Advertisements

Category Archives: வணிகம்

குழப்பும் சந்தையில் லாபம் பெறும் வழிகள்!

ங்கு முதலீட்டாளர்களுக்கு இது ஒரு கடினமான காலம். பங்குச் சந்தை இரண்டு நாள்கள் ஏறுவதும், இரண்டு நாள்கள் இறங்குவதுமாக போக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. சந்தையின் உச்சத்தின்போது முதலீடு செய்திருப்பவர்கள் பற்றி இப்போது கேட்கவே வேண்டாம். கண்முன்னே, தமது முதலீடுகளின் சந்தை மதிப்பு சடசடவென்று சரிவது முதலீட்டாளர்களிடையே பெரியதொரு மனச்சோர்வை ஏற்படுத்தும்.
 
இன்னும் எத்தனை புள்ளிகள் சரியுமோ என்கிற கவலை ஒருபக்கம், குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகளைப் புதிதாக வாங்கலாமா, வாங்கினால் இன்னும் நஷ்டம் அடைய வேண்டியிருக்குமா என்கிற அச்சத்துடன்கூடிய ஆர்வம் மறுபக்கம்.

இதுபோன்ற குழப்பமான தருணங்களில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வழிமுறை கள் என்ன என்று பார்ப்போம்.

முதலீடு செய்யத் தொடங்குவோம்

Continue reading →

Advertisements

மன்த்லி டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி – எதைத் தேர்வு செய்தால் லாபம்?

வ்வொரு மாதமும் வருமானம் தரும் மன்த்லி டிவிடெண்ட் திட்டங்களில் (Monthly dividend plans), ஓய்வுபெற்ற முதலீட்டாளர்கள் பலரும் தங்களது ஓய்வுக்காலப் பணத்தை முதலீடு செய்து டிவிடெண்ட் வருமானம் பெற்றுவந்தார்கள். இந்தத் திட்டத்தில் ஒரு பெரும் தொகையை இந்த வகை திட்டத்தில் முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் டிவிடெண்ட் வருமானம்மூலம் மாதாந்திரச் செலவுக்கு வருமானம் பெற்று வந்தார்கள்.

சிறிது காலம் முன்பு வரை, இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் கிடைக்கும் வருமானத்திற்கு எந்த வரியும் கிடையாது. இப்போது, இதற்கும் வரி கட்டவேண்டிய நிலைமை வந்துவிட்டது.

எஸ்.டபிள்யூ.பி (SWP – Systematic Withdrawal Plan)

Continue reading →

அவசியம் பின்பற்ற வேண்டிய முதலீட்டு பிரமீடு!

நாம் பல்வேறு தேவைகளுக்கு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த முதலீடுகளை எப்படி அமைக்க வேண்டும் என்பதை முதலீட்டு பிரமீடு (Investment Pyramid) விளக்குகிறது.

Continue reading →

வளைக்கும் மோசடிகள்… தப்புவது எப்படி?

செபி மற்றும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது மக்களை எச்சரித்து வந்தாலும்,  பொதுமக்கள் ஏமாறுவது தொடர்கதையாக உள்ளது. விஜய் மல்லையாக்களும், நீரவ் மோடிகளும் வங்கிகளைக் குறிவைத்து மொத்தமாகப் பணத்தை வாரிச் சென்றதைப் பார்த்தோம். இந்த வகை மோசடிகளைத் தவிர்க்க நாம் செய்யக்கூடியது ஏதுமில்லை.

சீனியர் சிட்டிசன்களை குறி வைத்து…

Continue reading →

கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றால் என்ன?

கடந்த வாரம் சில டிவியில் எஸ்பி்ஐ வங்கி மற்றும் பிற முன்னணி வங்கிகளுக்கும் இடையே கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டதாகப் பரபரப்பான செய்திகள் உலா வந்தன. வங்கிகளுக்கு இடையே கடன் ஒப்பந்தங்களா? அப்படி என்றால் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். இது தொடர்பான விளக்கங்களை இங்குக் காண்போம்.
Continue reading →

ஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா?

மீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், பெயின்ட்டுகள், வார்னிஷ்கள் உள்பட 88 பொருள்களின் ஜி.எஸ்.டி வரியானது குறைக்கப் பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு ஜூலை 27 முதலே நடைமுறைக்கு வருகிறது. 

18 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டவை

Continue reading →

உலகை உலுக்கும் டிரேட் வார்… ஜெயிக்கப்போவது யார்?

கடந்த 22-ம் தேதி, உலகையே உலுக்குகிற மாதிரி சீனாவின்மீது இறக்குமதி வரியை விதித்து வர்த்தகப் போரை அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள்மீது அமெரிக்கா 50 பில்லியன் டாலர் அளவுக்குப் புதிய வரி விதித்ததைக் கண்டு ஆடிப்போனது சீனா. பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் பொருள்கள் மீது 3 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதித்தது சீன அரசாங்கம்.

  காப்புரிமைத் திருட்டு

Continue reading →

குறுகிய கால முதலீடு… எது பெஸ்ட்?

ட்டி விகிதம் 2015-ல் 9 சதவிகிதமாக இருந்தது; இன்று படிப்படியாகக் குறைந்து 7 சதவிகிதமாக இருக்கிறது. இது பாதுகாப்பான முதலீட்டை நாடிச்செல்பவர்களுக்கும் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கும் ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், குறுகிய கால முதலீடுகளான ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்ட் திட்டங்களுக்குப் பதிலாக ‘மாற்று முதலீட்டுத் திட்டங்களை’ பரிசீலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.   

குறுகிய காலத்தில் பங்குச் சந்தை தந்த லாபம்

Continue reading →

எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

யூனிஃபை ஜி.மாறன் எழுதும் சிறப்பு கட்டுரை

ஜி.மாறன் செயல் இயக்குநர், யுனிஃபை கேப்பிட்டல் (Unifi Capital).

2018 இதோ வந்தேவிட்டது. ‘இந்த ஆண்டில் நம் அஸெட் அலோகேஷன் எப்படி இருக்க வேண்டும்?’ என்கிற  கேள்வி எல்லா  முதலீட்டாளர்களின் மனதிலும் இருக்கும். நமது செல்வத்தைப் பெருக்க உதவும் அந்த அஸெட் அலோகேஷன் வழிமுறைகளைப் பார்க்கும்முன், சில கேள்விகள்…  

1. பங்குச் சந்தை நன்கு ஏற்றம் கண்டிருக்கும் இந்தச் சமயத்தில் நம்  முதலீட்டை அதிகரிக்கலாமா?

Continue reading →

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாற்றம்… யாருக்கு நன்மை?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிக மாற்றங்களை, சீரமைப்பு என்கிற பெயரில் கொண்டுவர முடிவெடுத் திருக்கிறது பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்  கட்டுப்பாட்டு வாரியமான செபி. அது என்ன சீரமைப்பு என்பதைத் தெரிந்துகொள்ளும்முன், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தற்போதைய நிலை என்னவென்று பார்த்து விடுவோம்.  

குழப்பும் திட்டங்கள்

Continue reading →