Advertisements

Category Archives: Uncategorized

Happy Independence Day

Advertisements

யூனியன் பிரதேசம் ஏன்; தீவிரவாதம் தொட்டுக்கூட பார்க்க முடியாது!’ – மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ModiModi ( ANI )

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததுடன் அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்தது மத்திய அரசு. இதுதொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

Continue reading →

மைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை!

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகளில், பெரும்பாலான உணவுகள், பதப்படுத்தப்பட்டு, தயார் நிலையில் கிடைக்கும். வீட்டிலும், குறிப்பிட்ட நாளைக்கு ஒரு முறை, சமைத்து, பிரிஜில் வைத்து விடுவர்; நினைத்த நேரத்தில், சாப்பிடுவர். அவர்களின் இந்த உணவுப் பழக்கத்தால், அதிக உடல் எடையுடன் குழந்தைகள் இருப்பர். Continue reading →

இரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..!

அழுவது மன ஆறுதல் தரும் என்பதுதான் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆய்வில் வினோதமாக உடல் எடைக் குறையும் என்கிறார்கள்.

என்னது உடல் எடை குறையுமா…?

Continue reading →

முதலீட்டில் மனத் தடைகளை உடையுங்கள்!

ந்தியாவில் வேலை பார்க்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள், வங்கிச் சேமிப்பு, ஃபிக்ஸட் டெபாசிட், தங்க நகைகள் என்று சில வழிகளில் பணத்தைச் சேமிக்கிறார்கள். ஆனாலும், எதிர்காலச் செலவுகளுக்குத் தேவைப்படும் பணத்தினை யாரையும் எதிர்பாராமல் பெறும் வகையில், நீண்டகால முதலீடுகளைச்  செய்திருக்கிறார்களா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பெரும்பான்மையானவர்களின் பதிலாக இருக்கிறது. இதில் மாத வருமானம் பெறுபவர்கள் மட்டுமல்ல, சொந்தத் தொழில் செய்பவர்களும் அடங்குவர்.

எதிர்காலப் பணத் தேவைகளுக்காக முதலீட்டினை இவர்கள் நாடாமல் இருப்பதற்கும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இவர்கள் எந்தவிதமான நாட்டத்தையும் காட்டாமலே இருப்பதற்கும் காரணம் என்ன என்று கவனித்தால்,  இவர்களிடம் போதிய பணம் இல்லாததோ அல்லது இப்படிப்பட்ட முதலீட்டு முறையை அறியாமல் இருப்பதோ மட்டுமல்ல. இவற்றையும் தாண்டி, மனம் சம்பந்தப்பட்ட சில தடைகள் இருப்பதே காரணம். முதலீட்டின் மீதான மனத் தடைகளையும், அதை உடைக்கும் வழிகளையும் பார்ப்போம்.

தடை ஒன்று : பயமும், தயக்கமும்

Continue reading →

மிரட்டும் தண்ணீர்ப் பஞ்சம்… காலியாகும் அப்பார்ட்மென்ட்கள்!’ – சிக்கலில் சென்னை OMR சாலை

தண்ணீர் இல்லை என்கிற முழக்கங்களும், அதற்கான போராட்டங்களும் இந்தியா முழுவதுமே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதைக் காரணமாக வைத்து காசு பார்க்கிற சம்பவங்களும் நிகழாமல் இல்லை. சாலையில் தென்படுகிற லாரிகளில் பாதிக்கு மேல் தண்ணீர் டேங்கர் லாரிகளாகவே இருக்கின்றன. மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு லாரி மீண்டும் மெட்ரோ நிலையங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் லாரிகள் செல்ல முடியாத குறுகிய தெருக்களுக்கு ஆட்டோக்களில் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது. நிமிடத்திற்கு நான்கு லாரிகள் மெட்ரோ நிலையங்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு கிளம்புகின்றன. லாரிகள் என்று இருந்த வணிகம் தண்ணீர் ஆட்டோக்கள், தண்ணீர் வேன்கள் என விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

Continue reading →

மக்களவை தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாகும்: தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக 5 மணிநேரம் வரை தாமதமாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  நாடு முழுவதும் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதிவரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் வேலூர் தொகுதி தவிர 542 மக்களவை தொகுதிகளிலும், தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகளை என்னும் பணி நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 43 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கும் நிலையில், அந்த மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பதற்றமான மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை மையங்களில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் ஆகியோர் அமர்ந்து ஓட்டுக்களை எண்ணுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்களிடம் மின்னணு இயந்திரங்களை காட்டிய பின்னரே ஒட்டு என்னும் பணி நடைபெறும். காலை 9 மணி அளவில் முதல் சுற்று நிலவரம் தெரியவரும் என்றும், மதியம் 1 மணி அளவில் எந்த கட்சி பெரும்பான்மை வாக்குகளில் முன்னிலையில் உள்ளது என்பது தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் பணியும் நடைபெறும் என்பதால், 10% அளவுக்கு சரிபார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இறுதி முடிவுகள் வெளியாவதில் 5 மணிநேரம் வரை தாமதம் ஏற்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

இட்லி… அதானே எல்லாம்..!’- உலகம் கொண்டாடும் இட்லி தினம்

சர்வதேச இட்லி தினமான இன்று, பலரும் இட்லி குறித்தான தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இட்லி தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

<!–more–>

ரவா இட்லி, பொடி இட்லி, நெய் பொடி இட்லி, தட்டு இட்லி, தவா இட்லி, சாம்பார் இட்லி, மதுரை இட்லி, குஷ்பூ இட்லி, மல்லிபூ இட்லி என இட்லியைத் தான் இந்த உலகம் எப்படிக் கொண்டாடித் திளைக்கிறது? மார்ச் 30-ம் தேதி உலக இட்லி தினமாகக் கொண்டாடப்படுவதை இந்தியர்கள் ட்விட்டரில் புகழ்ந்து வருகின்றனர்.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பான்மையான கால நேரங்களை இட்லிகள் தான் அலங்கரித்து வருகின்றன. காலை உணவுகளின் ராஜாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இட்லியின் பெருமைக்குக் கூடுதல் கவுரவம் சேர்க்கும் வகையில் இந்நாள் இட்லி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த இட்லி ஹோட்டல் நிறுவனரான இனியவன் என்பவரது முயற்சியால் உலக இட்லி தினம் கடந்த 30 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் ஸ்விகி நிறுவனம் நடத்திய ஆய்வில் இட்லியை ஆர்டர் செய்து சாப்பிடுவதில் பெங்களூரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது. முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் ஹைதராபாத் மற்றும் சென்னை நகரங்கள் உள்ளன.

சர்வதேச அளவில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ, லண்டன் மற்றும் நியூ ஜெர்ஸி ஆகிய நகரங்கள் இட்லி சாப்பிடுவதில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

சாட்டிலைட்டை அழிக்கும் ஏவுகணை: மோடி பெருமிதம்

விண்ணில், செயற்கைகோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

Continue reading →