Advertisements

Category Archives: Uncategorized

மக்களவை தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாகும்: தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக 5 மணிநேரம் வரை தாமதமாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  நாடு முழுவதும் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதிவரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் வேலூர் தொகுதி தவிர 542 மக்களவை தொகுதிகளிலும், தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகளை என்னும் பணி நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 43 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கும் நிலையில், அந்த மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பதற்றமான மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை மையங்களில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் ஆகியோர் அமர்ந்து ஓட்டுக்களை எண்ணுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்களிடம் மின்னணு இயந்திரங்களை காட்டிய பின்னரே ஒட்டு என்னும் பணி நடைபெறும். காலை 9 மணி அளவில் முதல் சுற்று நிலவரம் தெரியவரும் என்றும், மதியம் 1 மணி அளவில் எந்த கட்சி பெரும்பான்மை வாக்குகளில் முன்னிலையில் உள்ளது என்பது தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் பணியும் நடைபெறும் என்பதால், 10% அளவுக்கு சரிபார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இறுதி முடிவுகள் வெளியாவதில் 5 மணிநேரம் வரை தாமதம் ஏற்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisements

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

இட்லி… அதானே எல்லாம்..!’- உலகம் கொண்டாடும் இட்லி தினம்

சர்வதேச இட்லி தினமான இன்று, பலரும் இட்லி குறித்தான தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இட்லி தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

<!–more–>

ரவா இட்லி, பொடி இட்லி, நெய் பொடி இட்லி, தட்டு இட்லி, தவா இட்லி, சாம்பார் இட்லி, மதுரை இட்லி, குஷ்பூ இட்லி, மல்லிபூ இட்லி என இட்லியைத் தான் இந்த உலகம் எப்படிக் கொண்டாடித் திளைக்கிறது? மார்ச் 30-ம் தேதி உலக இட்லி தினமாகக் கொண்டாடப்படுவதை இந்தியர்கள் ட்விட்டரில் புகழ்ந்து வருகின்றனர்.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பான்மையான கால நேரங்களை இட்லிகள் தான் அலங்கரித்து வருகின்றன. காலை உணவுகளின் ராஜாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இட்லியின் பெருமைக்குக் கூடுதல் கவுரவம் சேர்க்கும் வகையில் இந்நாள் இட்லி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த இட்லி ஹோட்டல் நிறுவனரான இனியவன் என்பவரது முயற்சியால் உலக இட்லி தினம் கடந்த 30 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் ஸ்விகி நிறுவனம் நடத்திய ஆய்வில் இட்லியை ஆர்டர் செய்து சாப்பிடுவதில் பெங்களூரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது. முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் ஹைதராபாத் மற்றும் சென்னை நகரங்கள் உள்ளன.

சர்வதேச அளவில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ, லண்டன் மற்றும் நியூ ஜெர்ஸி ஆகிய நகரங்கள் இட்லி சாப்பிடுவதில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

சாட்டிலைட்டை அழிக்கும் ஏவுகணை: மோடி பெருமிதம்

விண்ணில், செயற்கைகோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

Continue reading →

Concert-Press news

டிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்

தேனி லோக்சபா தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

Continue reading →

லாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு

லாப உச்சவரம்பு நிர்ணயம் காரணமாக 42 புற்றுநோய் மருந்துகளை உள்ளடக்கிய 390 பிராண்ட் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களுக்கு
Continue reading →

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி ?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலமான வாக்களிக்கலாம் என்று பரவிய தகவல்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
Continue reading →

நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 சீட்? ஒரு ராஜ்யசபா சீட் தர பாஜ சம்மதம்,.. விஜயகாந்த் இன்று அறிவிக்கிறார்

நீண்ட இழுபறிக்கு பிறகு மக்களவை தேர்தலில் 5 சீட், ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Continue reading →

மகா சிவராத்திரி

04.03.2019-மகா சிவராத்திரி

பிரம்மாவும் மகாவிஷ்ணுவும், சிவபெருமானின் முடி-அடி தேடிய வரலாறு நமக்குத் தெரியும். இது நிகழ்ந்தது, மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினத்தன்று. அந்த நாளே சிவராத்திரி. இதை ஸ்காந்த மஹாபுராணம் கூறுகிறது (மாக க்ருஷ்ண சதுர்தஸ்யாம்  அனலாசல மத்புதம்…).

மற்றோர் அற்புதமான கதையும் உண்டு.

