அன்றாடம் வெல்லம் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்…?
வெல்லம், எடையைக் குறைக்க உதவும். இதில் உள்ள பொட்டாசியம், உடலில் நீர் தங்குவதைக் குறைத்து உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க உதவுகிறது.
<!–more–>
சளித்தொல்லை, இருமலால் அவதிப்படுபவர்கள் வெல்லத்தை வெந்நீரில் அல்லது டீயில் கரைத்து அருந்தலாம். வெல்லம் உடலின் நொதிகளை ஊக்குவித்து, ஜீரண மண்டலத்தை மேம்படுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
வெல்லத்தில் உள்ள ஊட்டச்சத்துகள், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிக்கல்களையும், அதனால் ஏற்படும் வலிகளையும் சரிப்படுத்தும்.
வெல்லம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கவும், வயிற்றை குளிர்ச்சியாக வைக்கவும் உதவுவதால் பல்வேறு நோய்களைத் தடுத்து கோடைகாலத்துக்கு ஏற்ற உணவுப் பொருளாக உள்ளது.
ரத்தத்தில் தேவையான அளவு சிவப்பணுக்களைப் பராமரிக்க உதவுவதன் மூலம் வெல்லம் உடல் சோர்வடைவதைத் தடுக்கிறது. ஓரளவு வெல்லத்தை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது, ரத்தத்தைச் சுத்திகரிப்பு செய்ய உதவும்.
வெல்லத்தில் நிறைந்து காணப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் கனிமச் சத்துகளும் இயற்கை எதிர்வினைகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கின்றன. வெல்லம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.
வெல்லத்தில் நிறைந்திருக்கும் அதிக அளவு மக்னீசியம் உட்பொருள், தொண்டைப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. வெல்லத்தின் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் அமிலங்களின் அளவை சரிவரப் பராமரிக்க உதவுவதால் ரத்த அழுத்தம் சாதாரணமாக இருக்க வழிசெய்கிறது.
விழிச்சவாலைப் போக்கும் `ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள்’ – நம்பிக்கை அளிக்கும் புதிய தொழில்நுட்பம்!
பார்வை இழந்தவர்களுக்கும், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் சாதாரணமாகச் செய்யும் வேலைகளுக்கும்கூட பிறரை எதிர்பார்த்திருக்கும் சூழல் உள்ளது.
நம் அன்றாட வாழ்கைக்கு தேவையான சில அற்புதமான மருத்துவ குறிப்பு இதோ உங்களுக்காக!
நமது அன்றாட வாழ்க்கையில் வரும் சின்ன சின்ன நோய்களுக்கு தீர்வு தரக்கூடிய ஒரு சில இயற்கை மருத்துவகுறிப்புகளை இங்கே தெரிந்து கொள்வோம்.
‘கெத்து’ வலையில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை….! மீட்டெடுப்பது எப்படி?
முன்னெப்போதும் இருந்திராத வகையில் தமிழகம் முழுவதிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கின்றனர் பள்ளி மாணவர்கள்.
மாணவர்களின் இந்த செயல்களை பார்த்து தமிழக மக்கள் உண்மையில் மிரண்டு போயிருக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது. மாணவர்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, அவர்களை எவ்வாறு திருத்துவது; அவர்களை
நல்லெண்ணெயின் பயன்கள்!!
நல்லெண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளது. மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது.
வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.
துளசி வழிபாட்டை எப்போது செய்வதால் சிறந்த பலன்களை பெறமுடியும்…!!
ஒவ்வொருவர் வீட்டிலும் துளசிச் செடி இருப்பது அவசியம். பல மருத்துவ குணங்கள் நிரம்பிய துளசிச் செடி, மகாவிஷ்ணுவிற்கு பிடித்தமான ஒன்றாகும்.
துளசியில் இரண்டு வகை உண்டு. அதில் கொஞ்சம் கருப்பாக இருக்கும் துளசியை ‘கிருஷ்ண துளசி’ என்பார்கள். இதனை வீட்டில் இரட்டைச் செடியாக வளர்ப்பதே நல்லது. துளசியை வீட்டின் முன்பாகவோ, முற்றத்திலோதான் வளர்க்க வேண்டும்.
புதிய பிரைவசி பாலிசியை மாற்றிய கூகுள்.சர்ச் முடிவில் இருந்து தனிப்பட்ட டேட்டாவை அகற்ற முடியும்
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அதன் தனியுரிமைக் கொள்கையில் திருத்தம் செய்துள்ளது, இது இப்போது பயனர்கள் தங்கள் தனிப்பட்ட டேட்டாவை சர்ச் முடிவுகளிலிருந்து நீக்குவதற்கான விருப்பத்தை வழங்கும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தேன்+பட்டைப்பொடி!
எந்த நோயாக இருந்தாலும் அதற்கான மருந்துகளை நாம் எடுத்துக் கொள்கிறோம்.
இயற்கையே பலவித மருந்துகளை அள்ளி கொடுத்துள்ளது. அதில் முக்கியமானது தேன் மற்றும் லவங்கப்பட்டை. இதில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாம்…
அட்சய திருதியையில் 3 ராஜயோகங்கள்; இந்த நேரத்தில் ஷாப்பிங் செய்யுங்கள்

புத்தாண்டு பிறந்தவுடன் வரும் முக்கிய நல்ல நாட்களில் அட்சய திருதியையும் முக்கியமான ஒரு நாளாகும்.
அட்சய என்றால் அழியாதது. அட்சய திருதியை நாளில் செய்யும் செயல்கள் அழியாது அல்லது இந்த நாளில் செய்யும் செயல்கள் பல நன்மைகளைத் தரும் என்பது நம்பிக்கை. எனவே, இந்நாளில் புண்ணிய நதிகளில் நீராடுதல்,
சுவையான பலாப் பழம்: எப்படி பார்த்து வாங்குறது? எப்படி கட் பண்றது?
முக்கனிகளில் ஒன்று பலாப்பழம். அதிக இனிப்பு சுவை கொண்ட இந்த பழம் ஏராளமாக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
வைட்டமின்கள் ஏ மற்றும் சி, தயாமின், ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், துத்தநாகம் மற்றும் நியாசின் போன்றவற்றின் ஆற்றல் மிக்கது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அறியப்படுகிறது.