்” அப்ளிகேஷன். 150 நாடுகளைச் சேர்ந்த 50 லட்சம் பேர் இந்த ஆப்பில் இருக்கிறார்கள். நடப்பது, ஓடுவது  தொடங்கிப் பளு தூக்குதல் வரை உற்சாகத்தையும் டிப்ஸ்களையும் அள்ளி வழங்குகிறது இந்த வொர்க் அவுட் கம்யூனிட்டி. உடனே டவுன்லோடு செய்யுங்கள். “நான் தனியாளு” இல்லை எனப் பன்ச் பேசிக்கொண்டே வொர்க் அவுட் பண்ணுங்கள்.
ஆண்ட்ராய்டு லிங்க்: https://play.google.com/store/apps/details?id=co.pumpup.app&hl=en

ஆப்பிள் லிங்க்: https://itunes.apple.com/ca/app/pumpup-health-fitness-community/id573070442?mt=8

எங்கேயோ வைத்த ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டதா??

நேரம் எப்போதும் ஒரு மாதிரி இருக்காது. ஆசை ஆசையாய் வாங்கிய ஸ்மார்ட்போன், ஏதோ ஞாபகத்தில் எங்கேயோ வைத்து தொலைந்து விட்டதா?
தொலைந்து போன பின் அதிக பதற்றம் கொள்ளாமல் நிதானமாக செயல்பட்டு அதனை கண்டுபிடிக்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். இங்கு நீங்கள் தொலைத்த ஸ்மார்ட்போனினை கூகுள் உதவியுடன் எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

Continue reading →

ஆப்பிள் போன்களுக்கான ஐ.ஓ.எஸ். 10

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.10, சென்ற செப்டம்பர் 13 அன்று, மிகப் பெரிய அளவிலான மாற்றங்களுடன் வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு சென்ற ஜூன் மாதம், ஆப்பிள் சிஸ்டங்களுக்கான டெவலப்பர்கள் மாநாட்டில் வெளியானது. இந்தப் புதிய பதிப்பு பல புதிய வசதிக

Continue reading →

மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்

ஒரு சில விநாடிகள் ஒதுக்கி, ஒரு நாளில் எத்தனை மணி நேரம் நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறீர்கள் என எண்ணிப் பாருங்கள். சராசரியாக, ஒருவர் குறைந்தது நான்கு மணி நேரம், ஒரு நாளில் பயன்படுத்துவதாகக் கணக்கிட்டுள்ளனர். நண்பர்களை அழைத்துப் பேச, வரும் அழைப்புகளை ஏற்றுப் பேச, உள்ளூர் கடையில் பொருட்கள் வாங்க, அது இலவசமாகத் தரும் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திட, நமக்கான பொருட்கள் வாங்கிட எனப் பல்வேறு பணிகளை முடிக்க, ஸ்மார்ட் போன்கள் பயன்படுகின்றன. படங்களை எடுக்க, விடியோ படங்களைத்

Continue reading →

ஆண்ட்ராய்டு போனில் அழிந்து போன காண்டாக்ட்களை மீட்பது எப்படி.??

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு, நமக்கு பல்வேறு அம்சங்களை மிகவும் எளிமையாக வழங்கி வருவதே இதற்கு முக்கிய காரணமாக கூறலாம். Continue reading →

ஃபைனான்ஷியல் ஆப்ஸ்

எக்ஸ்பென்ஸ் மேனேஜர்!

பட்ஜெட்டை சரிவரக் கையாளவும், செலவுகள் கையைக் கடிக்காதபடி பார்த்துக்கொள்ளவும்தான் பலருக்கும் ஆலோசனை தேவைப்படுகிறது. எக்ஸ்பென்ஸ் மேனேஜர் என்ற செயலி இதை மிகவும் சிறப்பாகக் கையாள்கிறது. தினசரி, வாரம், மாதம், ஆண்டு என நம் பட்ஜெட்டை நமக்கு
ஏற்றவாறு பட்டியல் போட்டுப் பார்க்க இந்த ஆப்ஸ் பேருதவியாக இருக்கும்.

Continue reading →

ட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா? தவறா?

மொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் பயனுள்ள செயலி “ட்ரூ காலர்”. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிக அதிகம் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் பயன்படுத்தும் 20 கோடி பேரில், 13 கோடி பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்தி மொழி, ஒலிபெயர்ப்பு மற்றும் பிற மாநில மொழிகள் பயன்பாடுகள் இந்த செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால், இதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Continue reading →