பிரளய காலம் முடிந்த அன்றைய இரவு நேரத்தில், அம்பிகை உமா தேவி நான்கு ஜாமங்களிலும் சிவ பெருமானை ஆகம முறைப்படி பூஜை செய்தார். மறுநாள் பொழுது விடிந்தது. சிவபெருமானை வணங்கிய அம்பிகை, ‘‘ஸ்வாமி! தங்களை நான் பூஜித்த இந்த இரவை, எல்லோரும் சிவராத்திரி என உங்கள் பெயரால் அழைக்கவேண்டும். அத்துடன் சிவராத்திரி அன்று சூரிய அஸ்தமனம் முதல், மறு நாள் காலை சூரிய உதயம் வரை, உங்களை பூஜை செய்பவர்களுக்கு சர்வ மங்கலங்களுடன் முடிவில் முக்தியையும் தாங்கள் அருள வேண்டும்’’ என வேண்டினார். பரமசிவனும், ‘‘அப்படியே’’ என்று அருள் புரிந்தார். அம்பிகை பூஜை செய்த அந்த நாளே (மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி) மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.

நியதிப்படி பகல் பொழுது சிவபெருமானுக்கும், இரவுப் பொழுது அம்பிகைக்கும் உரியது. அம்பிகை, தனக்குரிய இரவுப் பொழுதை சிவபெருமான் பெயரால் வழங்கச் செய்தார் என்கின்றன ஞான நூல்கள்.


புண்ணியங்கள் அருளும் லிங்கோத்பவ காலம்!

சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோத்பவ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும்.

சிவராத்திரி தோன்றிய தலம் திருவண்ணாமலை. அதுபோல், சிவபெருமான் லிங்க வடிவமாகத் தோன்றிய காலம் – லிங்கோற்பவ காலம் எனப்படுகிறது. சிவலிங்கம் பற்றிய உண்மையான விளக்கம், ஞான நூல்களில் தெளிவாக உள்ளது.

சம்ஸ்கிருத மொழியிலுள்ள ஸ்காந்த புராணத்தில் பார்வதி திருக்கல்யாணத்தை விவரிக்கும் பகுதியில் லிங்கத்தைப் பற்றிய மேன்மையான பல தகவல்கள் இருக்கின்றன.

தமிழில் திருமந்திரத்தில் சிவலிங்கத்தைப் பற்றிய உண்மை தத்துவங்களைத் தெளிவாகச் சொல்லியிருக் கிறார் திருமூலர்.

லிங்க வழிபாட்டில் மூன்று வகை உண்டு. உருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு, அருவ வழிபாடு. இவற்றில் நாம் செய்து வருவது உருவ வழிபாடு.

அருவ வழிபாடு என்பது, உருவமற்ற பரம்பொருளைக் குறிக்கும். இதையே வேறுவிதமாக பார்த்தால், ‘பார்க்கும் அனைத்தையும் பரம்பொருளாகவே பார்ப்பது’ என்பதே பொருள். ‘பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே!’ என்று தாயுமான ஸ்வாமிகள் சொல்கிறாரே, அந்த நிலை. மகான்கள் பலர் சொல்வதும் வேதங்கள் சொல்வதும் இந்த வழிபாட்டைத்தான்.

உருவ வழிபாட்டுக்கும், உருவமில்லாத அருவ வழிபாட்டுக்கும் நடுவில் இருப்பது ‘அருஉருவ வழிபாடு’. உருவம் இருக்கும். ஆனால், கை-கால் முதலான அவயவங்களுடன் சேர்ந்த உருவத்தைப் போல இருக்காது; அருவமாக இருக்கும். இந்த அருஉருவ வழிபாட்டைக் குறிப்பதுதான் சிவலிங்க வழிபாடு!

சிவலிங்கத்தைத் தாங்கும் பீடத்துக்கு ‘ஆவுடையார்’ என்று பெயர். இது சக்தியின் வடிவான பூமியைக் குறிக்கும். சிவலிங்கம் ஆகாயத்தைக் குறிக்கும். இதைக் கொஞ்சம் ஆராயலாம்.

ஆகாயம் என்பது கவிழ்த்து வைத்த மரக்கால் (தானியங்களை அளக்கப் பயன்படும்) போல இருக்கிறது. ஆகாயத்தைப் பார்க்க முடிகிறதே தவிர, அதன் வடிவம் புலப்படுவதில்லை. உருவமாகத் தெரிந்தும் உருவமில்லாமல் இருக்கும். இந்த ஆகாயத்தைத்தான் சிவலிங்கம் குறிக்கிறது.

அசையும் பொருள்- அசையாப் பொருள் என (நாம் உட்பட) அனைத்துமே, ஆகாயம் எனும் அந்த ஒரே கூரையின் கீழேதான் இருக்கின்றன.

சிவலிங்க வடிவமாக இருக்கும் அந்த ஆகாயத்தை ‘அண்ட லிங்கம்’ என்று மகான்கள் சிறப்பித்துச் சொல்வார்கள்.

கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமென்றால், ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வைத்துக்கொள்வோம். அதுபோல ஆகாய லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதற்காகக் கடலில் நிறைய நீர் உள்ளது.

ஆகாய லிங்கம் மிகப் பெரியது அல்லவா? அதனால்தான் அதற்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தமும் அதிக அளவில் உள்ளது.

அபிஷேகம் முடிந்துவிட்டது. அடுத்து அர்ச்சனை அல்லது பூக்களைச் சார்த்தவேண்டும். ஆகாய லிங்கத்துக்கு எந்தப் பூக்களைச் சார்த்துவது?

ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்தான், ஆகாய லிங்கத்துக்குப் பூமாலை.

இவ்வளவு பார்த்த பிறகும் ஒரு சந்தேகம் வருகிறது. கோயில்களில் இருக்கும் ஸ்வாமிக்கு, ஏதாவது ஒரு முறையில் எப்படியாவது ஆடை சார்த்துகிறோம். மிகவும் உயரமான ஆஞ்சநேய வடிவங்களுக்கு எல்லாம் ஏணி வைத்தாவது ஆடை சார்த்துவதைப் பார்க்கிறோம். ஆனால், இந்த ஆகாய லிங்கத்துக்கு எப்படி அல்லது எதை ஆடையாகச் சார்த்துவது?

அதியற்புதமான ஆகாய லிங்கத்துக் குத் திசைகளே ஆடையாக உள்ளனவாம். இதுதான் சிவலிங்கத்தின் உண்மையான விளக்கம். இதை யாரோ, பக்குவப்படாதவர் சொல்லவில்லை. சிவபெருமானை நேருக்கு நேர் தரிசித்த சித்தபுருஷ ரான திருமூலர் சொன்ன தகவல்.

இவர் 63 நாயன்மார்களில் ஒருவராக விளங்குகிற மகான். இவரது வாழ்க்கை வரலாற்றைப் பெரிய புராணம் விரிவாகப் பேசுகிறது.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டில், பத்தாவது திருமுறையாக இருக்கும் ‘திருமந்திரம்’ எனும் மூவாயிரம் பாடல்கள் கொண்ட ஞானப் பொக்கிஷத்தில், சிவலிங்கத்தின் உண்மை விளக்கத்தைத் திருமூலர் அருளியிருக்கிறார்.

இதோ அவர் சொல்லும் பாடல்:

தரை உற்ற சக்தி தனி லிங்கம் விண்ணாம்
திரை பொரு நீரது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை
கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே

– திருமந்திரம்

இதன்படி நாம் அனைவருமே ஒரே கூரையின் கீழ் இருக்கிறோம். வேறுபாடும் வெறுப்புமின்றி இருக்க வேண்டியது நமது பொறுப்பு; கடமையும்கூட.

மகாசிவராத்திரி புண்ணிய தினத்தில், மேன்மை மிகுந்த லிங்கோத்பவ புண்ணிய காலத்தில் இந்த அற்புதமான தத்துவ விளக்கத்தை மனதில் நிறைத்து, ஆதியந்தம் இல்லாத இறைவனை நம் ஈசனை முறைப்படி பூஜித்து, அந்தத் தென்னாடுடையானின் தண்ணருளைக் குறைவின்றி பெற்று மகிழ்வோம்.


நான்கு கால பூஜை


விரத பலன்கள்

எட்டுணையும் உளத்து அன்பிலரேனும்
உளரேனும் இந்நாள் எம்மை
கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர்
நற்கதி அடைவர்

– என்று சிவனார் சொன்னதாக சிவராத்திரி

புராணத்தைக் கூறும் `வரத பண்டிதம்’ எனும் நூல் தெரிவிக்கிறது. எள்ளளவும் அன்பு இல்லாதவர்களோ, அன்பு மிகுந்தவர்களோ…சிவராத்திரி திருநாளில் சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர்  எல்லோருக்கும் நற்கதி கிடைக்கும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.


அண்டமும் பிண்டமும்!

`அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில்’ என்பது ஆன்றோர் வழக்கு மொழி. அதாவது பிரபஞ்சம் எங்கும் நிரம்பி நிற்கும் தெய்வ ஆற்றல் நம் உடலுக்குள்ளும் தேங்கி நின்று செயலாற்றுகிறது என்பார்கள்.

குறிப்பாக பௌர்ணமி, அமாவாசை போன்ற நாள்களில் உயிர் மற்றும் தெய்வ ஆற்றல் தொடர்புகள் அதிகமாகின்றன என்கின்றன ஞான நூல்கள். அதேபோல், ஒவ்வொரு சிவராத்திரி நாளின் இரவிலும் நம் உடலில் ஜீவ ஆற்றல் எழும்பி பரம ஆற்றலோடு இணையுமாம். சிவராத்திரி இரவில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணைய விரும்பும் பொழுதில் உறங்கக்கூடாது என்பதாலேயே, நம் முன்னோர்கள் சிவராத்திரி நாளில் உறங்கக் கூடாது என்றும், அந்நாள் இரவு முழுக்க வழிபாட்டில் இருக்க வேண்டும் என்றும் விதித்தார்கள்.

நம் முதுகுத் தண்டு மண்ணில் கிடையாக இருந்தால் ஜீவசக்தி எழும்பாது என்பதால், அன்று உறங்காமல் விழித்திருந்து வழிபாடு செய்யவேண்டும் என்ற முறையைக் கொண்டு வந்தார்கள். எனவே சிவராத்திரி நாளில் இரவு முழுக்க விழித்திருந்து சிவ பூஜை செய்து நம் உடலையும் மனதையும் செம்மையாக்கி வாழ்வாங்கு வாழ்வோம்.


நான்கு வகை சிவராத்திரிகள்

மாக சிவராத்திரி: மாக சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு ‘வருஷ சிவராத்திரி’ என்ற பெயரும் உண்டு.

யோக சிவராத்திரி: யோக சிவராத்திரியில் நான்கு வகை உண்டு. அதன் விவரம்:

1. திங்கள்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல்- இரவு சேர்ந்த 60 நாழிகை (24 மணி)யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி.

2. திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் அன்று இரவு 4 ஜாமமும் (12 மணி நேரம்) தேய்பிறை சதுர்த்தசி இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரி.

3. திங்கள்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணியில் இருந்து 6 மணி வரை உள்ள நேரத்தில்), அமாவாசை அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தாலும் அன்று யோக சிவராத்திரி.

4. திங்கள்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தால், அன்றும் யோக சிவராத்திரியே.

இந்த நான்கு ‘யோக’ சிவராத்திரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரியன்று விரதம் இருந்தாலும் அதற்கு ‘மூன்று கோடி சிவராத்திரி’ விரதம் இருந்த பலன் கிடைக்குமாம்.

நித்திய சிவராத்திரி: வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை-வளர்பிறைகளின் சதுர்த்தசி திதி இடம்பெறும் இருபத்துநான்கு நாள்களும் `நித்திய சிவராத்திரி’ ஆகும்.

பட்ச சிவராத்திரி: தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினாலாம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.

மாத சிவராத்திரி:  பெரும்பாலான சிவ ராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்தசியை அனுசரித்து வரும். ஆனால் இந்த மாத சிவராத்திரி, மாதத்தின் மற்ற திதிகளிலும் வருவதுண்டு.


மகா சிவராத்திரி  விரத நியதிகள்!

சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்கவேண்டும். மறு நாள் சிவராத்திரி தினத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்த பின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.

வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யவேண்டும்.

அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருள்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவன் கோயிலில் கொண்டுபோய்க் கொடுத்து, சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர அனுஷ்டானங்களை முடித்து விட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் பரமேஸ்வரனை (சிவலிங்கத்தை) வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்.

இரவு முழுக்கத் தூங்காமல் இவ்வாறு பூஜை செய்து மறுநாள் அதிகாலையில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சி கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடிக்க வேண்டும்.

அதன் பின் நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசி பெற்று, ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன் பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்யவேண்டும்.

சிவராத்திரியன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், கோயில்களில் நடக்கும் பூஜையில் கலந்துகொள்ளலாம்.

சிவராத்திரி (வைகுண்ட ஏகாதசி தினத்திலும்கூட) அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு. தேவாரம், திருவாசகம், சிவ புராணம் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கவோ வேண்டும். சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசங்கள், கோயில்களில் நடைபெறும். அவற்றைச் செவிமடுப்பது, மிகவும் விசேஷம்!